Published:Updated:

ஜிமிக்கி - காதோரம் கதைகள் சொல்லும்!

ஜிமிக்கி - காதோரம் கதைகள் சொல்லும்!
பிரீமியம் ஸ்டோரி
ஜிமிக்கி - காதோரம் கதைகள் சொல்லும்!

ஷாப்பிங் வெ.வித்யா காயத்ரி, படங்கள்: வீ.நாகமணி

ஜிமிக்கி - காதோரம் கதைகள் சொல்லும்!

ஷாப்பிங் வெ.வித்யா காயத்ரி, படங்கள்: வீ.நாகமணி

Published:Updated:
ஜிமிக்கி - காதோரம் கதைகள் சொல்லும்!
பிரீமியம் ஸ்டோரி
ஜிமிக்கி - காதோரம் கதைகள் சொல்லும்!

ஜிமிக்கி... பெண்மையின் வசீகரத்தைத் தன் முத்துகளில் கோத்தாடும் ஆபரணம் (`ஓ... ‘ஜிமிக்கி கம்மல்’ ட்ரெண்டில் வந்த கட்டுரையா’னு கண்டுபிடிச்சவங்களுக்கு ஹை ஃபைவ்!). இந்த நளினமான நகையை உலகுக்குக் கொடுத்தவர்கள், நம் தென்னிந்தியப் பொற்கொல்லர் பூட்டன்கள் (யெஸ்... அதுவும் நம்ம பயகதேன்!). ஒரு சின்ன காதணி, அதில் கவிழ்த்த மணி வடிவத்தில் தொங்கும் தொங்கட்டான், அதன் விளிம்பு முழுக்க தங்க முத்துகள்... இதுதான் ஆதிகாலத்து ஜிமிக்கியின் அசல் வடிவமைப்பு (அம்ப்ரெல்லா ஜிமிக்கி எல்லாம் அப்புறம்தாம்ப்பே!). பின்னர் கல் ஜிமிக்கி, முத்து ஜிமிக்கி முதல் ஹூக் ஜிமிக்கி, க்வில்லிங் ஜிமிக்கிவரை அதன் வடிவமைப்பு மெருகேறிக்கொண்டே வந்திருப்பது வரலாறு (மேல் கம்மல், தொங்கட்டானைவிட எப்பவும் சின்னதாதான் இருக்கணும்ங்கிறது, ஜிமிக்கி ஜுவல் மேக்கிங் விதியாம் #verified!).

ஜிமிக்கி - காதோரம் கதைகள் சொல்லும்!

வேறு எந்த நகை இருந்தாலும், இல்லா விட்டாலும், குறைந்தபட்சம் ஒரு ஜோடி ஜிமிக்கி இருப்பு வைத்திருப்பார்கள் நிறைய பெண்கள் (அம்மாகிட்ட கேட்டுப் பாருங்க!). திருமணத்துக்கு மணப்பெண்ணுக்கு ஒரே ஒரு ஜோடி கம்மல்தான் எடுக்க முடியும் என்ற எளிய குடும்பங்களில், அது ஜிமிக்கியாகத்தான் இருக்கும். தாய்மாமன் கோடீஸ்வரனாக இருந்தாலும் அவன் தன் சகோதரி பிள்ளைகளின் காதணி விழாவுக்கு எடுத்துவரும் மாமன்முறை சீர் நகை, ஜிமிக்கியைத் தவிர வேறு என்ன? (ஆமா... ஆமா!)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜிமிக்கி - காதோரம் கதைகள் சொல்லும்!
ஜிமிக்கி - காதோரம் கதைகள் சொல்லும்!

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் ஈஸ்ட்மேன் கலரில் ஜொலிஜொலித்த பத்மினியின் கல்வைத்த ஜிமிக்கி, ‘பச்சமலப் பூவு’ பாடலில் ரேவதியின் அழகுக்கு ஈடுகொடுத்து அவர் காது மடல்களில் ஆடும் மாட்டல் ஜிமிக்கி, ‘தூவானம் தூவத் தூவ’ பாடலில் ஹன்சிகாவுடன் சேர்ந்து நனையும் டெம்பிள் ஜிமிக்கி (டீட்டெய்ல்ஸ் கரெக்ட்டானு அப்புறம் துப்பறியலாம், மேல படிங்க)... இப்படி திரையில் ஆண்களையும் கவனிக்க வைத்த அழகு ஆபரணம்.
 
சமீபத்தில் கேரள சேச்சி ஷெரில் ஆடிய ‘ஜிமிக்கி கம்மல்’ வைரல் பாடலைத் தமிழக ஆண்கள் கொண்டாடியதில் நம் பெண்கள் செல்லக் கோபமாக முகம் திருப்பிக்கொண்டதுடன், ஒரு குற்றச்சாட்டையும் சொல்கிறார்கள். ‘ஜிமிக்கி’ பாடலுக்கு அவர் ஜிமிக்கியே  அணியவில்லையாம் (ஈகோன்னு வந்துட்டா நாங்க `இபிகோ’ வரை ஆராய்வோம்ல!). ‘என்ன இருந்தாலும் நம்ம தமிழ்நாட்டுப் பொண்ணுங்களுக்கு மாதிரி ஜிமிக்கி யாருக்கும் அழகு சேர்க்காது’ என்று நம் டஸ்க்கி ஸ்கின் செல்லங்களை கூல் செய்பவர்கள் மன்னிக்கப்படுவார்கள்... ஆமென்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism