Published:Updated:

அவள் விகடன் ஜாலி டே! - அதிர்ந்தது சேலம்!

அவள் விகடன் ஜாலி டே! - அதிர்ந்தது சேலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் விகடன் ஜாலி டே! - அதிர்ந்தது சேலம்!

யாழ் ஸ்ரீதேவி, படங்கள்: எம்.விஜயகுமார், த.தனசேகர்

ம் சேலம் வாசகிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த ‘ஜாலி டே’, ஆகஸ்ட் 19, 20 தினங்களில் கொண்டாட்டமாக நடந்து முடிந்தது. கோல்டு வின்னர் வித் வீட்டா டி3 ஆயில் நிறுவனத்தினர் நம்முடன் இணைந்து விழாவை வழங்கினார்கள். ‘ஜாலி டே’ பவர்டு பை ஜி.ஆர்.டி. தங்கமாளிகை மற்றும் அபிராமி அரிசி வகை நிறுவனத்தினர் என்பது நிகழ்வின் பிரமாண்டத்தைக் கூட்டியது. வென்யூ பார்ட்னராக சேலம் மகேந்திரா பொறியியல் கல்லூரி, ஹாஸ்பிட்டாலிட்டி பார்ட்னராக ஏ.எம்.ஆர். எவர்கிரீன்  ஹோட்டல் கைகோத்துப் பலம் சேர்த்தனர். சேலம் அரிசிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஏ.எம்.ஆர் எவர் கிரீன் ஹோட்டலில் ரங்கோலி, மெகந்தி, அடுப்பில்லா சமையல், கிராஃப்ட் வொர்க், டான்ஸ், பாட்டு என முன் தேர்வுப் போட்டிகள் தொடங்கின. அந்தப் போட்டிகளில் 77 வயது பாட்டி என்று பல்வேறு வயதினரும் பங்கேற்று அசத்தினர். ‘நான் அடுப்பில்லா சமையல் முடிச்சுட்டேன்... பாட்டுப் போட்டியிலும் கலந்துக்கிறேன்’, ‘நான் ரங்கோலி முடிச்சுட்டேன்... டான்ஸ் ஆடணும்’, ‘நாடகம் இருக்கா? மைமிங் பண்றேன்’ என நடுவர்களைத் திணறவைத்தனர் நம் வாசகிகள். வெயிலில் இருந்து நமக்கு வைட்டமின் `டி' சத்து கிடைக்கிறது. இதை ஊக்கப்படுத்த கோல்டு வின்னர் வித் வீட்டா டி3 நிறுவனம் வாசகிகளுக்கு வெயிலில் செல்ஃபி எடுப்பதும், ரங்கோலி கோலம் போடும் போட்டியையும் நடத்தியது.

அவள் விகடன் ஜாலி டே! - அதிர்ந்தது சேலம்!
அவள் விகடன் ஜாலி டே! - அதிர்ந்தது சேலம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சேலத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியை கலைச்செல்வி, ‘ஸ்டெப் அப் டான்ஸ் அண்ட் ஃபிட்னஸ்’ ஸ்டூடியோ உரிமையாளர் ஃபரானா அஜ்மல், ‘ஃபார்ம் ஹார்வெஸ்ட்’ நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜராஜேஸ்வரி, சமையல் கலைஞர் கௌரி, கிராஃப்ட் கலைஞர் கலைச்செல்வி, பரதநாட்டியம் மற்றும் இசைக்கலைஞர் அபர்ணா ஆகிய நடுவர்கள் வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

கோல்டு வின்னரின் வீட்டா டி3 ஆயில் 20% தள்ளுபடியில் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அபிராமி அரிசி வகையில் இரண்டு கிலோ சீரக சம்பா வாங்குபவர்களுக்கு அரை கிலோ தானியம் பாக்கெட் இலவசமாக வழங்கப்பட்டது. ஜி.ஆர்.டி ஜுவல்லரியின் நகை சேமிப்புத் திட்டத்தில் சேருபவர்களுக்கு ஆச்சர்யப் பரிசுகளோடு, 0% - 18% வரை செய்கூலி, சேதாரம் இல்லை என்ற இனிக்கும் அறிவிப்பும் வழங்கப்பட்டது.

மறுநாள் 20-ம் தேதி, சேலம் ஆத்தூர் மெயின் ரோடு மின்னாம்பள்ளியில் அமைந்துள்ள மகேந்திரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஜாலி டே விழாவுக்கு வாசகிகள் சிரமமின்றி வந்து சேர, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இலவசப் பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. வாசகிகளுக்கு கோல்டு வின்னர் எண்ணெய் பாக்கெட் உள்ளிட்ட கிஃப்ட் ஹேம்பர் வழங்கப்பட்டது.

அவள் விகடன் ஜாலி டே! - அதிர்ந்தது சேலம்!

நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் சித்ரா மற்றும் ‘சுட்டி’ அரவிந்த் விழாவைக் கலகலப்பாக்க, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார் கல்லூரி முதல்வர் மால்முருகன். கேரள உடையணிந்த பெண்களின் ‘மஹா கணபதி’ பாடலோடு நிகழ்ச்சி இனிதே நகரத்தொடங்க, முதல் அதிரடியாக ‘மெர்சல் கேர்ள்ஸ்’ குழு நடனத்தில் பின்னியெடுத்தனர். அடுத்தடுத்து கல்லூரி மாணவிகளின் பாட்டும் நடனமும் கண்களுக்கு விருந்தாயின. உதவிப் பேராசிரியர் லதா பாடிய ‘ஓ பட்டர்ஃப்ளை’ பாடல், அரங்கைக் கட்டிப்போட்டது. சோலோ, குரூப் டான்ஸ், பாடல்கள் என அரங்கின் டெம்போ அதிகரித்துக்கொண்டே இருக்க, பஞ்சு மிட்டாய் கலர் காஸ்ட்யூமில் என்ட்ரி கொடுத்த வடிவேல் பாலாஜியை, பார்த்திபன்களாக மாறி வாசகிகள் வம்பிழுத்தனர். ‘நான் கோவை சரளாவா வந்திருக்கேன்’ என வாசகி நதியா குதூகலம் கூட்ட, நிகழ்ச்சியின் பீட் ஏற்றினார் பாலாஜி. காலை முதலே, ‘இன்று வரப்போகிற செலிப்ரிட்டி யார்?’ என்று வாசகிகள் காத்திருக்க, மதியம் வெஜ் பிரியாணி விருந்துக்குப் பிறகு, ‘இதோ வந்துட்டேன்!’ என்று மேடையேறினார் சின்னத்திரை ஸ்டார் ரியோ.

‘ரியோவோடு ஒரு செல்ஃபி எடுக்கணும்’, ‘ரியோவுக்காக இந்தப் பாட்டை டெடிகேட் பண்றேன்’, ‘ரியோகிட்ட ஒரு கேள்வி கேட்கணும்’ என அதகளப்படுத்தினார்கள் பெண்கள்.  ‘`இத்தனை பேரோட அன்பு என்னை வெட்கப்பட வைக்குது. உங்க திறமையை வெளிக்கொண்டு வர்ற மேடையா ‘ஜாலி டே’ அமைந்திருப்பதில் ரொம்ப சந்தோஷம்'' என்ற ரியோ அடுத்து கூறியதுதான் செம குறும்பு.  ``ஹீரோவா நடிச்சா, ஹன்சிகாவோட நடிக்கணும்!” என்றவாறே, ‘ஜித்து ஜில்லாடி’ பாடலுக்கு டான்ஸ் ஆடி, ‘ஆத்தங்கர மரமே’ பாடல் பாடி என அரங்கத்தையே மகிழ்வில் ஆழ்த்தினார்.

அவள் விகடன் ஜாலி டே! - அதிர்ந்தது சேலம்!

ஜி.ஆர்.டி. தங்க மாளிகை நடத்திய போட்டியில், சரியான பதிலளித்த வாசகிகளுக்கு பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன. கோல்டு வின்னர் வீட்டா டி3 ஆயில் மற்றும் அபிராமி அரிசி வகை விளம்பரம் குறித்த கேள்விகள் கேட்டு, சரியான பதில் அளித்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அவள் விகடன், அவள் கிச்சன் இதழ்களில் இருந்து கேட்கப் பட்ட கேள்விகளுக்கும் பதில்கள் பறந்து வர, பரிசுகளை அள்ளிச் சென்றனர் வாசகிகள். ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன், உணவில் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்களை விளக்கியதோடு, வாசகிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அடுப்பில்லா சமையல் போட்டியில் கலந்து கொண்ட வாசகி லாவண்யா சூரியகாந்தி விதை, ஆளி விதை, அவலுடன் வாதநாராயணப் பொடி சேர்த்துச் செய்திருந்த ஸ்நாக்ஸ் உருண்டைக்கான ரெசிப்பியை மேடையில் பகிர்ந்துகொண்டார். பத்துக்கும் மேற்பட்ட வாசகிகள் குழுவாக வந்து ‘விஷமக்கார கண்ணன்’ என்ற கண்ணனின் லீலைகளைப் பாடலாகத் தந்து கைதட்டல் அள்ளினர்.

அவள் விகடன் ஜாலி டே! - அதிர்ந்தது சேலம்!

77 வயது மைதிலிப் பாட்டி அவ்வை வேடத்தில் வந்து ‘பழம் நீயப்பா’ பாடலை ஸ்ருதி சுத்தமாகப் பாடி மெய்சிலிர்க்க வைக்க, அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது.

அவள் விகடன் ஜாலி டே! - அதிர்ந்தது சேலம்!

விழாவின் க்ளைமாக்ஸ்... பம்பர் பரிசு ஃபிரிட்ஜ் யாருக்கு? அந்த அதிர்ஷ்ட தேவதை... இளம்பிள்ளை இடங்கனசாலையைச் சேர்ந்த யசோதா, அவள் விகடன் வழங்கிய ஃபிரிட்ஜை மனம்கொள்ளா மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். மொத்தத்தில் அவள் விகடன், கோல்டு வின்னர், வீட்டா டி3 ஆயில் நிறுவனத்தினர் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வாசகிகளுக்கு வழங்கி வியக்க வைத்தனர்.

‘அடுத்த ஜாலிடே எப்போ வரும்?’ என்ற ஏக்கம் கண்களில் மிதக்க, மழை ஈரம் மிதந்த காற்றின் வருடலோடு சிரித்தபடியும், கதைத்தபடியும் கலைந்த வாசகிகளை அன்போடு வழியனுப்பினோம்!