Published:Updated:

புள்ளைகளை மதுக்கடைக்கு அனுப்புறதா வளர்ச்சி?

புள்ளைகளை மதுக்கடைக்கு அனுப்புறதா வளர்ச்சி?
பிரீமியம் ஸ்டோரி
புள்ளைகளை மதுக்கடைக்கு அனுப்புறதா வளர்ச்சி?

சாதனை களஞ்சியம்செ.சல்மான், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

புள்ளைகளை மதுக்கடைக்கு அனுப்புறதா வளர்ச்சி?

சாதனை களஞ்சியம்செ.சல்மான், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

Published:Updated:
புள்ளைகளை மதுக்கடைக்கு அனுப்புறதா வளர்ச்சி?
பிரீமியம் ஸ்டோரி
புள்ளைகளை மதுக்கடைக்கு அனுப்புறதா வளர்ச்சி?

‘சுயஉதவிக் குழுக்களைச் சிறப்பா செயல்படுத்தனதுக்கு விருது தரப்போறாகனு தேன் என்னை டெல்லிக்குக் கூட்டிட்டுப் போனாக. அங்க பிரதமர் வாஜ்பாயி என்னைப் பாராட்டிப் பேசிட்டு, படக்குன்னு என் கால்ல விழுந்துட்டாக. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல. அதைத் தடுக்கிற சுதாரிப்புகூட இல்லாம விக்கிச்சுப் போயி நின்னுட்டேன். `நாம அப்புடி என்ன பண்ணிப்புட்டோம்’னுதான் இன்னிக்கும் என்னைய நானே கேட்டுக்கிட்டு ஓடிக்கிட்டு இருக்கேன்...”

கண்டாங்கிச் சேலை, அள்ளி முடிந்த கேசம் என நம் அப்பத்தாவின் சாயலில் இருக்கும் சின்னப்பிள்ளை, இன்று நாட்டின் பல பெருநகர கற்றோர் சபைகளில் சுயஉதவிக் குழுக்கள் குறித்த வகுப்புகள் எடுக்கிறார். கிராமப்புறப் பொருளாதாரம் எப்படி இருக்க வேண்டும், சுகாதார வசதிகள் பெறவும் இயற்கை வளத்தைக் காக்கவும் பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று வேற்றுமொழிப் பெண்களிடம் உரையாடுகிறார். ``இது
20 வருசத்துக்கு முன்ன ஆரம்பிச்ச பயண மப்பே...’’ என்று பேசுகிறார் தன் கதையை.

புள்ளைகளை மதுக்கடைக்கு அனுப்புறதா வளர்ச்சி?

கிராமப்புறப் பெண்கள் கந்துவட்டிக் கொடுமையிலிருந்து மீளவும், பொருளாதாரச் சுயசார்போடு வாழவும், அரசு அறிவிக்கும் பெண்களுக்கான திட்டங்கள் பற்றி அறியவும் உருவாக்கப்பட்டவையே மகளிர் சுயஉதவிக் குழுக்கள். கடந்த 20 ஆண்டுகளில் இவற்றின் வளர்ச்சி தமிழகத்தில் குறிப்பிடத்தக்க  மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 1999-ம் ஆண்டு தமிழகத்தில் முதல் சுயஉதவிக் குழு மதுரை மாவட்டம் பில்லுசேரியில் தொடங்கப்பட்டது. 14 பெண்களைக்கொண்ட அந்தக் குழுவுக்குத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சின்னப்பிள்ளை. இப்போது 14 மாநிலங்களில் லட்சக்கணக்கான பெண்களை உறுப்பினர் களாகக் கொண்டு செயல்பட்டு வரும் சுயஉதவிக் குழுக்களுக்குத் தலைவியாக இருக்கிறார் இவர்.

``பள்ளிக்கூடம் போனதில்ல. வெளியுலகம் எதுவும் தெரியாது. கள்ளந்திரி கிராமத்துல பொறந்து, பில்லுசேரிக்கு வாக்கப்பட்டு வந்தேன். கிராமங்கள்ல வயல் வேலை, கூலி வேலைனு பார்த்து உழைச்சாலும், கையில பத்துக் காசுகூட மிஞ்சாது. வீட்டு விசேஷம், திருவிழா, பண்டிகைக்கு வேற வழியில்லாம அநியாய வட்டிக்குக் கடன் வாங்குவோம். சம்பாதிக்கிற பணத்தையெல்லாம் கந்து வட்டிக்காரங்ககிட்ட கொடுத்துட்டே இருந்தோம். கடனால பல குடும்பங்கள் நடு தெருவுக்கு வந்துடுச்சு. இன்னொரு பக்கம் ஆம்பளைங்களோட பொறுப்பில்லாத்தனம், குடிப்பழக்கம் பல குடும்பங்களைச் சீரழிச்சது.

`இதுதான் நம்ம விதியா, இதுக்கெல்லாம் ஒரு வழி பிறக்காதா’னு எல்லா பொம்பளைகளும் மறுகிக் கிடந்தோம். 25 வருஷத்துக்கு முன்னாடி நான் மகளிர் மன்றத்துல இருந்தேன். அதுல உள்ளவுக எல்லோரும் கிராமத்துக்கு என்ன தேவைங்கிறதை கலெக்டர் ஆபீசுல மனு எழுதிக்கொடுத்தோம். அந்த நேரத்துலதேன் ‘தானம்’ அறக்கட்டளையிலயிருந்து எங்க கிராமத்துக்கு வந்தாக. ‘கந்துவட்டியில இருந்து தப்பிக்கணும்னா, சுயஉதவிக் குழுவை ஆரம்பிச்சு சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கணும். குழுவை ஆரம்பிச்சு நடத்துங்க, உங்க செயல்பாட்டைப் பார்த்து அரசாங்கம் உங்களுக்கு மிகக்குறைஞ்ச வட்டியில கடன் தரும். அதை உங்க குழுப் பெண்கள் தேவைகளுக்குப் பிரிச்சு எடுத்துக்கலாம். அது மட்டுமில்லாம அரசாங்கம் அறிவிக்கிற திட்டங்களெல்லாம் உடனடியா உங்க ஊருக்கு வரும். இதைப்போல பல குழுக்கள் ஆரம்பிச்சா, இன்னும் பல நன்மைகள் கெடைக்கும். அரசாங்க அதிகாரிங்ககிட்ட உங்க கோரிக்கைகளை வைக்கலாம். நீங்க விவரமா இருந்தீங்கன்னா, உங்க புள்ளகுட்டிங்க நல்லபடியா வளருவாங்க’னு சொன்னாக.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவுக சொன்னதுல நம்பிக்கை வெச்சு, நாங்க சுயஉதவிக் குழுவைத் தொடங்குனோம்’’ என்று சொல்லும் சின்னப்பிள்ளை, விசாகப்பட்டினம், டெல்லி, மும்பை எனச் சென்று சுயஉதவிக் குழுக்கள் பயிற்சிப் பட்டறைகளில் வகுப்புகள் எடுக்கிறார்.

புள்ளைகளை மதுக்கடைக்கு அனுப்புறதா வளர்ச்சி?

``பள்ளிக்கூடம் போகாத நான் பட்டப்படிப்பு படிச்ச புள்ளைக மத்தியில பேசுறேன். மொழிபெயர்த்துதான் சொல்லுறாகங்னாலும், இப்படி ஒரு கிராமத்துக்காரி மேடையில ஏறி பயமில்லாம பேசுற விதத்தைப் பார்த்தும், அதுகளுக்கும் நம்பிக்கை வருது. மனுசனா பொறந்தா மத்தவகளுக்கு உதவி செய்யணும். இந்த எண்ணத்தைச் செயல்படுத்தும் விதமா ‘களஞ்சியம்’ இயக்கம் அமைஞ்சது. அதன்மூலமா ஒவ்வோர் ஊராப்போயி, பெண்களை ஒருங்கிணைச்சு குழுக்களை ஏற்படுத்துனோம். இப்ப அது நல்லா வளர்ந்து பெண்கள் மத்தியில நம்பிக்கை கொடுத்திருக்கு. அடுத்தகட்டமா, ஆரோக்கியமான பெண்களை உருவாக்க வளரிளம் பெண்கள் நலன்ல அக்கறை காட்டுறோம். குழந்தைத் திருமணங்களைத் தடுக்குறது, பொம்பளைப் புள்ளைகளை நல்லா படிக்க வெச்சு முன்னேத்தறதுனு எங்க ‘களஞ்சிய’ இயக்க சுயஉதவிக் குழுக்கள் பாடுபட்டு வருது’’ என்று சொல்லும் சின்னப்பிள்ளைக்கு அவர் செய்த சமுதாய மாற்றத்துக்காக 1999-ல் ‘சக்தி புரஷ்கார்’ விருது டெல்லியில் வழங்கப்பட்டது. வாஜ்பாய் இவர் காலில் விழுந்து வணங்கியது இந்த நிகழ்வில்தான். அதன் மூலம்தான் நாடு முழுவதும் அறியப்பட்டார் சின்னப்பிள்ளை.

``எனக்குனு விருது கொடுத்தாலும், எல்லா பெண்ணுகளாலயும்தானே அது எனக்குக் கிடைச்சது? அதை நான் மட்டும் எடுத்துக்கிறது நியாமில்லைன்னு, எங்க ‘களஞ்சிய’ இயக்கத்துக்கே கொடுத்துட்டேன்’’ என்பவரின் கணவர் காலமாகிவிட, இரண்டு மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகளோடு வாழ்ந்துவருகிறார் இந்தப் பாட்டி.

``இப்போ இன்னொரு விஷயத்தை நோக்கி மனசு போயிக்கிட்டே இருக்கு. சாராயக்கடையை எல்லாம் மூட வைக்கணும். கடையை எங்க மாத்தி வெச்சாலும் தேடிப்போய் குடிக்கறாக. சின்னச் சின்னப் பயலுகளெல்லாம் குடிக்கறதைப் பார்க்கும்போது மனசை அறுக்குது. பொம்பளைங்க என்னதான் சாமர்த்தியமா சிக்கனம் பண்ணி, சேமிச்சுனு பொழைக்கப் பார்த்தாலும், ஆம்பளைங்க குடியால அம்புட்டும் அலங்கோலமா போயிடுது. அடுத்த தலைமுறை பொம்பளப்புள்ளைங்கள காலேசுக்கு அனுப்பிட்டு, ஆம்பளப் புள்ளைங்கள மதுக்கடைக்கு அனுப்பறது எப்படி வளர்ச்சியா இருக்கும்? முன்னாடியெல்லாம் குடிக்கிறது குத்தம்னு இருந்துச்சு. இப்போ குடிகாரன்னு சொல்லிக்கக்கூட யாரும் கூசாத அளவுக்குப் பணக்காரன், ஏழை, பெருசு, சிறுசுனு அம்புட்டும் குடிக்குதுக. மதுவை ஒழிக்க மக்கள் போராட்டம் நடத்துனாலும், அரசாங்கம் கையிலதேன் அது இருக்கு’’ என்ற சின்னப்பிள்ளை ரப்பர் செருப்பை மாட்டிக்கொண்டு மேலூரில் நடக்கவிருக்கும், ‘களஞ்சியம்’ அமைப்பின் கூட்டத்தில் பேசக் கிளம்பினார்.

சாமான்ய சாதனையாளர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism