Published:Updated:

பெண்மையைக் கொண்டாடுவதே நவராத்திரி!

பெண்மையைக் கொண்டாடுவதே நவராத்திரி!
பிரீமியம் ஸ்டோரி
பெண்மையைக் கொண்டாடுவதே நவராத்திரி!

கொலுக் கோலாகலம்ஆர்.வைதேகி, படம்: ப.சரவணகுமார், உதவி: ஜ.காவ்யா

பெண்மையைக் கொண்டாடுவதே நவராத்திரி!

கொலுக் கோலாகலம்ஆர்.வைதேகி, படம்: ப.சரவணகுமார், உதவி: ஜ.காவ்யா

Published:Updated:
பெண்மையைக் கொண்டாடுவதே நவராத்திரி!
பிரீமியம் ஸ்டோரி
பெண்மையைக் கொண்டாடுவதே நவராத்திரி!

`அழகிய சிங்கர்' ஷோபனாவுக்கு இது ஸ்பெஷல் நவராத்திரி. டிசம்பரில் சங்கீத சீசனுக்கான அதே முனைப்புடன், நவராத்திரிக் கச்சேரிகளுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார் ஷோபனா. சென்னையில்  உள்ள அவரது வீடும் இப்போதே கொலுக் கோலம் கொண்டிருக்கிறது. ஷோபனாவின் நவராத்திரி நினைவுகளுடான நவரசப் பேட்டி இது...

``சின்ன வயசுல யார் வீட்டுக் கொலுவுக்குப் போனாலும் பாட்டுப் பாடச் சொல்வாங்க. கொலுவுக்குப் பாடறதுக்காகவே பஜன்களும் பாடல்களும் கத்துக்கிட்ட அந்த நாள்கள் இன்னும் எனக்குள் பசுமையா இருக்கு. இன்றும் அந்த இசையும் கொலு அனுபவங்களும் எனக்கு அதே குதூகலத்தையே கொடுக்கின்றன.  நவராத்திரின்னா பாட்டுனு சொல்லிக்கொடுத்த என் பெற்றோரும் ஆசிரியர்களும் அதோட வரலாறும் சொல்லிக் கொடுத்தாங்க.

நவராத்திரியின்போது, அம்பிகையின் பேரில் ஸ்தோத்திரங்கள் படிக்கிறது மிகவும் உகந்தது. அதிலும் சண்டி சப்தசதி பாராயணம், லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி, மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகங்கள், ஸ்ரீசூக்தம், துர்கா சப்தசதி போன்றவை மிகவும் சக்தி வாய்ந்தவை. தேவி பாகவதம் பாராயணம் செய்வது நவராத்திரியின்போது மிகவும் விசேஷம். ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதரின் நவாவரணக் கீர்த்தனைகள், அத்வைத வேதாந்தத்தின் அடிப்படையில் மனித உடலில் அமைந்துள்ள ஒன்பது தியானயோக சக்கரங்களின் விவரணத்தை உள்ளடக்கியவை.

பெண்மையைக் கொண்டாடுவதே நவராத்திரி!

தேவி வழிபாட்டில் மிகவும் உயரியதாகக் கருதப்படுவது ஸ்ரீசக்ர வழிபாடு. மஹா மேருவாகக் காட்சியளிக்கும் ஸ்ரீசக்ரத்தின் நவாவரணங்களாகிய ஒன்பது தளங்களை ஆளுகின்ற தேவியர்களின் நாமங்களைக் குறிப்பிட்டு வெவ்வேறு ராகங்களிலும் தாளங்களிலும் புனையப்பட்டவை இந்த நவாவரணக் கீர்த்தனைகள். இவற்றை நவராத்திரி நாள்களில் பாடுவதும் கேட்பதும் அவ்வளவு விசேஷம்...'' நவாவரணங்களில் ஆழ்கிறவருக்கு, நவராத்திரி நாள்களின் ஃபேவரைட்டும் இவைதானாம்.

``பாட்டுங்கிறது நம் கலாசாரத்தில் எல்லாத் தருணங்களிலும் இருக்கு. பாட்டில்லாத பண்டிகைகளே இல்லைனு சொல்லலாம். நவராத்திரியில  பாடற கச்சேரிகள் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். சக்தியைப் பற்றிப் பாடறதுங்கிறது பரிபூரண திருப்தியைக் கொடுக்கிற விஷயம். என்னைப் பொறுத்தவரைக்கும்  நவராத்திரிக் கொண்டாட்டம் என்பது செலிப்ரேட்டிங் உமன்ஹுட்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்மையைக் கொண்டாடுவதே நவராத்திரி!

புதிய கோணத்தில் சொல்பவர், சில வருட அமெரிக்க வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் இந்தியாவிலேயே செட்டிலாகி யிருக்கிறார்.

``கல்யாணத்துக்குப் பிறகு ஆறு வருஷங்கள் அமெரிக்காவில் இருந்தோம். அங்கே இருந்தபோதும் ஒரு வருஷம்கூட நான் கொலு வைக்க தவறினதே இல்லை. ஒவ்வொரு வருஷமும் இந்தியா வரும்போது கொலு பொம்மைகளுக்காக ஸ்பெஷல் ஷாப்பிங் நிச்சயம் இருக்கும். அந்தப் பொம்மைகள்  போதாதுனு அமெரிக்காவிலும் பொம்மைகள் வாங்குவேன். அமெரிக்காவுல  வார இறுதியில்தான் எல்லோருக்கும் நேரம் கிடைக்கும். நண்பர்களை அழைச்சு வெற்றிலை, பாக்கு கொடுத்து சின்னதாக ஒரு `கெட் டுகெதர்' நடக்கும். நவராத்திரியின் ஒன்பது நாள்களுமே வீடு விழாக்கோலத்தில் இருக்கும். அந்த ஆறு வருஷங்கள்லயும் தாய்நாட்டையும் தாய் வீட்டையும் மிஸ் பண்ணாம வெச்சுக்கிட்ட விஷயங்களில் நவராத்திரிக்கே முதலிடம். மறுபடியும் இந்தியாவுக்கு வந்து ஆறு வருஷங்கள் ஆச்சு. இங்கே வந்ததும் எங்க வீட்டுக் கொலுக் கொண்டாட்டம்  இன்னும் ஸ்பெஷலாகியிருக்கு. பார்த்துப் பார்த்துப் பொம்மைகளும் கிஃப்ட்டும் வாங்கிட்டிருக்கேன்.

பெண்மையைக் கொண்டாடுவதே நவராத்திரி!

சபாக்களில் நடக்கற நவராத்திரிக் கச்சேரிகள் ஒரு பக்கமிருக்க, வீட்டுலயும் ஒன்பது நாள்களும் நிறைய பாடுவேன்.  கனகதாரா ஸ்தோத்திரம், சௌந்தர்ய லஹரி, மகிஷாசுரமர்த்தினி... இவையெல்லாம் நிச்சயம் இருக்கும். எத்தனையோ கச்சேரிகளில் பாடினாலும் எவ்வளவு பெரிய மேடைகள்ல பாடினாலும் நவராத்திரிக் கச்சேரிகளில் பாடற அனுபவம் அலாதியானது.''

கண்கள் மூடி அலைபாயுதேவில் ஆழ்கிறார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism