‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா - ஜோதிகாவின் க்யூட் குழந்தை. ‘எந்திரன்’ படத்தில் ஸ்மார்ட்டான ஸ்கூல் ஸ்டூடன்ட். ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் டீன்ஏஜ் தங்கச்சி. இன்று சூர்யா முதல் ரஜினி வரை அனைவருடனும் டூயட் பாடத் தயாராக இருக்கும் ஹீரோயின்!

ஏற்கெனவே தெலுங்கில் ஹீரோயின் புரமோஷன் பெற்றுவிட்ட ஷ்ரியா ஷர்மா, அடுத்து தமிழுக்காக வெயிட்டிங். ‘நானும் ஹீரோயின்தான்’ என்று அதிரடியாக அறிவிக்கவே ‘போத்தீஸ் விளம்பர’த்தில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஷ்ரியா. இவர் முகத்தில் மட்டுமில்லை, பேச்சிலும் குழந்தைத்தனம் மிச்சமிருக்கிறது. கடந்த காலம் டு நிகழ்காலம்... நடந்தது என்ன என்கிற ஷ்ரியாவின் விவரிப்பு அழகான குறும்படம்.

``ஹிமாச்சல் பிரதேஷ்ல பிறந்தேன். அப்பா விகாஸ் ஷர்மா இன்ஜினீயர், அம்மா ரிது ஷர்மா டயட்டீஷியன். எனக்கு ரெண்டரை வயசிருக்கும்போது மும்பைக்கு வந்துட்டோம். ஒரு இந்தி சேனல்ல அனுபம் கெர் அங்கிள் நடத்தின சாட் ஷோவுக்காகக் குழந்தைகளை அப்ளை பண்ணச் சொல்லியிருந்தாங்க. என் அப்ளிகேஷன் செலக்ட் ஆயிடுச்சு. சினிமா பின்னணி இல்லைன்னாலும் அந்த வயசுலயே என்கிட்ட கேமரா கூச்சமெல்லாம் இல்லை. அப்புறம் ஏக்தா கபூரோட சீரியல், இந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்கள்னு சைல்டு ஆர்ட்டிஸ்ட்டா நிறைய நடிச்சிருக்கேன்.

விளம்பரங்கள்ல என்னைப் பார்த்துட்டுதான் ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்துல வாய்ப்பு வந்தது. எத்தனையோ படங்கள்ல சைல்டுஆர்ட்டிஸ்ட்டா பண்ணியிருந்தாலும், அந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அந்த ஷூட்டிங்ல ஒவ்வொரு நாளும் எனக்கு நல்லா நினைவிருக்கு... நான் அவங்க ரெண்டுபேர்கூடயும் பேசிக்கிட்டே இருப்பேன். ஒருநாள் ஷூட்டிங் கேன்சலாயிடுச்சுனு சூர்யா சார், என்னை ஒரு ப்ளே ஸ்டோருக்குக் கூட்டிட்டுப் போனார். பார்பி ஹவுஸ் கிஃப்ட் பண்ணினார். இப்பவும் அதை வெச்சிருக்கேன். படம் வந்து 11 வருஷங்களாச்சு. இப்பவும் மக்களுக்கு நான் ‘ஐஷு’வாதான் ஞாபகத்துல இருக்கேன். சந்தோஷமா இருக்கு.

அடுத்து ‘எந்திரன்’. ரஜினி சார் படமாச்சே... அதனால வேற எதைப் பத்தியும் யோசிக்கத் தோணலை. க்ளைமாக்ஸ்ல ஒரு சீன்ல வந்தாலும் மக்கள் அதையும் மறக்கலை. அதுதான் ரஜினி சார் படத்தோட மேஜிக்.

அப்புறம் கவுதம் மேனன் சாரோட ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்துல சமந்தாவோட தங்கையா நடிச்சேன். சைல்டு ஆர்ட்டிஸ்ட்டா அதுதான் என் கடைசிப் படம். அப்புறம் தெலுங்குல ‘துக்குடு’ படத்துல மகேஷ் பாபு - சமந்தா கூட நடிச்சேன்.

படங்கள் பண்ணிட்டே படிப்பை யும் தொடர்ந்திட்டிருந்தேன். கும்ரா, கன்ஃபெஷன்ஸ் ஆஃப் அன் இந்தியன் டீன்ஏஜர்னு ரெண்டு பிரபலமான டி.வி ஷோஸ் பண்ணினேன். அதைப் பார்த்துட்டுதான் ‘கயக்குடு’னு தெலுங்குல ஹீரோயினா எனக்கு முதல் பட வாய்ப்பு வந்தது. அப்போ நான் லெவன்த் படிச்சிட்டிருந்தேன். சிபிஎஸ்சி சிலபஸ். ரொம்பக் கஷ்டமா இருக்கும். மும்பையிலேருந்து ஆந்திராவுக்கு வந்து நடிச்சிட்டுப் போறதெல்லாம் சரியா வருமானு யோசிச்சிட்டிருந்தப்ப, அவங்க என்மேல நம்பிக்கை வெச்சு கன்வின்ஸ் பண்ணினாங்க. அந்தப் படத்தைப் பார்த்துட்டுதான் ‘விமலா கான்வென்ட்’ வாய்ப்பு வந்தது. ஹீரோயினா எனக்குப் பெரிய பிரேக் கொடுத்த படம் அது...’’

விமலா கான்வென்ட் மாணவி, இப்போது லா காலேஜ் ஸ்டூடன்ட்.

``எனக்குப் படிப்பு ரொம்ப முக்கியம். அப்புறம் பார்த்துக்கலாம்னு விடற விஷயமில்லையே படிப்பு?

சைல்டு ஆர்ட்டிஸ்ட்டா போத்தீஸ் விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன். அதே பிராண்டுக்கு லீட் ஆர்ட்டிஸ்ட்டா மாடலிங் பண்றது செம ஜாலியான எக்ஸ்பீரியன்ஸ். தமிழ்ப் படங்கள்ல ஹீரோயினா அறிமுகமாகிறதுக்கு இந்த விளம்பரம் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறதா ஃபீல் பண்றேன்...’’ - அடுத்த வருடம் தமிழ்ப் பேசத் தயாராகிற ஸ்வீட்டிக்கு, சூர்யாவுக்கு ஹீரோயின் ஆவதே லட்சியமாம்.

ஜில்லுனு ஒரு காதல் பார்ட் டூ!