Published:Updated:

“உடம்பை ஃபிட்டா வெச்சிருந்தா சந்தோஷம் ஓடிவரும்!”

“உடம்பை ஃபிட்டா வெச்சிருந்தா சந்தோஷம் ஓடிவரும்!”
பிரீமியம் ஸ்டோரி
“உடம்பை ஃபிட்டா வெச்சிருந்தா சந்தோஷம் ஓடிவரும்!”

இமயம் தொட்ட வசந்தகுமாரியின் எனர்ஜி சீக்ரெட்! - ஆச்சர்ய மனுஷியாழ் ஸ்ரீதேவி, படங்கள்: எம்.விஜயகுமார்

“உடம்பை ஃபிட்டா வெச்சிருந்தா சந்தோஷம் ஓடிவரும்!”

இமயம் தொட்ட வசந்தகுமாரியின் எனர்ஜி சீக்ரெட்! - ஆச்சர்ய மனுஷியாழ் ஸ்ரீதேவி, படங்கள்: எம்.விஜயகுமார்

Published:Updated:
“உடம்பை ஃபிட்டா வெச்சிருந்தா சந்தோஷம் ஓடிவரும்!”
பிரீமியம் ஸ்டோரி
“உடம்பை ஃபிட்டா வெச்சிருந்தா சந்தோஷம் ஓடிவரும்!”

`` ‘நீங்க இந்த வயசுலயும்’னு யாராச்சும் குறிப்பிட்டுப் பேசும்போதுதான், எனக்கு என் வயசே ஞாபகத்துக்கு வரும்!’’ - கலகலவெனச் சிரிக்கும் வசந்தகுமாரியின் நாள் அதிகாலை 4.30 மணிக்குத் தொடங்குகிறது. 20 நிமிட யோகாவுக்குப் பிறகு, அவரது ஸ்கூட்டி ஏற்காடு மலை அடிவாரத்துக்குப் பறக்கிறது. செக்போஸ்ட் அருகே வாகனத்தை பார்க் செய்துவிட்டு, மலைப்பாதையில் மூன்று கிலோமீட்டர் வாக்கிங். அதிகாலைக் குளிரும் மலைக் காற்றும் உச்சி முதல் உள்ளங்கால் வரை பரவசப்படுத்துகிறது.

``வீடு திரும்பியதும் மருமகளுக்கு உதவுவேன். பேரன், பேத்தியைப் பள்ளிக்கு அனுப்பி, மகனுக்கும் மருமகளுக்கும் அலுவலகத்துக்கு மதிய உணவு கட்டிக்கொடுக்கிறதுனு 10 மணி வரை பம்பரமா இருப்பேன். அப்புறம் பேப்பர் படிச்சுட்டு, என்னோட வேலைகளை எல்லாம் முடிச்சா, 12 மணிக்கு மேல் கட்சிக் கூட்டங்கள் இருந்தா கலந்துக்குவேன். 2.30 மணியில் இருந்து 4 மணி வரை இடியே விழுந்தாலும் என் சேரை விட்டு எழ மாட்டேன். எனக்குப் பிடிச்ச புத்தகங்களை நான் படிக்கிற நேரம் அது” என்கிறார், 62 வயதை 26 வயதாக உணரும், சேலத்தைச் சேர்ந்த வசந்தகுமாரி ரத்தினவேலு.

“உடம்பை ஃபிட்டா வெச்சிருந்தா சந்தோஷம் ஓடிவரும்!”

``நான் பி.எஸ்ஸி, எம்.ஏ பட்டதாரி. காதல் திருமணம். கணவருக்குப் புள்ளியியல் துறையில் வேலை கிடைக்க, சென்னைக்குப் போனோம். பையனும் பொண்ணும் பிறந்தாங்க. நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில நிர்வாகக் குழு பொறுப்பு வகிச்சு எப்பவும் சமூகப் பிரச்னைகளுக்காக ஓடிட்டிருந்த காலம் அது. 1981-ம் வருஷம் மாஸ்கோ பெண்கள் மாநாட்டில் கலந்துகிட்டதும் நல்ல அனுபவம். சில காரணங்களுக்காகச் சென்னையிலிருந்து மீண்டும் சேலத்துக்கே குடி வந்தோம்’’ என்ற வசந்தகுமாரியின் வாழ்க்கையை ஒரு கோரச் சம்பவம் சிதைத்துப் போட்டது. மகள் செம்மலருக்குத் திருமணமான புதிதில், இரண்டு குடும்பத்தாரும் சுற்றுலா சென்றபோது  கார் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. ஆறு பேர் உயிரை வாங்கிய அந்த விபத்தில், மகளையும் மருமகனையும் இழந்துவிட்டார் வசந்தகுமாரி.

``அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பொதுவாழ்வில் இருந்து என்னை விடுவித்துக்கொண்டு தனிமைக்குள்ள போனேன். தினம் தினம் அழுதாலும் மனசு ஆறலை. என் மகனோட பிள்ளைங்கதான், அதிலிருந்து என்னைக் கொஞ்சம் கொஞ்சமா மீட்டுவந்தாங்க’’ என்று நெகிழ்கிறார் வசந்தகுமாரி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“உடம்பை ஃபிட்டா வெச்சிருந்தா சந்தோஷம் ஓடிவரும்!”

சில ஆண்டுகளுக்கு முன் ஒசூர் பகுதியில் கல்பனா சுமதி என்ற இளம்பெண் போலீ ஸாரால் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, இறந்துவிட்டதாக நினைத்துப் புதரில் வீசப்பட்டார். மாடு மேய்த்தவர்கள் முனகல் சத்தம் கேட்டு, வசந்தகுமாரியிடம் சொல்ல, அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றினார். மிரட்டல், நெருக்கடிகளை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்கு எதிராகப் பல கட்ட போராட்டங்கள் நடத்தி, தண்டனை பெற்றுக்கொடுத்தார். சமூகப் பிரச்னைகளுக்குப் போராடிய காரணத்துக்காக பலமுறை சிறைவாசம் அனுபவித்த இவர், சிறந்த சமூக சேவைக்கான விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

“உடம்பை ஃபிட்டா வெச்சிருந்தா சந்தோஷம் ஓடிவரும்!”

``வருஷத்துக்கு மூன்று முறை இமயமலைக்குச் சுற்றுலா செல்வேன். ரிஷிகேஷுக்கு மேலே பயணிக்கும்போது, `திரும்பி வருவோம்' என்கிற உத்தரவாதமே கிடையாது. வசதியானவங்களால மட்டும்தான் சந்தோஷமா இருக்க முடியும் என்ற எண்ணம் தப்பு. உடம்பை ஃபிட்டா வெச்சுக்கிட்டா போதும். சந்தோஷம் தானா ஓடிவரும். நான் 26 வயசுப் பொண்ணு மாதிரிதான் மனசைப் புத்துணர்ச்சியா வெச்சிருக்கேன்!”
 
வாக்கிங் ஷூ மாட்டிக்கொண்டு பேசியபடியே வந்த வசந்தகுமாரியின் நடையின் வேகத்துக்கு  ஈடுகொடுக்க, கொஞ்சம் தடுமாறித்தான் போனோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism