. ''நாலு மூல வயலுக்குள்ளே . நாத்து நடும் சின்னக்கிளி . நடவைக் கொஞ்சம் நெருக்கிப் போடு . நல்ல நெல்லு வெளைய வேணும்...’ .
- கோயம்புத்தூர் அடுத்துள்ள ஆலாந்துறைப் பகுதியில், கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை பச்சை வயல் சிரிக்க, ஒரு பக்கம் நடவு... மறுபக்கம் களை... என்று கால் கொலுசுகளைக் கணுக்காலுக்கு இழுத்து மாட்டிவிட்டு, சேத்து வயலுக்குள் தெம்மாங்குப் பாடி வேலை செய்து கொண்டிருந்தனர் கிராமத்துப் பெண்கள். அவர்களுக்கு மத்தியில், சுருட்டி விட்ட ஜீன்ஸ் பேன்ட்டுடன் வித்தியாசமான கோலத்தில் மேகன் ஃபென்டன்... அமெரிக்காவில் இருந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் படிக்க வந்திருக்கும் மாணவி!

''வ... ண... க்... கேம்!'' என்று ஆரம்பித்த மேகனின் குரலில் அத்தனை உற்சாகம்.

''அமெரிக்காவின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் வசிக்கும் சிறுவிவசாயக் குடும்பம் என்னுடையது. விவசாயம்தான் என் வருங்காலத்துக்கான விருப்பமாக இருந்ததால், கர்னல் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தேன். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் கர்னல் பல்கலைக்கழகம் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, இரண்டு பல்கலைக்கழகங்களில் இருந்தும் தலா 50 மாணவர்கள், 15 நாள் கல்விப் பயணமாக இடம் மாறினோம். அப்படி இங்கு வந்து சென்றவர்களில் நானும் ஒருத்தி.

இங்குள்ள விவசாயிகள், நிலத்தை உணவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகப் பார்க்காமல், மண்ணைத் தாயாக, கடவுளாக போற்றியதையும், அத்தனை நுணுக்கமான இந்திய விவசாய முறைகளையும் பார்த்தபோதே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை சேர வேண்டும் என்று முடிவெடுத்தேன். இதுதான், முதுகலை உழவியல் (agronomy) படிக்க வந்திருப்பதன் முன்கதை. இன்னும் இரண்டாண்டுகள் இங்குதான்!''

- கொழுகொழு கன்னம் சிவக்கச் சிரித்தார் மேகன்.

''எங்கள் ஊரில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஒரே பயிர் சாகுபடிதான் நடக்கும். மாற்றுப்பயிர் மருந்துக்கும் இருக்காது. ஆறு மாதம் பனிப்பொழிவுதான். எந்தப் பயிரும் விளையாது. ஆனால், இங்கு வருஷம் 365 நாட்களும் பயிர் செய்ய ஏதுவான தட்பவெட்பம் நிலவுகிறது. பலபயிர் சாகுபடி சிறப்பாக இருக்கிறது. நடவு, களை, அறுவடை என்று விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு ஆண்களுக்கு நிகராக இருக்கிறது.

இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மை முறை, மனித குலத்துக்கு தீங்கு செய்யாத ஒன்று. அதன் சிறப்பான இயற்கை விவசாயம் குறித்து ஆராய்ச்சி செய்வது, என் அடுத்த திட்டம். உணவுக்குப் பதிலாக வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதற்கு இணையானதுதான், ரசாயனத்தில் விளையும் உணவுகள் அனைத்தும். ஆனால், அதுதான் எங்கள் நாட்டில் கிடைக்கும். இறக்குமதி செய்த, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை பல நாட்கள் கழித்து வாங்கிச் சாப்பிடுவோம். காலையில் பறிக்கும் காய், கனிகளை மதிய உணவுக்குச் சமைத்துச் சாப்பிடும் உங்களைப் பார்க்கும்போது, ஏக்கமாக இருக்கிறது. இங்குள்ள இளைஞர்கள் அமெரிக்கக் கனவு காண்கிறார்கள். என் மனதில் இந்தியக் கனவுதான் உள்ளது!'' என்று சீரியஸாகப் பேசிய மேகன், தமிழ்நாட்டில் அவருக்குப் பிடித்தவற்றை பட்டியலிட்ட போது சட்டென குஷி மூடுக்கு மாறினார்.

''மெது மெது இட்லி, காரச் சட்னி, தயிர்சாதம்... வாவ்! தமிழ்நாட்டு சாப்பாட்டுக்கு நான் அடிமை. புடவை, பெரிய பொட்டு, பூ என இருக்கும் பெண்கள் எல்லோரும் அத்தனை அழகு! கூடவே, பொறுப்புடன், பொறுமையுடன் அவர்கள் குடும்பம் நடத்தும்விதம், அவர்கள் மேல் மரியாதையைக் கூட்டுகிறது. முன் பின் தெரியாத என்னிடம், 'ஒடம்புக்கு எல்லாம் சரிப்பட்டு போகுதா..? ஊருல அம்மா, அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா..?’ என்று நலம் விசாரிக்கிறார்கள். ஐ ஜஸ்ட் லவ்வ்வ்வ் தெம்!''

- தலைவாரி, பொட்டு வைத்து, கழுத்தில் பாசி போட்டிருக்கும் அந்த அமெரிக்கப் பெண்ணின் இந்தியக் காதல் நமக்கும் புரிந்து நாம் அவரை ரசிக்க....

வரப்போரம்... பாக்கு இடித்துக் கொண்டிருந்த பாட்டியிடம் வெத்தலை வாங்கிப் போட்டுக் கொண்டார் வாய் நிறைய மேகன்!