Published:Updated:

64 வயதில் மாரத்தான்... அசத்தும் டாக்டர் சாந்தா!

64 வயதில் மாரத்தான்... அசத்தும் டாக்டர் சாந்தா!
பிரீமியம் ஸ்டோரி
64 வயதில் மாரத்தான்... அசத்தும் டாக்டர் சாந்தா!

இன்ஸ்பிரேஷன்சு.கவிதா, படம்: ஜெ.வேங்கடராஜ்

64 வயதில் மாரத்தான்... அசத்தும் டாக்டர் சாந்தா!

இன்ஸ்பிரேஷன்சு.கவிதா, படம்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
64 வயதில் மாரத்தான்... அசத்தும் டாக்டர் சாந்தா!
பிரீமியம் ஸ்டோரி
64 வயதில் மாரத்தான்... அசத்தும் டாக்டர் சாந்தா!

‘`என் மருத்துவமனையில் மாரத்தானில் நான் ஓடும் புகைப்படத்தை வைத்திருக்கிறேன். அதைப் பார்க்கும் குழந்தைகள் அதுகுறித்து என்னிடம் ஆச்சர்யமாகக் கேட்பதுண்டு. அப்போது மாரத்தான் என் வாழ்க்கையில் நடத்திய மலர்ச்சியையும், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், உடலின்மீது நாம் காட்டவேண்டிய  அக்கறையையும் குழந்தைகளுக்குப் புரியும் மொழியில் சொல்வேன்...”

64 வயதில் மாரத்தான்... அசத்தும் டாக்டர் சாந்தா!

புத்துணர்ச்சியுடன் தொடங்குகிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சாந்தா நாராயணன்.

64 வயதில் மாரத்தான் வீராங்கனையாகக் கலக்கிக்கொண்டிருக்கும் இளமையான சீனியர்.

“ ‘எதுக்காக இந்த வயசுல ஓடுறீங்க?’ என்று பலரும் என்னிடம் கேட்பார்கள். பதில் சிம்பிள்... எனக்காக, என் ஆரோக்கியத்துக்காக. பள்ளி, கல்லூரி காலத்தில் நானும் என் தங்கையும் 100-200 மீட்டர்,  லாங் ஜம்ப்,    ஹை ஜம்ப்,    ஹர்டில்ஸ், ரிலே ரேஸ் என்று கலக்கிய அத்லெட்கள். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 1970-ம் வருடம் எம்.பி.பி.எஸ் சேர்ந்தபோதும் விளையாட்டை நான் விடவில்லை. தொடர்ந்து DCH படிப்பை முடித்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

64 வயதில் மாரத்தான்... அசத்தும் டாக்டர் சாந்தா!

குழந்தைகள் நல மருத்துவராக பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்த பிறகுதான் திருமணம், குழந்தை, மருத்துவத் தொழில் என்று பரபரப்பாக நகர்ந்தது வாழ்க்கை. அதுவே விளையாட்டிடம் இருந்து என்னை விலக்கிவைத்துவிட்டது. சுமார் 40 வருடங்களாக விளையாட்டைக் கைவிட்ட நிலையில், திடீரென ஒருநாள் ஞானோதயம் வந்தது. தங்கை நடத்திவரும் ‘ரீபோக் ரன்னிங் ஸ்குவாட்’ ஃபிட்னெஸ் அமைப்பில் 2014-ம் ஆண்டு  இணைந்தேன். இதில்தான் ஸ்லோ ரன்னிங் மாரத்தான் பயிற்சியில் உடற்பயிற்சி, யோகா என்று உடலையும் மனதையும் மெருகேற்ற உதவும் அனைத்துப் பயிற்சிகளையும் கற்றேன்.

இங்கு  இருக்கும் உறுப்பினர்கள் அனைவருமே 30-40 வயதுகளில் இருப்பவர்கள். என்றாலும், 60 தாண்டிய என்னிடம் தோழியாகப் பழகி, ஊக்கமளித்தனர். மூன்று கிலோமீட்டரில் ஆரம்பித்து, நீண்ட தூர ஓட்டம் ஓரளவுக்கு என் வசமான பிறகு, பாண்டிச்சேரி ஆரோவில்லில் நடந்த மாரத்தான் போட்டியில் 10 கிலோமீட்டர் தூரம் ஓடினேன்.

இப்போது 20, 30, 40 என எல்லா வயதினருடனும் இணைந்து, அவர்களுக்கு ஈடுகொடுத்துப் பங்கேற்கிறேன். சென்னையில் நடந்த ‘ட்ரீம் ரன்னர்ஸ் ஹாஃப் மாரத்தான் - 2015’ போட்டியில் 1,250 பேர் பத்து கிலோமீட்டர் ஓடினார்கள். நான் அந்தத் தூரத்தை ஒரு மணி நேரம் பதினான்கு நிமிடங்களில் ஓடிக் கடந்தேன். இந்த வருடம்  ஆரோவில்லில் நடந்த மாரத்தான் போட்டியில் 10 கிலோமீட்டர் தூரத்தை 66 நிமிடங்களில் கடந்தேன். தினமும் சராசரியாக ஏழு கிலோமீட்டர் ஓடுகிறேன்’’ - அசரவைக்கிறார் டாக்டர் சாந்தா.

``மாரத்தான் ஓட ஆரம்பித்த பிறகு, 12 கிலோ வரை எடை குறைந்திருக்கிறேன். மாரத்தான் பயிற்சி எடுப்பதால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். மாரத்தான் ஓடுபவர்கள் மனதளவில் வலிமைமிக்கவர்களாக உணர்வார்கள். சதா குழப்பங்களோடு அலைபாயும் மனதை மாரத்தான் அமைதிப்படுத்தும். எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் கைவரப்பெறும். இந்த உலகத்தை நாம் பார்க்கிற பார்வை (outlook) மாறும். நட்புவட்டம் அதிகமாகும். இப்படித்தான் மாரத்தான் என் வாழ்க்கையை பாசிடிவ்வாக மாற்றியிருக்கிறது. என்னிடம் வரும் அம்மாக்கள், குழந்தைகள், மருத்துவப் பிரதிநிதிகள் பலரும், ‘மேம்... நாங்களும் இப்போ ரெகுலரா வாக்கிங் போறோம்’, ‘ஸ்கிப்பிங் செய்றோம்’, ‘நீச்சல் கிளாஸ்ல சேர்ந்திருக்கோம்’ என்று சொல்லும்போது,  அவர்களின் ஆரோக்கியம் மேம்பட நான்  இன்ஸ்பிரேஷனாக இருக்கிறேன் என்பதில் மிகப்பெரும் நிறைவு” என்ற டாக்டர் இறுதியாகச் சொன்னார்...

``கீப் ஃபிட்... உடலையும் மனதையும்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism