Published:Updated:

அணிலாடும் முன்றில் காண ஆசை!

அணிலாடும் முன்றில் காண ஆசை!
பிரீமியம் ஸ்டோரி
அணிலாடும் முன்றில் காண ஆசை!

வித்தியாசம் ஆர்.வைதேகி

அணிலாடும் முன்றில் காண ஆசை!

வித்தியாசம் ஆர்.வைதேகி

Published:Updated:
அணிலாடும் முன்றில் காண ஆசை!
பிரீமியம் ஸ்டோரி
அணிலாடும் முன்றில் காண ஆசை!

‘அ’ எழுத கற்றுக் கொடுக்கும்போதே அணில் என்கிற அழகிய உயிரினத்தையும் அறிமுகப்படுத்திய காலம்

அணிலாடும் முன்றில் காண ஆசை!

இன்றில்லை. அகரவரிசைக்கான உதாரணங்கள் மாறிப்போன மாதிரியே, அணில்களும் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அடுத்தவருக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத அப்பாவி ஜந்துக்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. மின்மினிப்பூச்சிகளும் சிட்டுக்குருவிகளும் தெரியாமலே வளர்ந்துகொண்டிருக்கிற இந்த தலைமுறையினரைத் தொடர்ந்து அடுத்த தலைமுறை அணிலை அருங்காட்சியகத்தில் தான் பார்க்க வேண்டும்போல.

செல்லப்பிராணிகளின் ஆர்வலரும் மிருகங் களைப் படம் எடுக்கும் போட்டோகிராபருமான சூர்யா தின்கர், அணில்களைக் காக்கும் அவசர முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். ‘இந்திய அணில் பாதுகாப்பு இயக்கம்’ என்கிற இவரின் இந்த முயற்சியால் மீண்டும் அணிலாடும் முன்றில்கள் தோன்றினால் மகிழ்ச்சி.

``முன்பெல்லாம் காலையில பொழுதுவிடிஞ்சு எழுந்திருக்கும்போது ஜன்னல்லயும் தோட்டத் துலயும் அத்தனை அணில்கள் ஓடியாடி விளையாடறதைப் பார்க்கலாம். இப்ப அணில்னா என்னன்னே தெரியாத அளவுக்கு கிட்டத்தட்ட அந்த இனமே அழிஞ்சிட்டிருக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அணிலாடும் முன்றில் காண ஆசை!

என் தோழி  சுபாஷிணி ரொம்ப வருஷங்களுக்கு முன்னாலேருந்தே அணில்களுடைய வாழ்வைப் பத்தி நிறைய எழுதிட்டிருக்காங்க. வழி தவறி சில நேரம் அணில் குஞ்சுகள் வீட்டுக்குள்ளே வந்துடும். அதுங்களை எப்படிப் பாதுகாக்கிறது, அதுங்களுக்கு உடம்புக்கு முடியாதபோது என்ன பண்றதுனு நிறைய விஷயங்களை நானும் அவங்களும் சேர்ந்து பேசியிருக்கோம். இடையில நான் யூரோப் போயிட்டேன். சில வருஷங்கள் கழிச்சு இந்தியா வந்தபோது, அணில்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைஞ்சு போனதைக் கேள்விப்பட்டேன். வர்தா புயல் பாதிச்சப்போ சென்னையில ஏராளமான மரங்கள் விழுந்தன. புகலிடம் தேடி நிறைய அணில்கள் வரும்னு காத்திருந்தோம். ஓர் அணில்கூட வரலை...’’ - வருத்தத்தை வெளிப்படுத்துபவர், அணில்கள் காணாமல் போய்க்கொண்டிருப்பதன் காரணங்களையும் சொல்கிறார்.

``சென்னையில எங்கே பார்த்தாலும் ஏதேதோ காரணங்களுக்காக மரங்களை வெட்டிக் கிட்டிருக்காங்க. மரப்பொந்துகள்லயும் வீட்டுப் பரண்கள்லயும் குட்டிப்போட்டு வாழ்ந்துக்கிட்டிருந்த அணில்களோட எண்ணிக்கை இன்னிக்கு ரொம்ப வேகமா குறைஞ்சிட்டு வருது. சில வருடங்களுக்கு முன்னாடி வரைக்கும் வீட்டுக்கு வெளியில வெச்சிருந்த ஏ.சி பெட்டிகளுக்குள்ள குட்டி போட்டுக்கிட்டிருந்த அணில்களுக்கு இப்போ அதுக்கும் இடமில்லாமல் போயிடுச்சு. அந்தப் பெட்டியே இல்லாம ஏ.சி வசதிகள் பண்ணிக்கிறோம்.

சுற்றுச்சூழலுக்கு ஒவ்வோர் உயிரினமுமே முக்கியம். அதுல அணில்களுக்கும் மிக முக்கியமான இடமுண்டு. மகரந்தச் சேர்க்கைக்கு உதவுதுங்க. அணில்கள் பழங்களைச் சாப்பிட்டுப் போடற விதையிலதான் மரங்கள் வளருது. நாமோ அந்த மரங்களை வெட்டறதோட இல்லாம, அதுல அடைக்கலம் தேடற அணில்களையும் மறைமுகமா அழிச்சிட்டிருக்கோம். அணில்கள் மரங்களில் உள்ள கறையான்களைச் சாப்பிடும். ஒரு மரம் ஆரோக்கியமா இருக்கணும்னா அதன் மேல பறவைகளும் அணில்களும் வந்து உட்காரணும். அவைதாம் மரங்களுக்கு உயிர் கொடுக்கும். ஆனா, இன்னிக்கு மரங்களுடைய எண்ணிக்கையும் குறைஞ்சிடுச்சு. இருக்கிற கொஞ்சநஞ்ச மரங்களிலும் உயிரோட்டம் இருக்கிறதில்லை.

சுற்றுச்சூழலுக்கு மிக அவசியமான இந்த உயிரினம் அழிவை நோக்கிப் போயிட்டிருக்கு. அதுங்களைக் காப்பாற்ற இப்போதே நடவடிக்கைகள் எடுத்தாகணும். அதைப் பத்தின விழிப்பு உணர்வை ஏற்படுத்த நினைச்சேன். அதுக்காகத்தான் ‘இந்திய அணில் பாதுகாப்பு இயக்கம்’னு ஒரு முயற்சியை ஆரம்பிச்சிருக்கேன். ‘எர்த்வொர்க்ஸ் இன்னோவேட்டிவ்’ என்கிற என்னுடைய நிறுவனம் பிளாஸ்டிக்கை ஒழிக்கிற வகையில், சணல் பைகளைப் பிரபலப்படுத்தற முயற்சிகளைப் பண்ணிட்டிருக்கு. அது மூலமா வரும் வருமானத்தை அணில்களோட பாதுகாப்புக்குப் பயன்படுத்தறதா இருக்கேன்...’’ - அக்கறையாகச் சொல்பவர், அணில்களை வைத்து ஆராய்ச்சி படிப்பை முடித்தவர்போல அத்தனை தகவல்கள் வைத்திருக்கிறார்.

``அணில்களை வளர்க்கிறது ஒரு கலை. பொத்திப் பொத்தி வளர்த்துப் பழக்கிட்டோம்னா, அதுங்களுக்குத் தன்னைத் தற்காத்துக்கிற தன்மையே தெரியாம, சுலபமா பூனைகளுக்கு இரையாகிடும். குட்டி அணில்களுக்கு ஒரு மணி நேரத்துக்கொரு முறை சாப்பாடு கொடுக்கணும். பல்புக்கு அடியில கதகதப்பான சூழல்ல வைக்கணும். அணில்கள் ரொம்ப சுட்டித்தனம் கொண்டவை. அதுங்களைச் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வளர்க்கணும்’’-டிப்ஸ் தருபவர், தன் இயக்கத்தின் மூலம் செய்கிற விஷயங்கள் மூன்று. அவை... விழிப்பு உணர்வு, மரங்கள் வளர்ப்பு, அதன் மூலம் அணில்களின் எண்ணிக்கைப் பெருக்கம்.

‘`உங்களுக்கு அணில்கள் பிடிக்குமா? வளர்க்கணும்னு அவசியமில்லை. அதுங்களுக்கு அரிசி, தானியங்கள் வைக்கிறது, தண்ணீர் வைக்கிறதுனு சின்னச் சின்ன விஷயங்கள் மூலமா உங்களை அன்பை வெளிப்படுத்தலாம். அதேநேரம் பூனைகள் நடமாடாத இடமா பார்த்து வைக்கிறதும் அவசியம்.

அணில்கள் தென்னை மரத்துலயோ, பனை மரத்துலயோதான் குட்டி போடும். அது உயரமான மரம் என்பதால பூனைகளால ஏற முடியாதுங்கிறதுதான் காரணம். தேங்காய் நார் வெச்சுதான் கூடுகட்டும். அதனால, முடிஞ்சா தென்னை மரங்கள் நடலாம். அந்த மரங்கள் நமக்கும் பலவகைகள்ல உதவும்.

மூணாவதா பண்ணைகளோ, தோட்டத் துடன் வீடுகளோ இருக்கிறவங்க அணில்களை வளர்க்கறதுல முனைப்பு காட்டலாம்.

புலிகளைப் பத்தி, சிட்டுக்குருவிகளைப் பத்தியெல்லாம் கவலைப்படறோம். அப்பாவி அணில்களையும் அமைதியா இழந்துக்கிட்டிருக்கோம். அதைத் தடுக்கணும். அழகான, அன்பான அந்த உயிரினங் களைக் காப்பாத்தணும். அணில்களைப் பத்தின தகவல்களைக் கேட்கவும், தேவைப் படறவங்களுக்குத் தகவல்கள் கொடுக்கவும் காத்திட்டிருக்கேன்...’’ - சூப்பராகச் சொல்கிறார் சூர்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism