Published:Updated:

இதய நோயாளிகளுக்கு ஏற்ற திராட்சை!

இதய நோயாளிகளுக்கு ஏற்ற திராட்சை!
பிரீமியம் ஸ்டோரி
இதய நோயாளிகளுக்கு ஏற்ற திராட்சை!

வைத்தியம் எம்.மரிய பெல்சின்

இதய நோயாளிகளுக்கு ஏற்ற திராட்சை!

வைத்தியம் எம்.மரிய பெல்சின்

Published:Updated:
இதய நோயாளிகளுக்கு ஏற்ற திராட்சை!
பிரீமியம் ஸ்டோரி
இதய நோயாளிகளுக்கு ஏற்ற திராட்சை!

திராட்சை... ‘Vitis vinifera’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட திராட்சையை,  கொடி முந்திரி என்றும் சொல்வார்கள்.  உலகில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும் பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, விதையில்லா திராட்சை போன்றவையே பெரும்பாலும் நம் பகுதியில் கிடைக்கின்றன. மொராக்கோ, போர்ச்சுக்கல், ஜெர்மனி, ஈரான், மத்திய ஐரோப்பா, ஆசியா பகுதிகளே ஆரம்பத்தில் திராட்சையை உணவுப் பொருளாகப் பயன்படுத்தத் தொடங்கின. இன்று உலகம் முழுக்கவே திராட்சைப் பிரியர்கள் அதிகரித்துள்ளனர்.

இதய நோயாளிகளுக்கு ஏற்ற திராட்சை!

திராட்சையில் ஒயின், வினிகர் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. திராட்சை விதையில் இருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. திராட்சையில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச் சத்து போன்ற சத்துகள் நிறைந்திருக்கின்றன. திராட்சையைப் பழமாக மட்டுமல்ல... ஜூஸாக்கியும் உலரவைத்தும் கூட சாப்பிடலாம். உடலில் உள்ள கெட்ட நீர், கபம், வாய்வு, சளி, குடல் கழிவுகள், உப்புகள் போன்றவற்றைக் கரைத்து வெளியேற்றும் திறன் திராட்சை ரசத்துக்கு உண்டு. இதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டவர்கள், பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டவர்கள்  அவசியம் சாப்பிட வேண்டிய பழம் இது.

கர்ப்பப்பைக் கோளாறு உள்ள பெண்கள், உடல் வளர்ச்சி குறைந்தவர்கள், பலவீனமானவர்கள், சரும நோய், மூட்டுவலி, மூட்டு வீக்கம் உள்ளவர்கள் தொடர்ந்து திராட்சை சாப்பிட்டுவந்தால் நிவாரணம் கிடைக்கும். திராட்சை விதைகளுக்குப் புற்றுநோய் செல்களைக் கரைக்கும் திறன் உண்டு என்று அண்மையில் கண்டறிந்திருக்கிறார்கள். 

பச்சைத் திராட்சையைப் போலவே உலர்திராட்சையிலும் நிறைய சத்துகள் உள்ளன. குறிப்பாக வைட்டமின் பி மற்றும் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளன. குழந்தைகளின் எலும்புகள் உறுதியாகவும், பற்கள் வலுப்பெறவும் தேவையான கால்சியம் உலர்திராட்சையில் நிறைந்திருக்கிறது. இரவு உணவுக்குப்பின் பத்து உலர்திராட்சைப் பழங்களைப் பால் சேர்த்துக் காய்ச்சிச் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எலும்பு மஜ்ஜைகளில் ரத்தம் ஊறவும் உதவுகிறது உலர் திராட்சை. அவ்வப்போது சில திராட்சைகளை வாயில் போட்டு மென்று, அதன் சாற்றை மெதுவாக விழுங்கி வந்தால் எலும்பு மஜ்ஜைகள் பலமடைவதோடு, ரத்தம் அதிகமாகச் சுரக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்குப் புத்துணர்வைத் தரும். கர்ப்பிணிகள் உலர்திராட்சையை பாலில் கலந்து கொதிக்கவைத்துக் குடித்துவந்தால், பிறக்கும் குழந்தை நல்ல உடல்நலம் பெறும்.

மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி தீரவும், மலச்சிக்கல் விலகவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், மூலநோயைக் குணமாக்கவும் அற்புத மருந்தாகச் செயல்படக்கூடியது உலர்திராட்சை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism