Published:Updated:

வைரம் வாங்கப் போறீங்களா?

வைரம்  வாங்கப் போறீங்களா?
பிரீமியம் ஸ்டோரி
வைரம் வாங்கப் போறீங்களா?

இதையெல்லாம் அறிந்து கொள்வோம்!ஷாப்பிங் கைடுஎம்.ஆர்.ஷோபனா, படங்கள்: மீ.நிவேதன்

வைரம் வாங்கப் போறீங்களா?

இதையெல்லாம் அறிந்து கொள்வோம்!ஷாப்பிங் கைடுஎம்.ஆர்.ஷோபனா, படங்கள்: மீ.நிவேதன்

Published:Updated:
வைரம்  வாங்கப் போறீங்களா?
பிரீமியம் ஸ்டோரி
வைரம் வாங்கப் போறீங்களா?

பொதுவாக, தங்க நகைகள் வாங்கும்போது `எப்படி வாங்க வேண்டும்; எதையெல்லாம் கவனிக்க வேண்டும்’ என்பதில் பலருக்கும் அனுபவம் இருக்கலாம். ஆனால், வைர நகை விஷயத்தில் அந்த அனுபவம் குறைவாகவே இருக்கும். வைரம் வாங்கும்போது என்னனென்ன விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும், எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார் சென்னை கீர்த்திலால்ஸ் ஜுவல்லர்ஸின் இயக்குநர் சீமா மேத்தா.

வைர நகைகள் வாங்கும்போது கட், கலர், கிளாரிட்டி, காரட்டேஜ் ஆகியவற்றைக் கவனத்தில்கொள்ள வேண்டும். இவை, வைரத்தின் தரத்தை நிர்ணயிக்கும் முக்கியக் காரணிகள்.

*   கட் (Cut) என்பது ஒரு வைரத்தை வடிவமைத்திருக்கும் விதம். இதை விற்பனையாளர்கள் எக்ஸலன்ட், வெரிகுட், குட் எனத் தரம் பிரித்து வகைப்படுத்துவார்கள்.

*   கலர் (Color) - ஒரு வைரம் எந்த அளவுக்கு நிறமற்று இருக்கிறதோ, அந்த அளவுக்குத் தரமாக இருக்கிறது என்று அர்த்தம். ஆங்கில எழுத்துகளின் D, E, F, G, H, I எனத் தொடங்கி Z வரை வைரத்தின் நிறத்தை மதிப்பிடுவார்கள். இதில், D என்பது மிகச்சிறந்த தரம். Z  என்பது மோசமான தரம்.

வைரம்  வாங்கப் போறீங்களா?

*   காரட் (Carat) - தங்க நகைகளுக்கும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதால், இந்த வார்த்தை பரிச்சயமாகியிருக்கும். ஆனால், காரட் என்ற வார்த்தையை முதன்முதலில் வைரத்தின் எடையைக் குறிக்கவே பயன் படுத்தினார்கள். எனவே, வைர நகைகளில் காரட்டேஜ் (Caratage) கவனிக்கப்பட வேண்டியது.

*   க்ளாரிட்டி (Clarity) - ஒரு வைரத்தின் துல்லியத் தன்மையைக் குறிப்பது. நாம் சாதாரணமாகப் பார்ப்பதை விடவும், பத்து மடங்குப் பெரிதாக்கியே இதைக் கணக்கிடுவார்கள். IF /VVS1/VVS2/VS1/VS2/SI1/SI2 - இவையெல்லாம் தரம்வாரியாக பிரிக்கப்பட்ட வகைகளின் குறியீடுகள்.

 ஒவ்வொரு வைர நகைக்கும் அதன் தரத்துக்கான சான்றிதழ் தரப்படும். GIA எனப்படும் ஜெம்மாலஜி இன்ஸ்டிட்யூட் ஆஃப் அமெரிக்கா நிறுவனத்தின் முத்திரை, வைரத்துக்கான சான்றிதழில் இருக்கும். வழக்கமாக வாங்கும் கடையாக இருந்தாலும், நம்பத்தகுந்த  இந்தச் சான்றிதழ் மூலம் தரத்தைச் சரிபார்க்கவும்.

  GIA சான்றிதழில் பத்து எண்கள் இருக்கும். அதே பத்து எண்கள் நீங்கள் வாங்கும் வைர நகையில் பதிக்கப் பட்டிருக்கும். வைர நகையை  பூதக்கண்ணாடியில் பார்த் தால், இந்த எண்கள் தென்படும். வைர நகைக்கடைகளில் பூதக்கண்ணாடியைக் கேட்டு வாங்கி, இதை சரிப் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தச் சான்றிதழ் உள்ள வைர நகைகளை, அமெரிக்காவிலும் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

வைர நகையை வெளிச்சத்தில் காட்டினால், அதன் பிம்பம் ஒளிரும். இவ்வாறு ஒளிரும்போது, வைரத்தில் `வானவில்’ வண்ணங்கள் உருவாகும். இது நல்ல வைரத்துக்கான குறியீடு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வைரம்  வாங்கப் போறீங்களா?

வைரத்தின் குறைபாடுகள் வெவ்வேறு விதமாக இருக்கும். சில வைரங்களில் கறுப்புப் புள்ளிகள் தென்படும். சில வைரங்களில் `ஃபெதர்ஸ்' (Feathers) என்கிற மங்கலான சில புள்ளிகள் தெரியும். சில வைரங்களின் உட்புறத்தில் வெட்டுப்பட்டது போன்று இருக்கும்.

*   மைக்ரோஸ்கோப் மூலம் வைரத்தின் க்ளாரிட்டியை கண்டறிய முடியும். சாரின் மெஷின் (Sarin Machine) என்ற கருவி மூலம், ஒரு வைரம் சரியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதா அல்லது ஏதேனும் குறைபாடு உள்ளதா எனக் கண்டறியலாம். வைரத்தைத் தரம் பிரிக்கவும் இந்தக் கருவியைப் பயன்படுத்துவார்கள். ஒரு வாடிக்கையாளராக நீங்கள் கேட்கும்பட்சத்தில், வைர நகை உருவாக்கப்படும் அல்லது விற்பனை செய்யப்படும் இடத்தில் இந்தக் கருவியைப் பயன்படுத்தி, உங்கள் ஆபரணத்தைச் சரி்பார்த்துக்கொள்ளலாம்.

தரம் அறிவோம்!

.எஃப் - குறையில்லாதது; பத்து மடங்கு பெரிதாக்கிப் பார்க்கும்போதும் ஒரு குறைபாடும் இருக்காது.

வி.வி.எஸ் - பத்து மடங்கு பெரிதாக்கிப் பார்க்கும்போது சிறு குறைபாடு இருக்கும்.

வி.எஸ் - பத்து மடங்கு பெரிதாக்கிப் பார்க்கும்போது, வி.வி.எஸ்ஸைவிட குறைபாடு சற்று அதிகம் தெரிவது.

எஸ்.ஐ - குறைபாடு கொண்டது. பத்து மடங்கு பெரிதாக்கிப் பார்க்கும்போது, குறைபாடுகள் அப்பட்டமாகத் தெரியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism