Published:Updated:

ஆர்வம் மட்டுமே மூலதனம்... அசத்தலா சம்பாதிக்கலாம் வாங்க!

ஆர்வம் மட்டுமே மூலதனம்... அசத்தலா சம்பாதிக்கலாம் வாங்க!
பிரீமியம் ஸ்டோரி
ஆர்வம் மட்டுமே மூலதனம்... அசத்தலா சம்பாதிக்கலாம் வாங்க!

வாய்ப்புகள் ஆயிரம் ஆர்.வைதேகி, படங்கள்: க.பாலாஜி

ஆர்வம் மட்டுமே மூலதனம்... அசத்தலா சம்பாதிக்கலாம் வாங்க!

வாய்ப்புகள் ஆயிரம் ஆர்.வைதேகி, படங்கள்: க.பாலாஜி

Published:Updated:
ஆர்வம் மட்டுமே மூலதனம்... அசத்தலா சம்பாதிக்கலாம் வாங்க!
பிரீமியம் ஸ்டோரி
ஆர்வம் மட்டுமே மூலதனம்... அசத்தலா சம்பாதிக்கலாம் வாங்க!

நிறைய பேசும் பெண்கள் அதிகப்பிரசங்கிகளாக அறியப்பட்டது கடந்த காலம். இன்று பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிற திறமைகளில் முக்கியமான ஒன்று... பேச்சு. பேசத் தெரிந்த பெண்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள் என்பதற்குச் சரியான உதாரணமாக இருக்கிறார் நந்தினி. படித்துப் பெற்ற பட்டத்தையும், பட்டம் பெற்றுத் தந்த பதவியையும் தாண்டி, இன்று நந்தினியை அடையாளத்துக்குரியவராக மாற்றியிருப்பது அவரது பேச்சு. எம்.சி எனப்படுகிற `மாஸ்டர் ஆஃப் செரிமனி'யாகப் பிரபலம் இவர்.

அதென்ன எம்.சி? கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் முதல் கல்யாண வரவேற்பு வரை சகல நிகழ்ச்சிகளையும் சுவாரஸ்யமாக நடத்திக் கொடுப்பவரே எம்.சி. `பேசத் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, பேசத் தயங்குபவர்களும் சரியான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் இருந்தால் இந்தத் துறையில் கொடிகட்டிப் பறக்கலாம்' என்கிறார் நந்தினி.

ஆர்வம் மட்டுமே மூலதனம்... அசத்தலா சம்பாதிக்கலாம் வாங்க!

``இன்ஜினீயரிங்கும் ஹெச்.ஆரும் படிச்சிருக்கேன். பாட்டு, டான்ஸ்னு எல்லாம் தெரியும். `ஹெச்.சி.எல்'லில் ஹெச்.ஆரா  வேலை பார்த்திருக்கேன். ஐ.டி வேலையில இருக்கும்போதே ஈவென்ட்ஸ் நடத்தறதுல ஆர்வமாயிருந்தேன்.  ஒருகட்டத்துல ஈவென்ட் மேனேஜ்மென்ட்டுல எனக்கு அனுபவம் கிடைச்சதும் முழு நேரமும் அதையே செய்ய முடிவெடுத்து வேலையை விட்டேன். `அதிகம் படிக்காதவங்க பண்ற வேலையை நீ ஏன் பண்ணணும்? படிப்பும் பெரிய வேலையும் இருக்கிறபோது இப்படியொரு வேலை தேவையா'னு கேட்காதவங்களே இல்லை. என் பெற்றோர் மட்டும் பெரிய சப்போர்ட்டா இருந்தாங்க. அது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

மெஹந்தி ஃபங்ஷன், கார்ப்பரேட் ஈவென்ட்ஸ்னு சின்னதும் பெரிசுமா நிறைய நிகழ்ச்சிகள் பண்ணினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்வம் மட்டுமே மூலதனம்... அசத்தலா சம்பாதிக்கலாம் வாங்க!

அனுபவம் சேர்ந்ததும் நானே சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிச்சேன். இன்னிக்கு என் காலண்டர்ல குறிக்கப்படாத தேதிகளே இல்லைங்கிற அளவுக்கு எல்லா நாள்களும் நான் ஈவென்ட்ஸ்ல பிஸி...'' - நம்பிக்கையால் வென்ற கதை சொன்ன நந்தினி, `எம்.சி' பணி பற்றி விவரமாகப் பேசினார்...
 
``எம்.சி வேலைங்கிறது சாதாரணமானதில்லை. பேச்சுத் திறமையுடன் வேறு சில தகுதிகளும் அவசியம். எம்.சி-க்கான முக்கியத் தகுதி கிரியேட்டிவிட்டி. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் புதுசுப் புதுசா யோசிக்கணும். சில நிகழ்ச்சிகளுக்கு யோசிக்க நேரமிருக்கும். சிலதுக்கு இருக்காது. ஸ்பாட்டுக்குப் போய் கிடைக்கிற கொஞ்ச நேரத்துல அதுக்குத் தயாராகிற திறமையும் வேணும்.

சங்கீத் மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு முன்னாடியே தேதி குறிச்சுடறதால, பிளான் பண்ண டைம் இருக்கும். ஒவ்வொரு ஈவென்ட்டுக்கும் ஒரு பேட்டர்ன் இருக்கும். உதாரணத்துக்கு சங்கீத் பத்திச் சொல்றேன். மாலை 6 மணியிலேருந்து கெஸ்ட் டெல்லாம் வர ஆரம்பிப்பாங்க. 7.30 மணிக்கு மேலதான் கூட்டம் ஏறும். அந்த இடைப்பட்ட நேரத்துல டேபிள் கேம்ஸ் அரேன்ஜ் பண்ணுவோம். முதல்ல வரும் கெஸ்ட் ரொம்ப நேரம் வெயிட் பண்ற மாதிரி ஃபீல் பண்ணுவாங்க. அவங்களுக்குப் போரடிக்காம இருக்கிறதுக்கான கேம்ஸ் இது. மெஹந்தி ஸ்டால்களும் போடுவோம். அப்புறம் கூட்டம் வர ஆரம்பிச்சதும் அத்தனை பேரையும் ஈடுபடுத்தற மாதிரியான விஷயங்களைச் செய்வோம். மணமக்களைக் கட்டாயம் டான்ஸ் பண்ண வைப்போம். இதுல இன்டர்னல் டான்ஸர்கள், எக்ஸ்டர்னல் டான்ஸர்கள்னு இருக்காங்க. மணமக்கள் வீட்டுலயே டான்ஸ் தெரிஞ்சவங்களை வெச்சும் பண்ணலாம். இல்லைன்னா, வெளியிலேருந்து  கூட்டிட்டு வந்தும் டான்ஸ் பண்ண வைப்போம். `டிஜே'ன்னு சொல்ற டிஸ்க் ஜாக்கிகளும் இருப்பாங்க. `டிஜே' வேணாம்னு சொல்றவங்களுக்கு நாங்களே பாட்டு பிளே பண்ணுவோம். இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு வரும் முதல் விருந்தாளி முதல் கடைசி விருந்தாளி வரைக்கும் எல்லாரையும் அதுல ஈடுபடுத்தற மாதிரியான திறமை எம்.சி-க்கு முக்கியம்...'' என்பவர், ஒரே நாளில் நான்கைந்து நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுக்கும் அளவுக்கு சூப்பர் பிஸி.

பகுதி நேர வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்தத் துறையில் வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதையும் சொல்கிறார் நந்தினி. கடைத்திறப்பு முதல் காம்பியரிங் வரை எல்லாவற்றுக்கும் பிரபல முகங்களைத் தேடும் நிலையில் பிரபலமாகாத முகங்களுக்கு வாய்ப்புகள் எப்படி சாத்தியம்?

ஆர்வம் மட்டுமே மூலதனம்... அசத்தலா சம்பாதிக்கலாம் வாங்க!

``ஒருநாளைக்கு சென்னையில மட்டுமே ஆயிரக்கணக்கான ஈவென்ட்ஸ் நடக்குது. எல்லாமே பிரமாண்டமான ஈவென்ட்ஸ்னு சொல்ல முடியாது.  மொத்த நிகழ்ச்சியோட பட்ஜெட்டே சில ஆயிரங்களா இருக்கிறபோது, பிரபலமான ஆட்களை எம்.சி பண்ணக் கூப்பிட முடியாது. தினமும் நூற்றுக்கணக்கான பிறந்த நாள் பார்ட்டிகள் நடக்குது. அதுக்கெல்லாமும் பிரபல முகங்களைக் கூப்பிட முடியாது. அதனால இந்தத் துறையில வாய்ப்புகள் எக்கச்சக்கமா கொட்டிக்கிடக்கு. தன்னைத் தயாரா வெச்சுக்கிறவங்களுக்கு வாய்ப்பு தானா தேடிவரும். கார்ப்பரேட் நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரைக்கும் அவங்க சீரியல், சினிமா ஆட்களைக் கூப்பிட மாட்டாங்க. அங்கேயும் புதுமுகங்களுக்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு.

தவிர, ஈவென்ட் மேனேஜ்மென்ட்டுல கொடுக்கப்படற பயிற்சிகள் ரொம்ப பிரத்யேகமா இருக்கும். எந்த நிகழ்ச்சியை எப்படி நடத்திக் கொடுக்கணும்னு சில விதிமுறைகள் இருக்கு. முறைப்படி அது படிச்சவங்களாலதான் சரியா பண்ண முடியும். பிரபலமா இருக்கிற காரணத்தாலேயே எல்லாராலயும் அப்படிப் பண்ணிட முடியாது. பிரபலங்களுக்கு இந்த நுணுக்கங்கள் தெரியாது. நான் கேம்ஸ் ஜாக்கியாகவும் இருக்கேன். அதாவது எந்த நிகழ்ச்சிக்கு, என்ன மாதிரியான கேம்ஸ் நடத்தணும்கிறதுக்கும் பயிற்சிகள் இருக்கு. முறைப்படி அந்தப் பயிற்சிகளை எடுத்துக்கிட்டவங்களாலதான் அதைச் சரியா பண்ண முடியும்.

ஆர்வம் மட்டும்தான் இதுக்கான மூலதனம். மத்தபடி வெறும் ஆறே மாசப் பயிற்சியில ஒருத்தரை எம்.சி-க்காகத் தயார்படுத்திடலாம். ஒன்றுக்கு மேலான மொழிகள் தெரிஞ்சிருக்கிறது ப்ளஸ். தமிழ்லதான் நிகழ்ச்சி நடத்திக் கொடுக்கணும்னு கேட்கறவங்களும் இருக்காங்க என்பதால மொழி இந்தத் துறைக்குப் பெரிய தடையில்லை. பெண்கள் ஆதிக்கம் செலுத்தற அரிதான துறைகள்ல இதுவும் ஒன்று. திறமையைப் பொறுத்து நாளொன்றுக்குச் சில ஆயிரத்துலேருந்து சில லட்சங்கள் வரைக்கும் சம்பாதிக்க முடியும்...''

- நம்பிக்கை விதைத்து முடிக்கிறார் நந்தினி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism