Published:Updated:

வீடு VS வேலை - பெர்ஃபெக்‌ஷன்தான் மகிழ்ச்சியின் திறவுகோல்!

வீடு VS வேலை  - பெர்ஃபெக்‌ஷன்தான் மகிழ்ச்சியின் திறவுகோல்!
பிரீமியம் ஸ்டோரி
வீடு VS வேலை - பெர்ஃபெக்‌ஷன்தான் மகிழ்ச்சியின் திறவுகோல்!

மு.பார்த்தசாரதி, படம்: வி.சதீஷ்குமார்

வீடு VS வேலை - பெர்ஃபெக்‌ஷன்தான் மகிழ்ச்சியின் திறவுகோல்!

மு.பார்த்தசாரதி, படம்: வி.சதீஷ்குமார்

Published:Updated:
வீடு VS வேலை  - பெர்ஃபெக்‌ஷன்தான் மகிழ்ச்சியின் திறவுகோல்!
பிரீமியம் ஸ்டோரி
வீடு VS வேலை - பெர்ஃபெக்‌ஷன்தான் மகிழ்ச்சியின் திறவுகோல்!

துரை ஐயர் பங்களாவைச் சேர்ந்தவர். மகாலெட்சுமி. கடந்த பன்னிரண்டு வருடங்களாக வேலம்மாள் மெமோரியல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது தொடர்ந்து ஐந்து வருடங்கள் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்குச் சென்று சிறந்த ஆசிரியர் விருது பெற்ற பெருமைக்குரியவர். தற்போது கே.கே.நகரில் `கிட்ஸ் பார்க் ஸ்கூல்’ எனும் பள்ளியை ஆரம்பித்து வெற்றிகரமாகச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்.

“எனக்குச் சொந்த ஊர் திண்டுக்கல். திருமணத்துக்குப் பிறகு மதுரையில செட்டில் ஆகிட்டோம். என்னோட கணவர் முருகன், தனியார் மருத்துவமனையில் பி.ஆர்.ஓ-வாக இருக்காரு. மூத்தப் பொண்ணு சூர்யா, பி.இ படிக்கிறாள்; பையன் அருள்குமரன், ஏழாவது படிக்கிறான். நான் டீச்சர் ட்ரெயினிங் படிச்சதே திருமணத்துக் குப் பிறகுதான். குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கற நாம முதல்ல பெர்ஃபெக்ட்டா இருக்கணும்னு முடிவு பண்ணினேன். அந்த பெர்ஃபெக்‌ஷன்தான் இப்போ வரை என்னையும் என் குடும்பத்தினரையும் மகிழ்ச்சியா வெச்சிருக்கு” - உற்சாகத்தோடு பேசும் மகாலெட்சுமி, தான் வீட்டையும் பள்ளியையும் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் சீக்ரெட்டை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்... 

வீடு VS வேலை  - பெர்ஃபெக்‌ஷன்தான் மகிழ்ச்சியின் திறவுகோல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* தினமும் காலையில ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாலே போதும்... அன்றைய நாள் அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும்! நம்முடைய வேலைகளையும் எளிதாகச் செய்ய முடியும்.

என்னோட பசங்க ரெண்டு பேருமே காலையில 7.15 மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பிடுவாங்க. அதற்குள்ளாகவே நான் காலை உணவையும் மதிய உணவையும் தயார் செய்து வைத்துவிடுவேன்.

வேலை நாள்களில் பெரும்பாலும் எளிதாகச் சமைக்கக்கூடிய உணவுகளைத் தயார் செய்து சாப்பிட வேண்டும். அதற்காக, தினம்தோறும் இட்லியும் தோசையும் மட்டுமே செய்தால் போரடித்துவிடும். அதனால், பயறு வகைகளை ஊறவைத்து முளைகட்டிய பிறகு சாப்பிடக் கொடுக்கலாம். இது உடலுக்கும் நல்லது.

எங்கள் வீட்டில் எதற்குமே மெஷின் பயன்படுத்துவதில்லை. துணி துவைக்க வாஷிங் மெஷின் கிடையாது என்பதால், தினம்தோறும் குளிக்கும்போது துணிகளையும் சேர்த்தே துவைத்து விடுவோம்.

மாலையில் மகனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்போதே காய்ந்த துணிகளையெல்லாம் மடித்து விடுவேன். இதனால், துணிகளை மடிப்பதற்கென தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை.

மளிகை சாமான் களிலிருந்து சில காய்கறிகள் வரைக்குமான அத்தனையும் ஞாயிற்றுக்கிழமையே மொத்தமாக வாங்கி வைத்து விடுவது பெஸ்ட்.

வீட்டு வேலைகளை முடிந்தவரை எல்லோரும் சேர்ந்து செய்யப் பழக்கினேன். `அம்மா கஷ்டப்படுறது உங்களுக்காகத் தானே... உங்களோட சின்னச் சின்ன வேலைகளையாவது நீங்களே செய்தால்தானே அம்மாவுக்குச் சுமை குறையும்’னு சொல்லிச் சொல்லியே என் பசங்களைப் பழக்கினேன்.

என் வீட்டுல யாருமே எனக்காகக் காத்திருக்க மாட்டாங்க. `அம்மா வந்தாதான் எல்லாமே நடக்கும்’னு அவங்க எதிர்பார்க்கறதே இல்லே. யாருக்கு என்ன தேவையோ, அதை அவங்களே செஞ்சுப் பாங்க.

நாங்க டே கேர், ப்ரீ ஸ்கூல், எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மட்டும் நடத்துறோம். நம்மிடம் வர்ற குழந்தைங்ககிட்ட நாம எப்படிப் பழகுறோமோ, அதேபோலத்தான் அவங்களும் நம்மகிட்ட பழகுவாங்க. அதனால, எப்போதுமே அவங் களோட ஃப்ரெண்ட்லியா மூவ் பண்ணிடுவேன்.

வீட்டுல என் பசங்களுக்கு மட்டும் நல்ல அம்மாவா இருக்குறதோட மட்டுமில்லாம, என் ஸ்கூல்ல படிக்கிற பசங்களுக்கும் நான் சிறந்த அம்மாவாகத்தான் இருக்க ஆசைப்படுறேன். அம்மாங்கிற இந்த உணர்வு என்னோட ஆற்றலை அதிகப்படுத்தி, தொடர்ந்து இயங்க உதவுது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism