Published:Updated:

“என் தங்கையின் மரணத்துக்கு நீதி கேட்கிறேன்!” - அரசுப் பணியை உதறிய சபரிமாலா

“என் தங்கையின் மரணத்துக்கு நீதி கேட்கிறேன்!” - அரசுப் பணியை  உதறிய சபரிமாலா
பிரீமியம் ஸ்டோரி
“என் தங்கையின் மரணத்துக்கு நீதி கேட்கிறேன்!” - அரசுப் பணியை உதறிய சபரிமாலா

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா! ஜெ.முருகன், படங்கள்: எஸ்.தேவராஜன்

“என் தங்கையின் மரணத்துக்கு நீதி கேட்கிறேன்!” - அரசுப் பணியை உதறிய சபரிமாலா

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா! ஜெ.முருகன், படங்கள்: எஸ்.தேவராஜன்

Published:Updated:
“என் தங்கையின் மரணத்துக்கு நீதி கேட்கிறேன்!” - அரசுப் பணியை  உதறிய சபரிமாலா
பிரீமியம் ஸ்டோரி
“என் தங்கையின் மரணத்துக்கு நீதி கேட்கிறேன்!” - அரசுப் பணியை உதறிய சபரிமாலா

னசு முழுக்க மருத்துவக் கனவு தேக்கிப் படித்தார் பெரம்பலூர் மாவட்டம், குழூமூர் கிராமத்தைச் சேர்ந்த

“என் தங்கையின் மரணத்துக்கு நீதி கேட்கிறேன்!” - அரசுப் பணியை  உதறிய சபரிமாலா

ஏழை வீட்டுப் பெண் அனிதா. ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 1176/1200 மதிப்பெண் எடுத்தும், 196.75/200 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்தும், கனவு கைகூடும் வேளையில், ‘நீயெல்லாம் மருத்துவராக முடியாது போ’ என்று அவரைத் தள்ளியது ‘நீட்’ என்கிற அநீதி. அதைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்தப் பிஞ்சு மனம் தற்கொலை முடிவெடுத்து, தமிழகத்துக்கே குற்ற உணர்ச்சியையும், போராட்டத் தூண்டுதலையும் தந்து சென்றது.

அனிதாவுக்காகவும், மாநிலப் பாடத்திட்டத்தில் படிப்பதால் மருத்துவ வாய்ப்பு பறிபோய்விடக்கூடாதென நாளைய அனிதாக்களுக்காகவும் தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. அதன் ஓர் அங்கமாக, அரசுப் பள்ளி ஆசிரியப் பணியையே துறந்த சபரிமாலா, அனைவரின் கவனத்தையும் பெற்றார். விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், வைரபுரம் ஊராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர், அதே பள்ளியில் படிக்கும் தன் மகனுடன் சேர்ந்து போராட்டத்தில் அமர்ந்தார். அதற்குக் கல்வித்துறை அனுமதி மறுத்ததால், தனது பணியை ராஜினாமா செய்தார். இன்றுவரை தனது முடிவில் உறுதியோடு இருந்து, விமர்சனங்களைத் தைரியமாகச் சந்தித்துவருகிறார். திண்டிவனம், ஜக்கம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சபரிமாலாவைச் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“என் தங்கையின் மரணத்துக்கு நீதி கேட்கிறேன்!” - அரசுப் பணியை  உதறிய சபரிமாலா

சபரிமாலாவின் பின்புலம் என்ன?

‘`சிறு வயதில், வடமதுரை கிராமத்திலிருந்து பெரிய மூட்டையுடன் டவுன் பஸ் பிடித்து படிக்கச்சென்றதே எனக்குப் பெரிய போராட்டமாக இருந்தது. பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ‘பீப்பிள்ஸ் வாட்ச்’ என்ற அமைப்பினர் எங்களைக் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு அழைத்துச்சென்றனர். குடிசைகள், சாக்கடையில் நீந்தும் பன்றிகள், உடையே இல்லாத குழந்தைகள் என ஒரு மாறுபட்ட சூழலை முதல்முறையாகப் பார்த்தேன். `நம் வசிப்பிடத்துக்கும் இந்த இடத்துக்கும் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்’ என்று திகைத்தேன். அந்த இடத்துக்கு ‘சேரி’, ‘காலனி’ என்று பல்வேறு பெயர்கள் சொல்லப்பட்டன. அந்தத் தாக்கம்தான் ஆசிரியர் பணி தாண்டி, என்னை சமூகத்துக்காக எழுதவும் பேசவும் வைத்தது.’’

உங்கள் சமூக அக்கறை, ஆசிரியப் பணியில் பயன்படுத்தப் பட்டதா?

‘`நிச்சயமாக. அப்துல் கலாமை உருவாக்கிய ஆசிரியர்களைப் பற்றிப் படித்தபோது, என் மாணவர்களுக்கு நான் எப்படிப்பட்ட ஆசிரியராக இருக்க வேண்டும் என்று சிந்தித்தேன். பேச்சாற்றலையும் சமூகச் சிந்தனைகளையும் பாடங்களுடன் அவர்களுக்குக் கடத்தினேன். மாவட்ட அளவில் அனைத்துப் பேச்சுப் போட்டிகளிலும் என் மாணவர்கள் முதலிடம் பிடித்தார் கள். என் மாணவர்களே பட்டி மன்றப் பேச்சாளர்களாகவும் உருவானார்கள். இதன் மூலம் ஒரு வருடத்தில் இரண்டு லட்சம் இளைஞர்களைப் பட்டிமன்றங்களில் பார்வையாளர்களாகச் சந்தித்திருக் கிறோம்.’’

அனிதாவின் மரணம்..?

‘`இரண்டு வயதில் அம்மாவை இழந்த ஒரு சிறுமி, அப்பா மூட்டை தூக்கும் தொழிலாளி என்ற பின்னணியில் வளர்ந்து 1,176 மதிப்பெண் எடுத்திருந்தார். எதையெல்லாம் சந்தோஷம் என்று இந்த உலகம் சொல்கிறதோ, அதையெல்லாம் இழந்திருந்தால் தான் இந்த மதிப்பெண்ணை அனிதா பெற்றிருக்க முடியும். அப்படி ஒரு தவமாகப் படித்தவர் உயிர் துறந்த நிலையில் ஒளி பரப்பப்பட்ட காணொளி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது, ‘நீட்னாலே எங்களுக்கெல்லாம் என்னன்னு தெரியல. அதுல எப்படி பாஸ் செய்றது’ என்று அவர் கேட்டபோது, மனசு உடைந்துவிட்டது. கிராமப்புறத்தில் இருக்கும் ஏழை மாணவர்களின் கல்விக்கு இந்த நாடு என்ன உத்தரவாதத்தைக் கொடுக்கிறது? அவர்களை வாழச் சொல்கிறதா, சாகச் சொல்கிறதா? அனிதா தன் மரணத்தின் மூலம் கேட்ட இந்தக் கேள்விகள், என்னை அடுத்தடுத்த நாள்களிலும்  விடவேயில்லை.’’

“என் தங்கையின் மரணத்துக்கு நீதி கேட்கிறேன்!” - அரசுப் பணியை  உதறிய சபரிமாலா

அரசாங்க வேலையை உதறும் முடிவை எடுத்தது ஏன்?

‘`கல்வி என்பது ஆசிரியர்களால் மாணவர்களுக்குக் கொடுக்கப் படுவது என்றால், உண்மையில் ஆசிரியர்கள்தாம் முதலில் போராட்டத்தில் அமர்ந்திருக்க வேண்டும். பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் படித்துக் கொண்டிருப் பது அனிதாக்கள்தாம். அவர்களுக்குப் பாடம் நடத்துபவர்கள் தானே முதலில் போராட்டத்தில் குதித்திருக்க வேண்டும் என்ற குற்ற உணர்ச்சி எனக்குள் எழுந்தது. அனிதாவின் மரணம் மிகப்பெரிய கல்விப் புரட்சியாக உருவெடுத்துக்கொண்டிருக்கும்போது, வகுப்பறைக்குள் சென்று `பிரித்து எழுதுக, சேர்த்து எழுதுக’ என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டிருப்பதில் என்ன பயன்? என் தங்கை அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு என் பணியை உதறினேன்...”

உங்கள் ஒருவரின் ராஜினாமா, அரசின் கொள்கைகளை, சட்டங்களை மாற்றிவிடும் என்று நினைக்கிறீர்களா?

‘`அப்படியில்லை. 23 ஆண்டுக் காலப் பணியில், சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் வருவாயை இழக்கும் அளவுக்குப் பெரிய பொருளாதாரப் பின்னணியும் எனக்குக் கிடையாதுதான். ஆனால், என் மாநிலத்தில் நடக்கும் ஓர் அநீதிக்கு ஒரு தனிமனுஷியாக இது என்னுடைய எதிர்வினை. குறைந்தபட்சம் என் குற்ற உணர்ச்சியிலிருந்து மீண்டிருக்கிறேன்.’’

இந்த முடிவை உங்கள் குடும்பத்தினர் எப்படிப் பார்க்கிறார்கள்?

‘`என் கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் அனைவரும் என் முடிவை வரவேற்றார்கள். என் பெற்றோர்தாம் வருத்தப்பட்டார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு என்னைப் படிக்கவைத்தவர்கள். ‘உன்னைப் பார்க்கவே வரமாட்டோம்’ என்று கோபித்தார்கள். ‘நாடு முழுவதும் உங்கள் பெண்ணைப் பற்றித்தான் பேசுகிறார்கள். எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது’ என்று அக்கம்பக்கத்தினர் சொன்ன பிறகுதான் சமாதானமானார்கள்.''

அரசுப் பணிக்கு மீண்டும் அழைப்பு வந்தால் செல்வீர்களா?

‘`நிச்சயமாகச் செல்ல மாட்டேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism