என்னதான் அழகுக்காக அதிகம் மெனக்கெட்டாலும் சில நேரங்களில் ‘இந்தப் புருவம் ரொம்ப மெல்லியதா இருக்கே... இந்த உதடுகள் எப்பவும் வறண்டு இருக்கே’ என ஏதாவது ஒரு விஷயத்தில் குறைப்பட்டுக்கொண்டே இருப்போம்.

பியூட்டி பார்லருக்குச் சென்றாலும் புருவங்களைத் திருத்துவது, ஃபேஷியல் செய்வது என அந்த நேரத்துக்கான பியூட்டி சர்வீஸ்களை மட்டுமே எடுத்துக்கொண்டு, மற்ற விஷயங்களை மறந்து விடுகிறோம். அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் தினமும் கொஞ்சம் நேரம் செலவிட்டாலே போதும்... உச்சி முதல் உள்ளங்கால் வரை நம் உடலைச் சிறப்பாகப் பராமரிக்க முடியும். நம் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய பொருள்களைக்கொண்டு அழகில் மிளிரும் வகையிலான பிரத்யேக அழகுக் குறிப்புகளை வழங்குகிறார், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி. அழகு அள்ளட்டும்!

பளபளக்கும் கூந்தலுக்கு...

அரை கப் கரிசலாங்கண்ணி சாற்றுடன் நான்கு ஸ்பூன் வெந்தயத்தூள் சேர்த்துக் கலக்கி, தலைமுடியில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

இளநரை இருந்தாலும், கரிசலாங்கண்ணி சாறு தடவுவதால் நரையின் நிறம் மறைந்து கருமை யாகக் காட்டும். இதை வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்யலாம்.

அடர்த்தியான புருவத்துக்கு...

புருவம் அடர்த்தியாக வளர ஆலிவ் எண்ணெய் துணைபுரியும். உடல் வெப்பம், மன அழுத்தம், வயது முதிர்வு காரணமாகப் புருவ முடிகள் உதிரக்கூடும். அதனால் தூங்குவதற்கு முன்பாகத் தினமும் காதைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பட்ஸ் மூலம் ஆலிவ் எண்ணெயைப் புருவத்தில் தேய்த்து, அதே பட்ஸால் நன்கு மசாஜ்போல செய்துவிடவும். பிறகு, ஐபுரோ பென்சிலால் எண்ணெயைத் தொட்டுப் புருவத்தின் வடிவத்துக்கு பென்சிலால் வரைந்துகொள்ளவும்.இப்படிச் செய்வதால் வலுவிழந்த புருவ முடிகள் வளரும்.

சொக்க வைக்கும் மூக்கழகுக்கு...

நெய், பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றைச் சமஅளவு எடுத்துக் கொண்டு நன்றாகக் கலந்து, மூக்கின் மேற்பகுதி முதல் கீழ்ப்பகுதி வரை நன்கு தடவி நீவிவிடவும். இதுபோல தினம் ஐந்து முறை செய்துவர... மூக்கின்மீது படியும் அழுக்குகள் நீங்கி, மூக்கும் சரியான வடிவில், பார்க்க அழகாக மாறிவரும்.

கறையில்லாத பற்களுக்கு...

புதினா, எலுமிச்சைச்சாறு, பச்சைக் கற்பூரம் இரண்டு சிட்டிகை, சர்க்கரை, லவங்கம், உப்பு... இவற்றை மொத்தமாகக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இதை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்கிப் புத்துணர்ச்சிக் கிடைக்கும். அரைத்த விழுதைப் பற்பசையைப் போல உபயோகப்படுத்திப் பற்களைத் தேய்க்கும்போது மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளபளப்பாகும்.

ஜொலிக்கும் உதடுகளுக்கு...

பன்னீர் ரோஜாக்கள் மூழ்கும் அளவுக்குப் பாதாம் எண்ணெய் (Almond Oil) சேர்த்துக் கொதிக்கவைத்து தைலம் போல தயாரித்து வைத்துக் கொள்ளவும். இந்தத் தைலத்தை உதடுகளுக்கு அடிக்கடி பூசிவந்தால், உதடுகளில் படிந்திருக்கும் கருமை நீங்கி உதடுகள் அழகாகும். `லிப் பாம்' போட்டுக்கொண்டதைப் போல இயற்கை முறையில் வறட்சி இல்லாமல் உதடுகள் பளபளக்கும்.

பட்டுப் போன்ற பாதங்களுக்கு...

பாதங்கள் வெடிப்பில்லாமல் அழகாக இருக்க... வெந்தயத்தூள், எலுமிச்சைச் சாறு, பால் சேர்த்து நன்கு கலந்து தடவி, சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து அதில் எலுமிச்சைச் சாறு, பூந்திக்கொட்டை கலந்து, பாதங்களை அந்த நீரில் மூழ்கச் செய்து, நாரைக் கொண்டு பாதங்களைத் தேய்த்துச் சுத்தம் செய்யவும். பிறகு, கடுகுப் பொடி, வெண்ணெய் சேர்த்துப் பாதங்களைத் தேய்த்துத் துடைத்தால், வெயிலால் ஏற்படும் கருமை நீங்கி மெத்தென்ற, பட்டுப் போன்ற பாதங்கள்
ஜொலிக்கும்.