தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

மூன்று ஜிம்களின் ஓனரம்மா!

மூன்று ஜிம்களின் ஓனரம்மா!
பிரீமியம் ஸ்டோரி
News
மூன்று ஜிம்களின் ஓனரம்மா!

ஸ்பைடர் உமன்

'அடுத்த நயன்தாரா’வுக்கான அத்தனை தகுதிகளும் கொண்ட அழகுப்புயல்... ரகுல் ப்ரீத் சிங்.

தமிழிலும் தெலுங்கி லும் தயாரான `ஸ்பைடர்' படத்தைத் தொடர்ந்து,  கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, இந்தியில் ‘அய்யாரி’ என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் ரவுண்டு கட்டி அடிக்கும் ரகுல் ப்ரீத், டெல்லிப்பொண்ணு!

அப்பா பெயர் ராஜேந்தர் சிங். அம்மா குல்விந்தர் சிங். அவர்கள் இருவரின் பெயர்களில் உள்ள முதல் இரண்டு எழுத்துகள் சேர்ந்ததே ரகுல்.

மேத்ஸ் பட்டதாரியான ரகுல், மாடலாகத் தன் கேரியரை ஆரம்பித்தவர். அவர் அறிமுகமான முதல் படம் ‘கில்லி’. அது `7ஜி ரெயின்போ காலனி'யின் கன்னட ரீமேக்.

மூன்று ஜிம்களின் ஓனரம்மா!

‘`சவுத் இந்தியன் சினிமா இண்டஸ்ட்ரியைப் பத்தி அப்போ ஒண்ணுமே தெரியாது. ‘பண்ணினா பாலிவுட்தான்... மத்த லேங்வேஜ் வேண்டாம்’னு அடம்பிடிச்சேன். அவங்களே அப்பாகிட்ட பேசி என்னைக் கன்வின்ஸ் பண்ண வெச்சாங்க. அப்போ எனக்கு மாசம் ரெண்டாயிரம் ரூபாய் பாக்கெட் மணி. இந்தப் படம் பண்ணினா, ஒரே மாசத்துல கார் வாங்கற அளவுக்குச் சம்பளம் கிடைக்கும்னு ஒரு கால்குலேஷன் போட்டு, அதுக்காகவே ஓகே சொன்னேன்...’’ - இப்படி கண்டிஷன் வைத்திருந்தவர், இன்று தமிழில் நம்பர் ஒன் நடிகைகளுக்கான ரேஸில் இணைந்திருக்கிறார்.

ரகுலின் முதல் தமிழ்ப் படம் ‘தடையற தாக்க’. ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ என அடுத்தடுத்து அவர் நடித்த தமிழ்ப் படங்கள் ரகுல் பெயர் சொல்லாததில் ஸ்வீட்டி செம அப்செட். தமிழ் தன்னை வாழ வைக்காது என்கிற முடிவில் ஆந்திரா பக்கம் ஆர்வமானார்.

ஆந்திராவில் மையம்கொண்ட அந்த அழகுப்புயலை மீண்டும் தமிழ்ப் படங்களின் பக்கம் திசைத்திருப்பியவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

‘ஸ்பைடர்’ படத்தை அடுத்து கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் இவரே நாயகி.

ஃபெமினா மிஸ் இந்தியாவில் பல டைட்டில்களை வென்றவர், ஃபிட்னஸ் ப்ரியை என்றெல்லாம் அறிந்தவர்களுக்கு அவர் கோல்ஃப் பிளேயர் என்பதும் மூன்று ஜிம்களின் ஓனரம்மா என்பதும் புதுத் தகவல்களாக இருக்கலாம்.

இப்போதும் ஷூட்டிங் இல்லாத நாள்களில் அவரை டெல்லியின் கோல்ஃப் கிரவுண்டுகளில் பார்க்கலாம். ரியலி?

‘`அப்பா ஆர்மியில இருந்ததால எல்லா ஸ்போர்ட்ஸ்லயும் என்னைச் சேர்த்து விடுவார். மத்ததெல்லாத்தையும்விட எனக்கு கோல்ஃப் ரொம்பப் பிடிச்சதால கன்டின்யூ பண்ணினேன். அது எனக்கு வாழ்க்கையில நிறைய கத்துக்கொடுத்திருக்கு. மத்தவங்களுக்கு ஸ்விம்மிங்கும் பேட்மின்ட்டனும் எப்படியோ அப்படித்தான் எனக்கு கோல்ஃப். ஆனா, அதை புரொஃபஷனலா விளையாடற ஐடியாவெல்லாம் இல்லை. இப்போதைக்கு என் கவனம் முழுக்க நடிப்புல இருக்கிறதால, அதுலேருந்து தடம் மாற விரும்பலை. ஆனா, லைஃப் முழுக்க கோல்ஃப் என்கூடவே வரும்.’’

அழகிகள் எங்கிருந்தாலும் ஆதரிப்போம்!

 -  ஆர்.வி