'டீன் ஃபேஷன் ஷோ’வுக்காக தயாராக இருந்தது... செங்கல்பட்டு, இந்திரா காந்தி மகளிர் பொறியியல் கல்லூரியின் மேடை! ''அவள் விகடன்கிட்ட அப்ளாஸ் வாங்கணும். ஆல் தி பெஸ்ட்!'' என்று கேர்ள்ஸை சியர் அப் செய்து, நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார் கல்லூரி முதல்வர் ஹெலன் ஷாந்தி.

சென்னையைச் சேர்ந்த 'ரெட்பிக்ஸ் மீடியா’ (Redpix media) நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ஜீவிதா சுரேஷ்குமார், செங்கல்பட்டைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் காயத்ரிதேவி ஆகியோர் நடுவர்களாக வந்து அமர... அமர்க்களமாக ஆரம்பமானது ஷோ.

பிளாக் ஜீன்ஸ் - மல்டிகலர் டி-ஷர்ட்டில்... ஃபர்ஸ்ட் என்ட்ரி கொடுத்தார், விமலா ப்ரியதர்ஷினி. ஜீன்ஸ், ஆரஞ்சு டாப் அணிந்து தேவி 'கேட் வாக்’கியபோது, அரங்கம் அதிரத் தொடங்கியது. ஷர்மிளாவின் பெயரைச் சொன்னதுதான் தாமதம்... ஆடியன்ஸ் தரப்பிலிருந்து வந்த விசில் சத்தத்தால் ரிக்டர் கணக்கில் அரங்கத்தின் அதிர்வு கூடியது. த்ரீ ஃபோர்த் ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் ஷர்மிளா வர... மீண்டும் ஏறியது விசில் ரிக்டர்.

வின்டர் ஸ¨ட், அதற்கு மேட்சாக கூலிங்கிளாஸ், ஹேண்ட் பேக் என வந்து வெரைட்டி காட்டினார் நிஷாந்தினி. 'நிஷாவுக்கு ஒரு ஓ போடு...’ என்று பறந்து வந்த குரலைத் தொடர்ந்து வந்த 'ஓ’ சத்தம், தாம்பரத்தையும் தாண்டிக் கேட்டிருக்கும்! 'சேலை இல்லாமல் அது எப்படி பேஷன் ஷோ?' எனக் கேட்பதுபோல் வந்தார், பானுப்ரியா. ராஜஸ்தான் ஃபேமஸ் ஜார்ஜட் டிசைனில் அவரே வடிவமைத்த சேலையில் வந்து அசத்தியவருக்கு... கல்லூரி முதல்வர் உட்பட பேராசிரியர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். இன்னும் பல மாணவிகள் மேடையில் வானவில் ஜாலம் காட்டிச் செல்லச் செல்ல, மார்க் ஷீட்டுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர் நடுவர்கள்!

'வாக்’குகள் முடிய, பின்னணி இசை ஓய, மேடையேறினர் நடுவர்கள். ஜீவிதா, ''நான் நிறைய ஃபேஷன் ஷோ பார்த்திருக்கேன், செய்தும் இருக்கேன். இந்த 'டீன் ஃபேஷன்’, கலவையா, புதுமையா இருந்தது!'' என்றவரை நிறுத்தியது, கூட்டத்திலிருந்து எழுந்த ஒரு மாணவியின் குரல்...

''மேடம்... எங்களுக்காக நீங்க ஒரு 'கேட் வாக்’ பண்ண முடியுமா..?'' என்று அவர் கேட்க, இதை எதிர்பார்க்காத ஜீவிதா, ''ஓ.கே... நான் ரெடி! ஆனா, என்கூட உங்க லெக்சரர் யாராவது வாக் பண்ணணும்..!'' என்று தயாரானார். மாணவிகள் எல்லோருமாக பேராசிரியை பாபினை, கிட்டத்தட்ட தூக்கி வந்து மேடையேற்றினார்கள். மீண்டும் பின்னணி இசை, கைதட்டல்கள் என அரங்கம் அதிர... ஜீவிதாவும், பாபினும் ஒரு மினி ஃபேஷன் ஷோ நடத்தி முடித்தார்கள்!

மற்றொரு நடுவரான காயத்ரிதேவி, ''நாங்க படிக்கற காலத்துல எல்லாம் இப்படி ஒரு விழா நடத்த 'அவள் விகடன்’ இல்லையேனு ஏக்கமா இருக்குப்பா...'' என்றபடி முடிவுகளை அறிவிக்க, பங்கு பெற்ற அனைவருக்கும் மினி நெயில் கேர் கிட் பரிசாக வழங்கப்பட்டது. ரசக்கலி உடையில் வந்த சங்கீதாவுக்கு மூன்றாவது பரிசாக 'ஐ ஷேட் கிட்’ வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசுக்கு நிஷாந்தினியின் பெயரை அறிவித்ததும், தோழிகள் அலேக்காக தூக்கிக் கொண்டுபோய் மேடையில் நிறுத்த, 'ஹேர் டிரையர்’-ஐ பெற்றுக்கொண்டார் நிஷாந்தினி. முதல் பரிசுக்குரியவர் யார் என்பது தெரிந்துவிட்டதால் ஒட்டுமொத்த அரங்கமும் 'பானுப்ரியா... பானுப்ரியா...’ எனக் கூவ, புன்னகையும், புடவையுமாக மேடை ஏறி, 'மெகா மேக்கப் கிட்’-ஐ பெற்றுக் கொண்டார்.

பேராசிரியை தீப்தா, ''நன்றி என்ற வார்த்தையைச் சொல்லி எங்களிடமிருந்து 'அவள் விகடனை’ வேறுபடுத்த விரும்பல. இன்னும் பல நிகழ்ச்சிகளை எங்க காலேஜ்ல 'அவள் விகடன்’ நடத்தணும்!'' என்று நெகிழ்ச்சியான வார்த்தைகளில் விழாவை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சி முடிந்து, செல்போனை ஆன் செய்ததும், 'எங்க காலேஜுக்கு எப்போ வருவீங்க..?’ என ஏக்கத்தோடு வந்திருந்தது ஒரு எஸ்.எம்.எஸ்.

இதோ... கிளம்பிட்டோம்..!