Published:Updated:

வீடு vs வேலை - எப்போதும் புத்துணர்வு!

வீடு vs வேலை - எப்போதும் புத்துணர்வு!
பிரீமியம் ஸ்டோரி
வீடு vs வேலை - எப்போதும் புத்துணர்வு!

வெ.வித்யா காயத்ரி - படம்: வி.சதீஷ்குமார்

வீடு vs வேலை - எப்போதும் புத்துணர்வு!

வெ.வித்யா காயத்ரி - படம்: வி.சதீஷ்குமார்

Published:Updated:
வீடு vs வேலை - எப்போதும் புத்துணர்வு!
பிரீமியம் ஸ்டோரி
வீடு vs வேலை - எப்போதும் புத்துணர்வு!

காலை நேரங்களில், பெண்களின் இரு கால்களும் இறக்கைகளாக மாறிவிடுவது இன்று எல்லா வீடுகளிலும் பார்க்கும் நிகழ்வாகிவிட்டது. பால் காய்ச்சுவதில் தொடங்கி ஓடிச் சென்று பேருந்து பிடித்து வேலைக்குச் செல்வதுவரை பரபரப்பு பற்றிக்கொள்ளும் நொடிகளை எப்படியெல்லாம் கையாள்கிறார் என்பதைப் பற்றி நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் பாரதி சேது.

வீடு vs வேலை - எப்போதும் புத்துணர்வு!

* தினமும் காலையில் வேக வேகமாகச் சமைத்துவிட்டு என் குழந்தை களுக்கு ஊட்டிவிடுவேன். பெரும்பாலும் பேருந்தில் செல்லும்போது பாடல் களை கேட்டுக்கொண்டுதான் பயணிப்பேன். பிடித்தப் பாடல்களை முணுமுணுக்கும்போது, அவசரமும் அலுவலக நெருக்கடியும் மறந்துவிடும்.

* வார இறுதி நாள்களில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இதனால் அடுத்த ஐந்து நாள்களும் புத்துணர்வுடன் இருக்க முடிகிறது.

* என் கணவர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தன்னம்பிக்கை குறையாதவர். `சேட்டை சேது’ என்கிற பெயரில் எஃப்.எம்மில் கலக்கிவரும் பிரபல ஆர்ஜே. அவர் அடைமொழிக்கு ஏற்றமாதிரியே வீட்டிலும் அவர் செய்யும் சேட்டைகள் எங்களை எப்போதும் மகிழ்வித்துக் கொண்டிருக்கும். அவருடைய தேவைகள் எதுவாக இருந்தாலும், அவரேதான் பார்த்துக்கொள்வார். நன்றாக கார் ஓட்டுவார். அவருக்கு நிகழ்ச்சிகள் இல்லாத நாள்களில் என்னையும் குழந்தைகளையும் காரில் அழைத்துச்சென்று கல்லூரியிலும் பள்ளியிலும் விட்டுவிட்டு வருவார். அவருடைய நம்பிக்கையான பயணத்தை பார்க்கும்போது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் தானாகவே உந்துசக்தி கிடைத்துவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீடு vs வேலை - எப்போதும் புத்துணர்வு!


* அவரவர் வேலைகளை அவரவரே பார்த்துக்கொண்டால், குடும்பத்தில் யாரோ ஒருவர் மட்டும் மொத்த வேலைப்பளுவையும் சுமக்கத் தேவையில்லை. அதனால், கூடுமானவரை என் குழந்தைகளுக்கு அத்தகைய நல்ல பழக்கங்களைக் கற்பிக்கிறேன்.

* தினமும் இரவில் புத்தகம் வாசிப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். வாசிப்பின் மூலமாக புதிய தகவல்களைக் கற்றுக்கொள்வதுடன் கற்றலின் திறனும் அதிகரிக்கிறது. பத்திரிகைகள் படிப்பதன் மூலம் நாட்டு நடப்புகளைத் தவறாமல் தெரிந்துவைத்துக்கொள்கிறேன். தனால் குடும்பத்திலும் பணியிடத்திலும் என்னால் திறம்படச் செயல்பட முடிகிறது.

* வீட்டிலோ, அலுவலகத்திலோ எந்தப் பிரச்னை வந்தாலும், அதைப் புன்னகையுடன் கடக்க முயல்வேன். என் மாமியார் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதோடு, குடும்பச் சுமைகளை பெருமளவுக்கு கவனித்துக்கொள்கிறார்.

*  ஆரோக்கியத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்க நினைப்பேன். அதனாலே என் தினசரி உணவுப் பட்டியலில் ஆரோக்கிய ரெசிப்பிகள் இருக்கும்படி பார்த்துக்கொள்வதுடன் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன்.

* தினமும் மாலையில் வீட்டுக்கு வந்ததும், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதுடன், அடுத்த நாளுக்கான சமையல் குறித்து, வீட்டில் இருப்பவர்களுடன் கலந்தாலோசித்துச் சமையலுக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து வைத்துவிடுவேன்.