Published:Updated:

“சப்பாத்தி தேய்க்கறதுல சாதனை படைச்சிருக்கேன்!”

“சப்பாத்தி தேய்க்கறதுல சாதனை படைச்சிருக்கேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சப்பாத்தி தேய்க்கறதுல சாதனை படைச்சிருக்கேன்!”

RJ கண்மணி அன்போடு... படங்கள்: தே.அசோக்குமார்

டகத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் `ஆர்ஜே’ கண்மணி, அதே ஊடகத்துறையில் பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் பெண் சாதனையாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுகிறார். இனி ஓவர் டு கண்மணி... 

`மசாலா எஃப்.எம்’ எனும் ஆன்லைன் ரேடியோவை வெற்றிகரமாக உருவாக்கி நடத்தி வருகிறார் பிரபாலா சுபாஷ். இவருடைய வானொலி நிலைய அலுவலகத்தில் பிரபாலா வுடன் ஒரு சுவாரஸ்யமான பேட்டி...
ஆன்லைன் ரேடியோவுக்கு வருவதற்கு முன் உங்கள் அனுபவம் என்ன?

``நானும் எங்கம்மாவும் சேர்ந்து 60-65 பேச்சிலர்களுக்கு உணவு தயாரித்து விற்பனை செய்து வந்தோம். ஒரு நாளைக்கு 200 - 300 சப்பாத்தி தேய்ப்பேன்.

“சப்பாத்தி தேய்க்கறதுல சாதனை படைச்சிருக்கேன்!”

நான் வேகமாகப் பேசுவதைக் கவனித்த ராம்ஜி ஸ்ரீப்ரியன், எனக்கு ராஜ் டி.வி-யில்  `ஹலோ ஹலோ சுகமா’ என்கிற ஷோ செய்ய வாய்ப்பளித்தார். அடுத்தது தீனா சார்... அவர் எனக்கு அண்ணன்  மாதிரி. அவரோட ரேடியோ ஸ்கூலிலேயே சேர்ந்து  டிரெய்னிங் எடுத்துட்டு, ஒருநாள் நானும் தீனா சார் மாதிரி கின்னஸ் ரெக்கார்டு பண்ணிட்டேன். 72 மணி நேரம் நான்-ஸ்டாப் மாரத்தான். எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இதை செஞ்சேன். என்னென்னமோ வேலைகள் செய்து வந்தாலும், ஆன்லைன் ரேடியோ  தொடங்கிய பிறகுதான் மனம் திருப்தியடைந்தது. பேச்சுத்துணைக்கு ஆள் இல்லாதது குறித்தும், சாதாரண பேச்சுத் தமிழில் பொழுதுபோக்கு சாதனங்கள் இல்லாதது குறித்தும் என்னிடம் பலர் பேசியிருக்காங்க. அதனுடைய விளைவுதான் ‘மசாலா எஃப்.எம்' ஆன்லைன் ரேடியோ. 2014-ல் அமெரிக்காவிலிருந்து  இதைத் தொடங்கினோம்.’’

அது என்ன `அழகான ராட்சசி’? அழகு தெரியுது... ‘ராட்சசி’ எங்கே?

``சின்ன வயசுல எங்கம்மா மட்டும்தான் என்னையும் தம்பி, தங்கையையும் வளர்த்தாங்க. அவருக்குத் தம்பி மாதிரி என்று நம்பி, எங்கள் வீட்டில் ஏற்கப்பட்ட ஒருவரே என்னை சித்ரவதை செய்தார். இது கொடுமை என்றோ, இதை எப்படி எதிர்கொள்வது என்றோ மிகச்சரியாக புரியாத இளம் வயது. பெற்றோரிடம்கூட சொல்ல முடியாத பயம். ஆனால், அது என் தங்கை வரை நீண்டபோதுதான், நான் என்னையறியாமல் ‘ராட்சசி’ ஆனேன். எனது தங்கைக்கு நானே தாயானேன். அன்று சட்டரீதியாக ஏதும் செய்ய இயலவில்லை. இப்போ ‘மனிதம் ஃபவுண்டேஷன்’ மூலமா பெண் குழந்தைகளுக்கு சப்போர்ட் செய்கிறோம்.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“சப்பாத்தி தேய்க்கறதுல சாதனை படைச்சிருக்கேன்!”

`மசாலா எஃப்.எம்'-மில் எத்தனை ஆர்.ஜே-க்கள் இருக்காங்க?

``ஒன்பது பேர்.  ஃபேஸ்புக்கில்  க்ரியேட்டிவ்வா எழுதறவங்களை இணங்கண்டு, அவங்களுக்கு பயிற்சிகொடுத்து, `வாட்ஸ்அப்’பிலேயே ரெக்கார்ட் பண்ணி அனுப்பச் சொல்லி, அதை எடிட் பண்ணி `ஷோ’வாக ஒலிபரப்பறோம். யுவா, விவேக், சான்டோ, நிஷா, விஜி... இப்படி எத்தனையோ பேர் முகம்காட்டாமல், பெயர் சொல்லாமல் பல மனங்களைக் கொள்ளை அடிச்சிட்டிருக்காங்க. அதோடு, எட்டு வயது குழந்தைக்குப் பயிற்சி கொடுத்து `யங்கஸ்ட் ஆர்.ஜே’ என உலக சாதனை செய்ய வைத்திருக்கிறோம்.’’

உங்க நேயர்கள் எண்ணிக்கை?

``முதல்ல ஒரு லட்சம் அடைந்தோம்... அது மூணு லட்சம் ஆகி, இப்போ ஏழு லட்சத்துல இருக்கு.’’

ஆன்லைன் ரேடியோ என்பது எப்படி ஒரு பிசினஸ் மாடல் ஆகிறது?

``இதை அமைப்பதற்குப் பொருட்செலவு குறைவுதான்.  ஆனா, பாடல் ஒலிபரப்புவதில் உள்ள சட்டதிட்டங்கள் தெரிஞ்சுருக்கணும். பிசினஸ் என்று பார்த்தால், இன்னும் இது பெரிதாக வளரவில்லை. ஆனாலும், நான் ஆன்லைனில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் சிறிய நிறுவனங்களை எங்கள் ரேடியோ மூலம் இணைத்துள்ளேன். இதனால் மிகச்சரியான ஆன்லைன் வாடிக்கையாளர்கள் அவர்களுக்குக் கிடைக்கிறார்கள்.’’

இந்தியாவில்தானே இப்படி? ஆன்லைன் ரேடியோ என்பது உலக அளவுதானே... மற்ற நாடுகளிலிருந்து பிசினஸ் வருகிறதா?

``பிசினஸ் ஆங்கிளில் இனிதான் என் பயணம் தொடங்க இருக்கிறது. எதிர்காலம் ஆன்லைன்தான் என்பதால், எங்கள் முயற்சி சிறக்கும் என்கிற நம்பிக்கை உண்டு.’’

விரைவில் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறீர்களே... ரேடியோ ஸ்டேஷன் நடத்துவதற்கான மாதாந்தரச் செலவை உங்கள் பிசினஸ் மூலம் எடுக்கத் தொடங்கிவிட்டீர்களா?

``ஆமாம்... இப்போ, கையி லிருந்து போடாமல் ரேடியோவை நடத்த ஆரம்பிச்சாச்சு. நேயர்கள் எண்ணிக்கை அதிகமாகியிருப் பதால் நல்ல விளம்பரதாரர்கள்  கிடைத்துள்ளார்கள். அவர் களுக்கும் இந்த ரேடியோவால்  திருப்தியே!’’

“சப்பாத்தி தேய்க்கறதுல சாதனை படைச்சிருக்கேன்!”

`மசாலா எஃப்.எம்' தனது பயணத்துல அடுத்து எங்கே போகப் போகுது?

``முதன்முதலில் கிளவுட் ரேடியோ அல்லது ஆன்லைன் ரேடியோ ஸ்டேஷனுக்குள்ள லைவ் ஆகப் பார்க்கக்கூடிய வசதியை ஏற்படுத்தியிருக்கோம்.’’

இதைப் படிக்கிற பலருக்கு ரேடியோ தொடங்கும் ஆர்வம் ஏற்படலாம்... அவர்களை வரவேற்பீர்களா?

``நிச்சயமா... இப்பவே பலருக்குப் பயிற்சி கொடுத்துட்டுதான் இருக்கேன்... ஆர்வமும் உழைப்பும் உள்ளவர்கள் கண்டிப்பா `ஆர்.ஜே’ ஆகலாம். அல்லது என்னைப் போலவே ஆன்லைன் ரேடியோ தொடங்கலாம்.''

இதற்கு முன்பு எங்கேயும் நீங்க வேலைக்கு ட்ரை பண்ணலையா? நிறைய பண்பலைகள் இருக்கே..?

``ஆர்வமா போனேன். `உங்க குரல் மூக்குல பேசுற மாதிரி இருக்கு... ரேடியோ மெட்டீரியலே இல்லை’ன்னு  ரிஜெக்ட் பண்ணிட்டாங்க!’'

கடைசியா,  ரேடியோல பேசற மாதிரியே வேகமா சொல்லுங்க... கேட்போம்.

``நீங்க கேட்டுட்ருக்கீங்க ‘உங்கள் எஃப்.எம்... திகட்டாத இசை எங்கேயும்...

எப்போதும்!’’

ஆன்லைன் ரேடியோ தொடங்க...

* ரேடியோவில் பேசுவதற்கான `ஆர்.ஜே’ பயிற்சியும், தயாரிப்புப் பயிற்சியும் (Production training) தேவை.

சிறிய முதலீடு,  வானொலி சார்ந்த அறிவு, அனுபவங்களைத் தேடிப் பெறுதல் அல்லது அத்துறையில் இருக்கும் வல்லுநரோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளுதல் (Business Module Knowledge).

நீண்டகாலத் திட்டம் (Long term planning) அவசியம்.