Published:Updated:

காற்றிலிருந்து குடிநீர்! - மூக்கில் விரல்வைக்கச் செய்யும் மும்பைப் பெண்

காற்றிலிருந்து குடிநீர்! - மூக்கில் விரல்வைக்கச் செய்யும் மும்பைப் பெண்
பிரீமியம் ஸ்டோரி
காற்றிலிருந்து குடிநீர்! - மூக்கில் விரல்வைக்கச் செய்யும் மும்பைப் பெண்

அசத்தல் ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

‘`இந்தக் கருவி, காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் என்று அந்த இயந்திரத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி விளக்கியபோது, அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்’’ என்று உற்சாகமாகத் தொடங்குகிறார் மும்பைப் பெண் மெஹர் பண்டாரா. ‘அவள் விகடன்’ சார்பாக அவருக்கு வாழ்த்துகள் சொன்னோம்.

``2004-ம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானி ஒருவர்மூலம் இந்தத் தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டேன். இதை இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தும் முயற்சியில் www.watermakerindia.com என்ற வலைதளம் மற்றும் நிறுவனத்தை நிறுவினேன். நாங்கள் தயாரித்த இயந்திரத்தை டெல்லியில் நடந்த தொழில்நுட்பக் கண்காட்சியில் விளக்கியபோது, சாதனத்தைச் சுற்றிவந்து, கண்ணுக்குத் தெரியாமல் எங்கிருந்தாவது தண்ணீர்க் குழாய்கள் செருகப்பட்டுள்ளனவா என சந்தேகத்துடன் பார்வையாளர்கள் பரிசோதித்தனர்’’ என்று சிரிப்பவர், அதன் தொழில்நுட்பத்தையும் விளக்கினார்...

காற்றிலிருந்து குடிநீர்! - மூக்கில் விரல்வைக்கச் செய்யும் மும்பைப் பெண்

``வீட்டில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியின் தொழில்நுட்பம்தான் இதில் பயன்படுத்தப்படுகிறது. காற்று மண்டலத்தில் உள்ள ஈரத்தின் அடர்த்தியைக் குளிரச்செய்து, இதில் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. பின் வடிகட்டி, சுத்தமான நீர் எடுக்கப்படுகிறது. மின்சாரத்தில் செயல்படும் இந்த இயந்திரம் 25-32 டிகிரி வெப்பநிலையில் இயங்கும்போது, 65% - 75% ஈரப்பதம் கிடைக்கும். உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய தர நிர்ணயக் கழகம் (BIS - Bureau of Indian Standards) ஆகியவற்றிடமிருந்து, இந்த இயந்திரத்தின் மூலம் பெறப்படும் நீர், `பாதுகாப்பான குடிநீர்’ என்பதற்கான சான்றிதழைப் பெற்றுள்ளோம். இவற்றை விளக்கிக் கூறி, மக்களிடம் ஆர்டர்களைப் பெற ஆரம்பித்தோம்’’ என்கிற மெஹர், வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்த வசதியாக 120 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய இயந்திரம் மற்றும் ஐந்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இயந்திரம் தயாரித்து இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காற்றிலிருந்து குடிநீர்! - மூக்கில் விரல்வைக்கச் செய்யும் மும்பைப் பெண்

``பெண்கள் ஒரு புதிய முயற்சியை எடுக்கும்போது, பாராட்டுகளைவிட எதிர்ப்பு, கேலிகளே முதலில் கிளம்பும். அவற்றைக் கடந்து வெற்றிக்காகக் காத்திருக்க வேண்டும்.’’

- அழகாகப் பேசி முடிக்கிறார், அசத்தல் சாதனையாளர் மெஹர்.

`ஜாலிமுடி’யில் ஒரு சாதனை!

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜாலிமுடி கிராமத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. அந்த ஊரின் பஞ்சாயத்து, தீர்வு தேடி மெஹரை அணுக, 2009-ம் ஆண்டு அங்கு காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை நிறுவிக்கொடுத்தார் மெஹர். உலகிலேயே முதன்முறையாக இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கிராமம் என்ற பெருமையைப் பெற்ற ஜாலிமுடி, இன்றுவரை அதன் மூலம் தன் தண்ணீர் தேவையை வெற்றிகரமாக ஈடுசெய்து வருகிறது. 2015-ம் ஆண்டு இரண்டாவது காற்று நீர் நிலையத்தை குஜராத் மாநிலம் காந்தி கிராமத்தில் நிறுவியுள்ளது மெஹர் பண்டாராவின் நிறுவனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism