Published:Updated:

அன்பு என்பது உங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி! - டிடி (திவ்யதர்ஷினி)

அன்பு என்பது உங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி! - டிடி (திவ்யதர்ஷினி)
பிரீமியம் ஸ்டோரி
அன்பு என்பது உங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி! - டிடி (திவ்யதர்ஷினி)

வாழ்வை மாற்றிய புத்தகங்கள் சாஹா, படங்கள்: சு.குமரேசன்

அன்பு என்பது உங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி! - டிடி (திவ்யதர்ஷினி)

வாழ்வை மாற்றிய புத்தகங்கள் சாஹா, படங்கள்: சு.குமரேசன்

Published:Updated:
அன்பு என்பது உங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி! - டிடி (திவ்யதர்ஷினி)
பிரீமியம் ஸ்டோரி
அன்பு என்பது உங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி! - டிடி (திவ்யதர்ஷினி)

``சிறுவயதில் எனக்குக் கதைப் புத்தகங்கள் படிப்பதில் நிறைய ஆர்வம் இருந்திருக்கிறது. கதைகள் படிக்கும்போது அழகான கற்பனை விரியும். ஜாலியாக இருக்கும். மனம் ஒருவித உற்சாகத்தில் துள்ளும்.  குழந்தைப் பருவம் முழுவதிலும் அம்புலி மாமா புத்தகங்கள்தான் எனக்குத் துணை வந்திருக்கின்றன.

அதற்கடுத்து நான் அதிகம் படித்தது புத்தர் கதைகள். ரொம்பவும் எளிமையான கருத்துகளைச் சொல்லும் கதைகள் அவை. இசிஆரில் மருந்தீஸ்வரர் கோயில் வாசலின் நடைபாதைக் கடைகளில் புத்தர் கதைப் புத்தகங்கள் நிறைய வாங்கிப் படித்திருக்கிறேன். தகவல்களும் தத்துவங்களும் இருக்கும் புத்தகங்களை மட்டுமே ஆங்கிலத்தில் படிப்பேன். ஆங்கிலத்தில் படிப்பதென்றால் சரித்திரம்தான் என் விருப்பமான சப்ஜெக்ட். கதைகள் என்றால் தமிழில் படிப்பதில் கிடைக்கிற திருப்தி வேறு மொழிகளில் கிடைத்ததில்லை. காரணமும் தெரியவில்லை.

அன்பு என்பது உங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி! - டிடி (திவ்யதர்ஷினி)

புத்தகங்கள் வாசிக்கப் பிடிக்கும் என்றாலும் தேடித் தேடிப் போய் புத்தகங்கள் படிக்கிற ஆளில்லை நான். யாராவது படித்துவிட்டு ‘பிரமாதம்... அவசியம் படி...’ என அட்வைஸ் செய்தால் மட்டுமே படிப்பேன்.
சமீபத்தில் படித்தது ‘அன்போஸ்ட்டட் லெட்டர்’. பெயரைப் பார்த்து இது யாரோ, யாருக்கோ எழுதிய கடிதங்களின் தொகுப்பு என நினைத்துக்கொள்ள வேண்டாம்.  டி.டி.ரங்கராஜன் என்பவர் தனது ‘ஃப்ரோஸன் தாட்ஸ்’ புத்தகத்தில் எழுதிய சின்னச் சின்ன கட்டுரைகளின் தொகுப்பு. எந்த விஷயத்தையும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியான புத்தகங்கள்தான் என் சாய்ஸ். அந்தவகையில் ‘அன்போஸ்ட்டட் லெட்டர்்’ முழுவதிலுமே வாழ்க்கையைப் பற்றிய ஆழமான கருத்துகள் எளிமையாகப் பேசப்பட்டிருக்கும்.

‘உங்கள் வாழ்க்கையில் உங்களைத் தேடிவருகிற எவற்றையும்விட உங்களுக்கு நீங்கள் மிக முக்கியம்’ என்கிற வரி எதேச்சையாக என் கண்களில்பட, அது கொடுத்த உந்துதலின் பேரில் அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். இன்னோர் இடத்தில் இப்படியொரு வரி... ‘பெரிய மனம் கொண்டவர்கள் திட்டங்களைப் பற்றி யோசிக்கிறார்கள். அற்ப மனதுக்காரர்கள்தாம் அடுத்தவர்களைப் பற்றி யோசிக்கிறார்கள்’ - எவ்வளவு உண்மை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்பு என்பது உங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி! - டிடி (திவ்யதர்ஷினி)

நம்மில் பலரும் மற்றவரின் சலுகைகளுக்கும் செல்லம் கொஞ்சுதல்களுக்கும் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். அந்த எதிர்பார்ப்பும் அது அப்படியே உங்களுக்குக் கிடைப்பதும் உங்களைப் பலவீனமாக்கிவிடும் என்கிறது இந்தப் புத்தகம். ஆனால், அன்பு என்பது மட்டுமே உங்களை அப்படியே பிரதிபலிக்கிற கண்ணாடியாக இருக்கும்.  நீங்கள் மற்றவர்களுக்கு எப்படிக் காட்சியளிக்க விரும்புகிறீர்களோ, அப்படிக் காட்டத் தெரியாதது அன்பு. அது ஒன்றுதான் உங்களின் சுயத்தைப் பிரதிபலிக்கக் கூடியது. அன்பின் ஆழத்தை இதைவிட அழகாகப் புரியவைக்க முடியுமா? தெரியவில்லை.

நமக்குள்ளிருக்கும் உள்மனப் போராட்டங்கள், உறவுச் சிக்கல்கள், பணியிடத்துக் குழப்பங்கள் முதல் நேர நிர்வாகம் வரை அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான அத்தனை அணுகு முறைகளையும் இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் அவ்வளவு அழகாக விளக்குகின்றன.

நாம் நினைத்துக்கொண்டிருக்கிற அளவுக்கு வாழ்க்கை ஒன்றும் அத்தனை சிக்கலானதல்ல... வாழ்க்கை சிக்கலானதா, சிம்பிளானதா என்பதைத் தீர்மானிப்பவை நம் அணுகுமுறைகள்தாம் என்பதை இந்தப் புத்தகம் எளிமையாகப் புரியவைத்துவிட்டது.  அம்புலி மாமாவுக்கும் புத்தர் கதைகளுக்கும் அடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகு என் அலமாரியில் இடம்பிடித்திருக்கிற புத்தகம் இது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism