Published:Updated:

பத்து வகை சோப் பண்ணலாம்... 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில்!

பத்து வகை சோப் பண்ணலாம்... 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில்!
பிரீமியம் ஸ்டோரி
பத்து வகை சோப் பண்ணலாம்... 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில்!

வீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள்சாஹா, படம்: ஆ.முத்துக்குமார்

பத்து வகை சோப் பண்ணலாம்... 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில்!

வீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள்சாஹா, படம்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
பத்து வகை சோப் பண்ணலாம்... 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில்!
பிரீமியம் ஸ்டோரி
பத்து வகை சோப் பண்ணலாம்... 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில்!

`எந்த சோப் நல்ல சோப்?’ - இந்தக் கேள்வி அநேகமாக எல்லோருக்கும் இருக்கும். மூலிகை கலந்த சோப், இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சோப் என விளம்பரப்படுத்தப்படுகிற சோப்புகள்கூட  முழுமையான பலன்களைத் தருகின்றனவா என்பது சந்தேகமே. இதற்கு என்னதான் தீர்வு?

``ஆர்கானிக் சோப்புக்கு மாறிடுங்க...’’ என்கிறார் சென்னை, அடையாற்றைச் சேர்ந்த தேஜா விஜய்சிங். பி.எஸ்ஸி., பி.எட் முடித்தவர், இன்று முன்னேறிக்கொண்டிருக்கும் முழுநேர சுயதொழில்முனைவோர்.
‘`உத்தரப்பிரதேசத்துலேருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தோம். பொழுதுபோக்கா கைவினைக்கலைகள் செய்யக் கத்துக்கிட்டேன். ரிட்டர்ன் கிஃப்ட்டு போல கிராஃப்ட் அயிட்டங்கள் செய்து பிசினஸா பண்ணிட்டிருந்தேன். நிறைய புது விஷயங்களைத் தேடித்தேடிக் கத்துப்பேன். அப்படித்தான் ஆர்கானிக் சோப் தயாரிக்கவும் கத்துக்கிட்டேன். சென்னையில ஆர்கானிக் விழிப்பு உணர்வு அதிகம் இல்லாத காலம் அது. அப்போ விற்பனை குறைவாத்தான் இருந்தது. ஆனா, சமீபகாலமா ஆர்கானிக் மார்க்கெட் பிரபலமானதும், என்னுடைய ஆர்கானிக் சோப்பையும் மக்கள் தேடி வாங்க ஆரம்பிச்சிட்டாங்க...’’ - ஆர்வமாகச் சொல்கிறார் தேஜா.

பத்து வகை சோப் பண்ணலாம்... 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில்!

‘`இன்னிக்கு மூலிகை சோப், பால், க்ரீம், தேன் கலந்த சோப் என்ற பெயர்ல கிடைக்கிற பல சோப்புகளும் கெமிக்கல்களால தயாரிக்கப்பட்டவைதான். தவிர, அவற்றில் விலங்குக் கொழுப்புகள்தான் பிரதானமா இருக்கும். நான் தயாரிக்கிற ஆர்கானிக் சோப்புலயோ ஒரு சதவிகிதம்கூட கெமிக்கலோ, விலங்குக் கொழுப்போ கிடையாது. கிளிசரின், ஷியா பட்டர்னு சருமத்துக்கு ஈரப்பதத்தையும் மிருதுத்தன்மையையும் கொடுக்கிற பொருள்களை மட்டுமே வெச்சு சோப் தயாரிக்கிறேன். கலர்களுக்கு ஃபுட் கலர்ஸும், வாசனைக்கு அரோமா ஆயில்களும்தான் சேர்க்கறேன்.

ஷியா பட்டர் சோப், சருமத்துக்கு நல்ல ஈரப்பதத்தையும் வழவழப்புத் தன்மையையும் கொடுக்கும். குளிக்கும்போது நார் உபயோகிப் போமில்லையா... அந்த நாரையே சோப்பா தயாரிக்கிறேன். அதுக்கு லூஃபா சோப்னு பெயர். அது சருமத்தை ஸ்கரப் பண்ணி, இறந்த செல்களை நீக்கும்.

முல்தானி மிட்டிங்கிறது அழகு சிகிச்சைகள்ல தவிர்க்க முடியாதது. ஃபேஸ்பேக், க்ரீம்ல எல்லாம் சேர்க்கற அதை வெச்சும் ஒருவகை சோப் தயாரிக்கிறேன். இது பருக்களையும் அவை ஏற்படுத்தின தழும்புகளையும் போக்கும்.

சார்க்கோல் சோப்னு ஒருவகை. தேங்காய் ஓடுகளைச் சுட்டெடுத்துக் கரியாக்கி, சலிச்சு, அதுல சோப் தயாரிக்கிறேன். இது மங்குப் பிரச்னையை விரட்டும்...’’ - வியப்புக் கூட்டுபவர், இந்தத் தொழிலுக்குப் பெரிய முதலீடோ, தொழிற்சாலை செட்டப்போ தேவையே இல்லை என்கிறார்.

‘`கிளிசரின், ஷியா பட்டர், ஸ்டவ், சிலிக்கான் மோல்டு, ஃபுட் கலர்ஸ், அரோமா ஆயில்னு ரொம்பக் கம்மியான பொருள்கள்தான் இதற்குத் தேவை. `மைக்ரோவேவ் அவன்’ இருந்தால் அதுலயும் பண்ணிடலாம். மெஷின் தேவையில்லை.

பத்து வகையான சோப்புகள் பண்றேன். ஒவ்வொரு வகையிலயும் ஒரு கிலோ அளவு சோப் தயாரிக்க பத்து வகைகளுக்கும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் முதலீடு போதும். பத்து கிராம் அளவுள்ள சோப் 50 ரூபாய்க்கு விற்கலாம்.

15 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். அழகுலயும் ஆரோக்கியத்துலயும் அதிக அக்கறையா இருக்கிற மக்கள் நிச்சயம் இந்த சோப்புகளைத் தேடிவந்து வாங்குவாங்க...’’ என்கிற தேஜா, உங்களுக்கும் சோப் தயாரிக்கக் கற்றுக்கொடுக்கக் காத்திருக்கிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism