Published:Updated:

ஜோ... ஜோ... ஜோதிகா, டான்ஸ்... டான்ஸ்... டாப்ஸி!

ஜோ...  ஜோ...  ஜோதிகா, டான்ஸ்... டான்ஸ்... டாப்ஸி!
பிரீமியம் ஸ்டோரி
ஜோ... ஜோ... ஜோதிகா, டான்ஸ்... டான்ஸ்... டாப்ஸி!

ஸ்டார்ஸ்கே.ஜி.மணிகண்டன்

ஜோ... ஜோ... ஜோதிகா, டான்ஸ்... டான்ஸ்... டாப்ஸி!

ஸ்டார்ஸ்கே.ஜி.மணிகண்டன்

Published:Updated:
ஜோ...  ஜோ...  ஜோதிகா, டான்ஸ்... டான்ஸ்... டாப்ஸி!
பிரீமியம் ஸ்டோரி
ஜோ... ஜோ... ஜோதிகா, டான்ஸ்... டான்ஸ்... டாப்ஸி!

ஐ...  ஐஸ்வர்யா!

மணிரத்னம் இயக்கத்தில் முதன்முறையாக ஜோதிகா நடிக்கும் படத்தில் இப்போது ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்திருக்கிறார். தெலுங்கு நடிகர் நானி ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் இப்படம், தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. ஏற்கெனவே வெற்றிமாறனின் ‘வடசென்னை’, கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மணிரத்னத்தின் பட வாய்ப்பும் கிடைத்திருப்பதால் ஹாட்ரிக் ஹாப்பி மோடில் இருக்கிறார். ‘மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. அது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி!’ என சியர்ஸ் காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஜோ...  ஜோ...  ஜோதிகா, டான்ஸ்... டான்ஸ்... டாப்ஸி!

த்ரில்லர்... த்ரிஷா!

‘96’, ‘சதுரங்கவேட்டை 2’, நிவின் பாலி்யுடன் மலையாளப் படம்  என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் த்ரிஷா, தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை களை மட்டுமே அதிகமாகத் தேர்ந்தெடுக்கிறார். இப்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘கர்ஜனை’ ஹீரோயினை மையப்படுத்திய கதை. அடுத்து, புதுமுக இயக்குநர் திருஞானம் இயக்கும் ஹீரோயினை மையப்படுத்திய ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் டாக்டராக நடிக்கிறார். இதுதவிர, ‘இவள் அழகு’ குறும்படத்தை இயக்கிய விஜய் கணபதியும் ஹீரோயினை மையப்படுத்திய கதை ஒன்றை த்ரிஷாவுக்குச் சொல்ல, ‘ஓகே’ சொல்லியிருக்கிறார் த்ரிஷா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோ...  ஜோ...  ஜோதிகா, டான்ஸ்... டான்ஸ்... டாப்ஸி!

லட்சம்... லட்சுமி!

ராய் லட்சுமி முதன்முறையாக பாலிவுட்டில் நடித்திருக்கும் படம் ‘ஜூலி-2’. இப்படத்தின் டீஸர் வெளியான சில நாள்களிலேயே 30 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். முதல் படத்திலேயே கிளாமரில் கலக்கியிருக்கும் ராய் லட்சுமியைப் பார்த்தும், டீஸருக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்தும் அசந்து போயிருக்கிறது பாலிவுட்.

ஜோ...  ஜோ...  ஜோதிகா, டான்ஸ்... டான்ஸ்... டாப்ஸி!

டிக் டிக்... நிவேதா!

சில நாள்களுக்கு முன் சோஷியல் மீடியாவில் இருந்து முற்றிலும் விலகுவதாக ட்வீட் தட்டியிருந்தார் நடிகை நிவேதா பெத்துராஜ். ‘ஏன் என்னாச்சு?’, ‘தலைவி பிக் பாஸுக்குப் போறாங்களோ?’, ‘தேவதை இல்லாத ட்வீட்டரில் குடியிருக்க மாட்டோம்’ என விதவிதமான கமெண்டுகளால் திணறடித்திருக்கிறார்கள் ரசிகர்கள். நிவேதா பெத்துராஜ் சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருப்பதற்குக் காரணம் ‘டிக் டிக் டிக்’, ‘பார்ட்டி’, ‘மெண்டல் மதிலோ’ என தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதுதான்்.

ஜோ...  ஜோ...  ஜோதிகா, டான்ஸ்... டான்ஸ்... டாப்ஸி!
ஜோ...  ஜோ...  ஜோதிகா, டான்ஸ்... டான்ஸ்... டாப்ஸி!

டாப் ... டாப்ஸி!

தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லையென்றாலும், பாலிவுட்டில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் டாப்ஸி. ‘நாம் சபானா’ படத்துக்குப் பிறகு ‘டட்கா’வில் நடித்துக்கொண்டிருக்கும் டாப்ஸி, ‘ஜூட்வா-2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக ஹீரோ வருண் தவானுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார். ஜெய்ப்பூர் நேஷனல் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற இவர்கள் இருவரும் மாணவர்கள் முன்னிலையில் நடனமாடி அசத்தியிருக்கிறார்கள். நடிகை டாப்ஸியின் இந்த டான்ஸ் வீடியோதான் இந்த வார வைரல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism