Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

Published:Updated:
நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

வீட்டில் இருக்கும் அடி பம்ப்பில் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தார் பக்கத்து வீட்டுத் தோழியின் கணவர்.

நமக்குள்ளே!

அதைப் பார்த்த எதிர் வீட்டுக்காரர், அவரைத் தனியாக அழைத்துக் கொண்டுபோய் சில அறிவுரைகளைத் தாராளமாக அள்ளி வழங்கியிருக்கிறார்.

`என்னங்க உங்க மனைவிக்கு இப்படி விழுந்துவிழுந்து தினமும் வேலை பார்க்கறீங்க. இதெல்லாம் ஆம்பளை பார்க்கிறா வேலையா? எங்க வீட்ல இப்படியெல்லாம் எந்த வேலையையும் நான் பார்க்க மாட்டேன். மனைவி செய்ய வேண்டிய வேலையை அவங்கதான் பார்க்கணும்... கணவனோட வேலை என்னவோ, அதை மட்டும்தான் அவன் பார்க்கணும்’ எனப் பக்கம் பக்கமாக உபதேசித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை தோழியின் கணவர். ஆனால், அக்கம்பக்கத்தினரிடமிருந்து வந்துவிழும் ஏளனப்பார்வை மற்றும் பேச்சுகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென நினைத்தவர், மற்றவர்கள் பார்வையில்படும்படி வீட்டு வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டார்.

காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை கணவனுக்காக, வீட்டுக்காக வேலை பார்த்தாலும் மனைவியின் பணிகள் அனைத்தையும் கடமை என்று `பெருமை பொங்க’ச் சொல்லி வைத்திருக்கிறது இந்தச் சமூகம். அதேநேரம், மனைவிக்கானவை என்று இங்கே `கட்டம்கட்டி’ வைக்கப்பட்டிருக்கும் வேலைகளைக் கணவன் செய்யும்போது மட்டும் ‘பொண்டாட்டிதாசன்’ என்று இழிவுபடுத்துகிறது.

உறவினர் ஒருவர், தினமும் தன் குடும்பத்தாரின் துணிகளைத் துவைப்பதுடன் பாத்திரம் தேய்ப்பது, கடைக்குச் செல்வது என சகலவிதமான பணிகளையும் செய்வார். தன் மகளுடைய புத்தகப்பையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கு அழைத்துப் போவது, சகோதரியைப் பேருந்து நிறுத்தத்திலிருந்து சைக்கிளில் அழைத்து வருவது என தன் வீட்டுப் பெண்களுக்கு அவர் உதவி செய்வதை விமர்சிக்காதவர்கள், வீட்டில் பாத்திரம் தேய்த்துக் கொடுப்பதை மட்டும் விமர்சிப்பது குறித்து ஒருமுறை என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள், பலருக்குமான சாட்டையடியே! அது -

`இங்கே, பெண்களுக்கு ஆண்கள் உதவுவதில்கூட பெரும்பாலானவர்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், கணவன் என்கிற ஆண், மனைவி என்கிற பெண்ணுக்கு உதவுவதைத்தான் நெருடலாக நினைக்கிறார்கள். மனைவி என்பவள் கணவனுக்கு அடிமை என்கிற பொதுப்புத்திதான் இதற்கெல்லாம் காரணம். நம்மீது விழும் விமர்சனம் நம்மையோ, அடுத்தவரையோ பாதிக்காத வரை நாம் யாருடைய விமர்சனத்துக்கும் காதுகொடுக்கத் தேவையில்லை...’

இந்தச் சாட்டையடிப் பார்வையை மற்றவர்களும் பின்பற்றலாம்தானே!

உரிமையுடன்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே!



ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism