Published:Updated:

ஸ்பெஷல் பிளவுஸ், ஈஸி டிசைனிங்!

ஸ்பெஷல் பிளவுஸ், ஈஸி டிசைனிங்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்பெஷல் பிளவுஸ், ஈஸி டிசைனிங்!

வீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் சாஹா படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

ஸ்பெஷல் பிளவுஸ், ஈஸி டிசைனிங்!

வீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் சாஹா படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

Published:Updated:
ஸ்பெஷல் பிளவுஸ், ஈஸி டிசைனிங்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்பெஷல் பிளவுஸ், ஈஸி டிசைனிங்!

புடவை வாங்குவதற்குத் தேவைப்படுகிற மெனக்கிடல், அதற்கான மேட்ச்சிங் பிளவுஸுக்கும் தேவைப்படுகிறது. சில நேரங்களில் புடவையைவிடவும் அதிகமான தேடலும் தேவைப்படுவதுண்டு. புடவையின் விலையைவிடப் பல மடங்கு அதிகம் கொடுத்து ஜாக்கெட் வாங்குகிறவர்களும் இருக்கிறார்கள்.

டிசைனர் பிளவுஸ் என்றால் அதில் ஆரி அல்லது ஜர்தோஸி வேலைப்பாடு இருக்க வேண்டும். ஆனால், சிம்பிளான டிசைனுக்கே சில நூறுகள் வைக்க வேண்டும். செலவைப் பற்றிக் கவலையில்லாதவர்களுக்கு இன்னொரு பிரச்னை... இந்த பிளவுஸ் டிசைனிங் செய்ய ஆகும் நேரம். குறைந்தது பத்து நாள்களாவது காத்திருந்தால் மட்டுமே டிசைனர் பிளவுஸ் சாத்தியம். ஊரெங்கும் டிசைனர் பிளவுஸ் மோகம் பரவி இருக்கும்போது, சாதாரண ஜாக்கெட் அணிந்தால், தான் மட்டும் தனித்துத் தெரிவோமோ என்கிற தயக்கம் பலருக்கும் உண்டு.

ஸ்பெஷல் பிளவுஸ், ஈஸி டிசைனிங்!

மதுரையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் விஜயலட்சுமி இதற்கெல்லாம் மாற்றுவழி கண்டு பிடித்திருக்கிறார். டிசைனர் பிளவுஸில் பெண்கள் சந்திக்கிற எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்கிறது இவரது டெக்னிக். ஆரி, ஜர்தோஸி, எம்ப்ராய்டரிங் என எல்லா வேலைப்பாடுகளும் செய்கிறார் இவர்.

``என்னுடைய ஜாக்கெட் வித்தியாசமா இருக்கணும்... மத்தவங்களைக் கவனிக்க வைக்கிற மாதிரி இருக்கணும்... அதுக்கேத்தபடி டிசைன் பண்ணிக்கொடுங்கங்கிற கோரிக்கையோடுதான் பலரும் வருவாங்க. ஆயிரம், இரண்டாயிரம் செலவழிச்சுப் பண்ணிக்கிட்டாலும் கடைசியில அது அப்படியொண்ணும் ஸ்பெஷலா இல்லையேங்கிற நினைப்புதான் அவங்களுக்கு இருக்கு. எல்லாருமே ஒரே மாதிரி டிசைன்ல போடற மாதிரி இருக்கு. பெரும்பாலான டெய்லரிங் ஷாப்ல மெஷின் எம்ப்ராய்டரி முறையில இந்த வொர்க்கை எல்லாம் பண்ணிக் கொடுத்துடறாங்க. இதுக்கு இவ்வளவு செலவும் நேரமும் தேவையே இல்லை. சிம்பிளான முறையில அவங்கவங்களே தன்னோட உடைகளுக்கு டிசைன் பண்ணிக்கிற முறையைத்தான் நான் இப்போ கத்துக் கொடுத்துக்கிட்டிருக்கேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்பெஷல் பிளவுஸ், ஈஸி டிசைனிங்!

ரெயின்போ ஸ்டோன்ஸ்னு ஒண்ணு இருக்கு. அதுல பல கலர்ஸ் பளபளக்கும். லிக்விட் எம்ப்ராய்டரி டியூப் கிடைக்குது. குந்தன் ஸ்டோன், பாசி மணி, செயின், க்ளூனு இதுக்குத் தேவையான பொருள்கள் ரொம்பக் கம்மி. தையல் மெஷினோ, எம்ப்ராய்டரி வளையமோகூடத் தேவையில்லை. கையா லேயே தச்சுடலாம். பொதுவா டிசைனர் பிளவுஸ்னா வொர்க் பண்ணி முடிச்சபிறகுதான் தைக்கக் கொடுப்போம். ஆனா, நான் பண்ற சிம்பிள் பிளவுஸ் டிசைனிங்ல ஏற்கெனவே தச்சு நம்மகிட்ட உள்ள பிளெயின் பிளவுஸ்லயும் டிசைன் பண்ணிக்கலாம். திடீர்னு `ஒரு விசேஷத்துக்குப் போகணும்... டிசைனர் பிளவுஸ் போட்டுக்கிட்டா நல்லாருக்கும்’னு தோணினா, அரை மணி நேரம் செலவழிச்சு நாமளே டிசைன் பண்ணிடலாம். புடவை, சல்வார், குழந்தைங்களுக்கான பாவாடை - சட்டைனு எல்லா உடைகள்லயும் இந்த வொர்க் பண்ணலாம். காட்டன், சில்க், சிந்தெடிக்னு எந்த மெட்டீரியல்லயும் செய்ய முடியும்.

ஒரு பிளவுஸுக்கு கிராண்டா டிசைன் பண்ண 100 ரூபாய் செலவழிச்சா போதும். மத்தவங்களுக்குப் பண்ணிக் கொடுக்கிறதுன்னா 500 ரூபாய் வாங்கலாம். இந்த வொர்க் பண்ணின உடைகளை வாஷிங் மெஷின்ல துவைக்க வேண்டாம்னு அட்வைஸ் பண்ணுவோம். கைகளாலத் துவைச்சுக் காயவெச்சு, பிறகு ரிவர்ஸ் அயர்னிங் பண்ணினாலே போதும்.

என்ன டிசைன் விருப்பமோ அதை இதுல கொண்டுவர முடியும். பணத்தையும் மிச்சப்படுத்தணும், தினம் ஒரு டிசைன்லயும் அசத்தணும்னு நினைக்கிறவங்களுக்கு  சரியான சாய்ஸ் இந்த ஈஸி பிளவுஸ் டிசைனிங்’’ என்கிற விஜயலட்சுமியிடம் சென்னை மற்றும் மதுரையில் இதற்கான பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம். 500 ரூபாய் கட்டணத்தில், அரைநாள் பயிற்சியில் நீங்களும் ஆகலாம் பிளவுஸ் டிசைனர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism