Published:Updated:

ஐ.டி To ஆடை வடிவமைப்பு, ஷைனி ‘ஷைன்’ ஆன கதை!

ஐ.டி To ஆடை வடிவமைப்பு, ஷைனி ‘ஷைன்’ ஆன கதை!
பிரீமியம் ஸ்டோரி
ஐ.டி To ஆடை வடிவமைப்பு, ஷைனி ‘ஷைன்’ ஆன கதை!

ஓர் ஐடியா உங்கள் வாழ்வை மாற்றிடுமே!எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: தி.விஜய்

ஐ.டி To ஆடை வடிவமைப்பு, ஷைனி ‘ஷைன்’ ஆன கதை!

ஓர் ஐடியா உங்கள் வாழ்வை மாற்றிடுமே!எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: தி.விஜய்

Published:Updated:
ஐ.டி To ஆடை வடிவமைப்பு, ஷைனி ‘ஷைன்’ ஆன கதை!
பிரீமியம் ஸ்டோரி
ஐ.டி To ஆடை வடிவமைப்பு, ஷைனி ‘ஷைன்’ ஆன கதை!

“இப்ப எனக்கே எனக்குன்னு ஒரு கஸ்டமர் கூட்டம் உருவாகியிருக்கு. அவங்க ஒவ்வொருத்தரும்  என்மேல உறுதியான நம்பிக்கை வெச்சிருக்காங்க. அவங்களுக்காகத்தான் இப்படி பரபரப்பா ஓடிட்டிருக்கேன்!” - தீர்க்கமாகப் பேசுகிறார் ஷைனி.

‘Fascino - tutu for princess’ என்கிற முகநூல் பக்கத்தைப் பின்தொடர்பவர்களுக்கு ஷைனியை அறிமுகப்படுத்தத் தேவையில்லை. 4.8 ஸ்டார் ரேட்டிங்குடன் ஒரு லட்சம் ஃபாலோயர்களைக்கொண்ட அந்தப் பக்கத்தில்  அணிவகுக்கும் பெண் குழந்தைகளுக்கான ‘tutu’ (ஒருவகையான பிரத்யேக ஆடை ரகம்) ஆடைகள், முழுக்க முழுக்க கைகளாலேயே தயாரிக்கப்பட்டவை. இந்தியாவில் பலர் ‘டூட்டூ’ ஆடைகள் தயாரித்தாலும், ஷைனியின் கைவண்ணத்தில் ஒரு பிரத்யேகத்தன்மை இருக்கிறது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிசைன்களை உருவாக்கி ‘டூட்டூ’ ஆடை வடிவமைப்பில் மிளிரும் ஷைனி, தொடர்ந்து அம்மா - பெண்ணுக்கான ‘காம்போ பிரின்சஸ்’ உடைகளை வடிவமைக்க ஆரம்பிக்க, அதற்கும் இப்போது அமோக வரவேற்பு.

ஐ.டி To ஆடை வடிவமைப்பு, ஷைனி ‘ஷைன்’ ஆன கதை!

ஓர் அதிகாலைப்பொழுதில் ஷைனியைச் சந்தித்தோம். “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஊட்டியில. அப்பா ஓய்வுபெற்ற தாசில்தார். அம்மா ஊட்டி முனிசிபாலிட்டியோட முன்னாள் கவுன்சிலர். அவங்க டெய்லரிங்  படிச்சவங்கங்கிறதால, எனக்கு ஃபேஷன் டிசைனிங் படிக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா,  வீட்டுல  வற்புறுத்தி என்னை பி.சி.ஏ-ல சேர்த்து விட்டுட்டாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.டி To ஆடை வடிவமைப்பு, ஷைனி ‘ஷைன்’ ஆன கதை!
ஐ.டி To ஆடை வடிவமைப்பு, ஷைனி ‘ஷைன்’ ஆன கதை!

படிப்பை முடிச்சதும் சென்னையில் வேலை. அமேசான் அலுவலகத்தில் நல்ல பொறுப்பு. இந்த நிலையில எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க, கோயம்புத்தூர்ல உள்ள இன்டர்நேஷனல் கம்பெனியில வேலைபார்க்கிற ஆன்ட்டோவுக்கும் எனக்கும் திருமணம் முடிந்தது. எங்க பொண்ணு எடிரியானா பிறந்தா. அதுவரை சென்னையில் வேலை பார்த்திட்டிருந்த நான், குழந்தை எங்க ரெண்டு பேர்கூடவும் வளரணும் என்பதால, வேலையை விட்டுட்டு கோயம்புத்தூர் வந்தேன். இங்கே இருக்கிற ஒரு ஐ.டி நிறுவனத்தில் ‘கார்ப்பரேட் டிரெய்னிங் மேனேஜர்’ வேலை கிடைச்சது.

ஐ.டி To ஆடை வடிவமைப்பு, ஷைனி ‘ஷைன்’ ஆன கதை!
ஐ.டி To ஆடை வடிவமைப்பு, ஷைனி ‘ஷைன்’ ஆன கதை!

பாப்பாவோட முதல் பிறந்த நாள் வந்தப்போ, ஒரு ‘டூட்டூ’ டிரஸ் வாங்கினேன். அதைப் பிரிச்சுப் பார்த்தப்போ, அந்த அழகு என் கண்களைக் கவர்ந்தது. யூடியூப், கூகுள்னு ‘டூட்டூ’ பத்தி தேடிக் கத்துக்க ஆரம்பிச்சேன். அதுக்கான மெட்டீரியலை சீனாவில் ஆர்டர் செய்து வாங்கி, நானே ஓர் ஆடையை டிசைன் செய்து பார்த்தேன். என்னாலேயே நம்ப முடியாத அளவுக்கு அற்புதமா வந்துச்சு. ‘எனக்கும் செய்து கொடும்மா’னு சிலர் கேட்க ஆரம்பிச்சதுதான், இந்தப் பயணத்தின் முதல் புள்ளி...’’ - தன் முகநூல் பக்கத்தில் உள்ள ‘டூட்டூ’ ஆடைகளைக் காட்டியவாறே தொடர்கிறார் ஷைனி.

ஐ.டி To ஆடை வடிவமைப்பு, ஷைனி ‘ஷைன்’ ஆன கதை!

``எனக்குத் தெரிஞ்சவங்களுக்கு நான் தயாரிச்சுக்கொடுத்த ‘டூட்டூ’வைப் பார்த்துட்டு பலரும் சொன்ன பாராட்டுகள்தான், என் டிசைன்களை ஃபேஸ்புக்ல போட வெச்சது. அதுக்கு பயங்கர லைக்ஸ் குவிய, உடனே நானும் என் வீட்டுக்காரரும், தனியா ஒரு பிசினஸ் பேஜ் ஆரம்பிக்கலாம்னு முடிவு செஞ்சு, ‘fascino - tutu for princess’ முகநூல் பக்கத்தை ஆரம்பிச்சோம். தினமும் அதில் என்னோட புது டிசைன் ஒன்றை அப்லோடு செய்தேன். செம வரவேற்பு. கஸ்டமர்கள் தங்களுக்கு என்ன டிசைன்ல வேணுமோ அதைத் தேர்வு செய்து, ‘இந்த கலர்ல வேணும்’னு  எனக்கு வாட்ஸ்அப் மூலமாவோ, மெசஞ்சர் மூலமாவோ சொல்லிடுவாங்க. அட்வான்ஸை வாங்கிக்கிட்டு நான் அதை ரெடி பண்ண ஆரம்பிச்சுடுவேன்.

 ஒவ்வொரு டிரஸ்ஸையும் என் குழந்தைக்குப் பண்ற மாதிரியே பார்த்துப் பார்த்துப்  பண்ணுவேன். அதுதான் என்னோட வெற்றிக்குக் காரணம். ஆமாம்... என்னோட கார்ப்பரேட் டிரெய்னிங் மேனேஜர் வேலையில் இருந்து சீக்கிரமே ரிலீவ் ஆகப் போறேன். என் பிசினஸுக்காக வெறித்தனமா உழைக்கணும். அதுமட்டும்தான் என் மனசுல ஓடிக்கிட்டிருக்கு” -  வண்ண வண்ண துணி வகைகளை அடுக்கியபடி வெற்றிப் புன்னகை காட்டுகிறார் ஷைனி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism