Published:Updated:

ப்ளான் பண்ணாமலே பிரபலம் ஆனோம்!

ப்ளான் பண்ணாமலே பிரபலம் ஆனோம்!
பிரீமியம் ஸ்டோரி
ப்ளான் பண்ணாமலே பிரபலம் ஆனோம்!

ஆன்லைன் அசத்தல் கு.ஆனந்தராஜ்

ப்ளான் பண்ணாமலே பிரபலம் ஆனோம்!

ஆன்லைன் அசத்தல் கு.ஆனந்தராஜ்

Published:Updated:
ப்ளான் பண்ணாமலே பிரபலம் ஆனோம்!
பிரீமியம் ஸ்டோரி
ப்ளான் பண்ணாமலே பிரபலம் ஆனோம்!

“விளையாட்டா ஆரம்பிச்ச டப்ஸ்மாஷ் முயற்சி, இன்னிக்கு எங்களை லட்சக்கணக்கான மக்களுக்குத் தெரியுற அளவுக்கு பிரபலமாக்கியிருக்கு!’’ - குரலில் துள்ளலுடன் பேசுகிறார்கள் பெங்களூரைச் சேர்ந்த அருண் பிரசன்னா - சஞ்சனா தம்பதி. ஐ.டி வேலை, கேக் பிசினஸ் எனத் தங்களின் பிரதான வேலைகளுக்கு நடுவே தம்பதியாக இவர்கள் இணைந்து பேசி வெளியிடும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள், மில்லியன் `வியூ’க்களை தாண்டிப் பறக்கின்றன. இணைய சென்சேஷனல் ஜோடியுடன் ஓர் இனிய சந்திப்பு...

ப்ளான் பண்ணாமலே பிரபலம் ஆனோம்!

“நான் பெங்களூரு பொண்ணு. கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணும் நானும் ஃபேஸ்புக்ல ஃப்ரெண்ட்ஸா அறிமுகமாகி, காதலிச்சு, கல்யாணம் செய்துகிட்டோம். அமெரிக்காவுல குக்கரி க்ளாஸ் முடிச்சிட்டு, வீட்டில் பொழுதுபோக்குக்கு வெரைட்டியா கேக் செஞ்சிட்டு இருந்தேன். ‘செம டேஸ்ட்டா இருக்கு, பிசினஸா ட்ரை பண்ணு’னு அருண் சொல்ல, தெரிஞ்சவங்களுக்கு மட்டும் கம்மியான லாபத்துல கேக் செய்துகொடுக்க ஆரம்பிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப்ளான் பண்ணாமலே பிரபலம் ஆனோம்!

என் பிசினஸ் டெவலப்பாக அருண் ரொம்பவே உதவினார். வீட்டில் இருந்தே கேக், குக்கரி அயிட்டங்கள் செஞ்சு கொடுத்து, கார்ப்பரேட் கம்பெனியின் பல்க் ஆர்டர் வாய்ப்புக்கிடைச்சு, மாசம் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன். இப்படி ஒரு பிசினஸ் பெண்ணா டிராவல் பண்ணிட்டு இருந்த என்னை ஆன்லைன் பிரபலமாக்கிட்டார் என் கணவர்!’’ -  பெரிதாகச் சிரிக்கிறார் சஞ்சனா.
 
“பிள்ளையார் சுழிபோட்டு தொடங்கி வெச்சதே இவங்கதாங்க” குதூகலம் பொங்க ஆரம்பித்தார் அருண்... “கல்யாணத்துக்கு அப்புறம் மேடம் நிறைய தமிழ்ப் படங்களைப் பார்த்துத் தமிழ் பேசக் கத்துக்கிட்டாங்க. தமிழ்நாட்டுல நடக்குற வைரல் விஷயங்களையெல்லாம் சோஷியல் மீடியாவில் பார்த்துட்டு அவங்கதான் எனக்குச் சொல்லுவாங்க. ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, ‘டப்ஸ்மாஷ் ஆப் மூலமா நிறைய பேரு நடிகர் வடிவேலுவோட ஹிட் டயலாக்ஸ் பேசுறாங்க. நாமளும் ட்ரை பண்ணலாமா’னு கேட்டாங்க. ரெண்டு பேரும் விளையாட்டா வடிவேலுவோட, ‘நீ ரொம்ப சப்ப ஃபிகரா இருக்க’, ‘பூஜா கரானாஹே’னு ரெண்டு டயலாக்ஸை ஜோடியா டப்ஸ்மாஷ் செய்து எங்க பேக்கரி ஃபேஸ்புக் பேஜ்ல போஸ்ட் செய்தோம். பார்த்தா... அது ஒரு லட்சம் வியூஸுக்கும் மேல போனதோடு, நிறைய பாராட்டுகளும் குவிந்தன. தொடர்ந்து பல வடிவேலு டயலாக்ஸைப் பேசி போஸ்ட் செய்ய ஆரம்பிச்சோம்.

எங்க டப்ஸ்மாஷ் வீடியோக்களுக்கு நிறைய ஃபாலோயர்ஸும் நல்ல ரீச்சும் கிடைச்சது. பல ஆன்லைன் சேனல்கள் தங்களுக்குப் பிரத் யேகமா டப்ஸ்மாஷ் வீடியோ செய்து கொடுக்கச் சொல்லி எங்களைக் கேட்டாங்க. நாங்களும் நிறைய சேனல்களுக்கு வெரைட்டியான கான்செப்ட்களில் டப்ஸ்மாஷ் செய்துகொடுக்க ஆரம்பிச்சோம்.

ப்ளான் பண்ணாமலே பிரபலம் ஆனோம்!

ஒருகட்டத்தில், `நாமளே தனியா பண்ணலாம்’னு முடிவுபண்ணி, ‘அருண் சஞ்சனா டப்ஸ்மாஷ்’ங்கிற பெயர்ல ஒரு ஃபேஸ்புக் பேஜ் கிரியேட் செஞ்சு, அதில் எங்க வீடியோக்களை அப்லோட் பண்ண ஆரம்பிச்சோம்’’ - சரசரவென அவர்கள் படிகளில் ஏறியதை கடகடவென சொன்ன அருணை நிறுத்தி, ``மூச்சு வாங்குது பாருங்க, ரெஸ்ட் எடுங்க, நான் கன்டினியூ செய்றேன்’’ என்கிறார் சஞ்சனா குறும்பாக.
``ஒவ்வொரு டயலாக்கையும் அதுக்கான எக்ஸ்பிரஷனோட பலமுறை பேசிப் பார்த்துதான் செய்வோம். ஒரு ஐபோன், ஒரு மொபைல் ஸ்டாண்ட்... இவைதாம் எங்களோட மொத்த தொழில்நுட்பச் சாதனங்கள். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை டப்ஸ்மாஷ் வேலைகள் நடக்கும். டயலாக் செலக்ட் செய்து, பேசி, நடிச்சு, நிறைய டேக் எடுத்துனு... ஒரு டப்ஸ்மாஷ் வீடியோவுல நடிச்சு முடிக்க எட்டு மணி நேரம்வரைக்கும்கூட ஆகியிருக்கு. அடுத்த நாள் முழுக்க எடிட்டிங், அப்லோடிங் உள்ளிட்ட டெக்னிக்கல் வேலைகள் அருணோட பொறுப்பு. இந்த மெனக்கிடலுக்குப் பரிசாதான் மக்கள் எங்க வீடியோக்களை ஹிட் ஆக்கித் தர்றாங்க.

ப்ளான் பண்ணாமலே பிரபலம் ஆனோம்!

ஐ.டி கம்பெனியில புராஜெக்ட் மேனேஜரா வேலை பார்க்கிற அருணுக்கும், கேக் பிசினஸில் இருக்கிற எனக்கும் நிறைய வொர்க் டென்ஷன் இருக்கும். டப்ஸ்மாஷ் பண்றப்போ எங்களுக்குள்ள நடக்குற கேலி, கிண்டல், காமெடி நிகழ்வுகள்தான் இப்போ எங்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருக்கு; எங்க நெருக்கத்தையும் அதிகமாக்குது. எல்லாத்துக்கும் மேல, டப்ஸ்மாஷ் மூலமா இப்போ சார் ஹீரோவாகிட்டார்’’ எனக் கணவருக்கு சஞ்சனா கைகொடுக்க, ‘`எல்லாம் உங்க ஆசீர்வாதம் மேடம்’’ என்கிறார் அருண் உற்சாகத்துடன்.

“எங்க டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலமா கிடைச்ச புகழ், சில மாதங்களிலேயே எனக்குக் குறும்படம், விளம்பரப் பட வாய்ப்புகள் கிடைக்கச் செய்தது. இப்போ ஒரு தமிழ்ப் படத்துல என்னை ஹீரோவா கமிட் செய்திருக்காங்க.''

`தம்ப்ஸ் அப்’ காட்டுகிறார் வருங்கால ஹீரோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism