Published:Updated:

அபியும் நானும்!

அபியும் நானும்!
பிரீமியம் ஸ்டோரி
News
அபியும் நானும்!

லைஃப்ஆர்.வைதேகி, படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

“சில வருஷங்களுக்கு முன்னாடி என் பொண்ணு அபிநயா, பத்மா சேஷாத்ரி ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தா. அப்போ நாங்க யு.எஸ்ஸுக்கு மாற்றலாகிப் போறதா இருந்தோம். அதுக்காக டி.சி வாங்கப் போயிருந்தேன். ஸ்கூல் ரிசப்ஷேன்லேருந்து ஒருத்தர் வந்து, ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. உங்களுக்கொரு சர்ப்ரைஸ் காத்திட்டிருக்கு’னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல என்னை மாடிக்கு வரச் சொல்லி போன் வந்தது.  அங்கே என் ஸ்கூல் ஃப்ரெண்ட் அன்னபூரணி நின்னுக்கிட்டிருந்தா. என் பொண்ணு அங்க படிக்கிறானு எப்படியோ கேள்விப்பட்டு என்னைத் தேடி வந்திருந்தா. கிட்டத்தட்ட 30 வருஷங்களுக்குப் பிறகு மீண்டும் துளிர்த்த நட்பு அது. நாங்க சந்திச்சுக்கிட்ட அந்தத் தருணத்தை என்னால மறக்கவே முடியாது. அதுக்கப்புறம் இன்னும் சில ஃப்ரெண்ட்ஸைத் தேடிக்கண்டுபிடிச்சோம். இப்போ அடிக்கடி மீட் பண்றோம். விட்டுப்போன அந்த நல்ல நட்பு மறுபடி தொடர்ந்திட்டிருக்கு...

‘மகளிர் மட்டும்’ படம் பண்ணும்போது இந்தச் சம்பவம்தான் ஞாபகத்துக்கு வந்தது. இண்டஸ்ட்ரியைப் பொறுத்தவரைக்கும் நடிகை சுஹாசினியோட என் நட்பு இன்னிக்கு வரைக்கும் தொடர்ந்திட்டிருக்கு. நட்புங்கிறது ஒவ்வொரு பெண்ணோட வாழ்க்கையிலயும் ரொம்பவே முக்கியமானது. அப்பப்போ ஃப்ரெண்ட்ஸை மீட் பண்றதும் மனசுவிட்டு விஷயங்களைப் பகிர்ந்துக்கிறதும் இருக்கணும். இந்தத் தலைமுறையில குடும்பம், நட்புனு ரெண்டையும் பேலன்ஸ் பண்ணத் தெரிஞ்சு வெச்சிருக்காங்க. ரெண்டையும் விட்டுக்கொடுக்காம சமாளிக்கிறாங்க. நல்ல விஷயம்...’’

அபியும் நானும்!

பெரிய கண்களில் மகிழ்வும் நெகிழ்வும் காட்டிப் பேசுகிறார் பானுப்ரியா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மகளிர் மட்டும்’ படம் மூலம் தனது அடுத்த இன்னிங்ஸை அழகாக ஆரம்பித்திருக்கிறார்.

``ஓர் இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் நான் பண்ணியிருக்கிற படம் இது. கதையும் என் கேரக்டரும் ரொம்பப் பிடிச்சிருந்தது. நல்ல டீம். படம் பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டறாங்க. நல்ல படத்துல நானும் இருக்கேங்கிறதுல சந்தோஷம்...’’ - பாசிட்டிவ் விமர்சனங்களில் அக மகிழ்ந்திருப்பவர், இடையில் சில காலம் காணாமல் போன காரணமும் சொல்கிறார்.

``அப்பப்போ படங்கள் பண்ணியிருக்கேன். நடிக்கக் கேட்டு அணுகும்போது சொல்ற கேரக்டர் ஒண்ணும், அப்புறம் படத்துல காட்டற கேரக்டர் வேற ஒண்ணுமா இருந்திருக்கு. அந்த அனுபவங்கள்தான் எந்த வாய்ப்பும் வேணாம்னு விலகி இருக்க வெச்சது. `இவங்கக்கூடத்தான் நடிப்பேன்... இந்த கேரக்டர்லதான் நடிப்பேன்'னெல்லாம் நான் எந்தக் கண்டிஷனும் போடலை. ஆனா, என் நடிப்புக்கு ஓர் அர்த்தம் இருக்கணும்...’’ - நியாயமான கண்டிஷனை முன்வைப்பவர், நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாகிற ‘மகாநதி’யில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். 

திருமணத்துக்குப் பிறகு நடிப்பில் தொடர்வதே பெரிய விஷயம். அப்படியே தொடர்ந்தாலும் அக்கா, அண்ணி, அம்மா... பானுப்ரியாவும் விதிவிலக்கில்லைதானே?

``இது இன்னிக்கு, நேத்திக்கு நடக்கிற விஷயமில்லையே... எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துலேருந்து நடந்திட்டிருக்கு. ஒண்ணும் பண்ண முடியாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அபியும் நானும்!

பாலிவுட்ல எவ்ளோ வயசானாலும் ஹீரோயினாவே நடிக்க முடியுது. காரணம், அவங்க சொந்தப்படங்கள் எடுக்கறாங்க. 40 வயசுக்குப் பிறகு ஸ்ரீதேவி, காஜல்னு பலரும் சொந்தப்படங்கள் எடுத்துத் தனக்குப் பிடிச்ச கேரக்டர்ல நடிக்கிறாங்க. கல்யாணத்துக்குப் பிறகும் நான் ஹீரோயினாதான் நடிப்பேன்னு அடம்பிடிக்கிறதைவிட, கிடைக்கிற கேரக்டரை எவ்வளவு சிறப்பா செய்ய முடியும்னு யோசிக்கிறதுதான் புத்திசாலித்தனம்னு நான் நினைக்கிறேன். அந்த மாதிரி கேரக்டர்ஸ்ல உடன்பாடில்லைன்னா நடிக்க வர வேண்டாமே...’’ - யதார்த்தமான பேச்சு.

சினிமா வாழ்க்கை மட்டுமின்றி, பர்சனல் வாழ்க்கையும் பரிபூரண திருப்தியைக் கொடுத்த நிறைவு தெரிகிறது பானுப்ரியாவின் வார்த்தைகளில்.

அபியும் நானும்!

``கணவர் ஆதர்ஷ் கவுஷல், நேஷனல் ஜியாகிரபிக் சேனல், டிஸ்கவரி சேனல்ல ஆவிட் எடிட்டரா இருக்கார்.  பெரியவங்களால அரேன்ஜ் செய்யப்பட்டு, அப்புறம் லவ் மேரேஜா முடிஞ்சது. கல்யாணத்துக்குப் பிறகு அவர்கூட அமெரிக்கா போயிட்டேன். எங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு அபிநயா. இப்போ டென்த் படிக்கிறா. ஹஸ்பெண்ட் லாஸ் ஏஞ்சல்ஸ்ல இருக்கார். அப்பப்போ போயிட்டு வரோம். எனக்குப் பிடிச்ச படங்களில் நடிக்கிறேன். தோணும்போது டான்ஸ் பண்றேன். எந்தப் பரபரப்போ, அவசரமோ இல்லாத இந்த லைஃப் பிடிச்சிருக்கு.

ஷூட்டிங் இல்லாத நாள்கள்ல பூஜை, கிச்சன், என் பொண்ணுன்னு  பிசியா இருக்கேன். அபி சின்ன வயசுல டான்ஸ் ஆடினதைப் பார்த்துட்டு அவளும் சினிமாவுக்கு வருவாளோனு தோணியிருக்கு. ஆனா, பத்து வயசுக்குப் பிறகு அவ பயங்கரமா படிக்க ஆரம்பிச்சிட்டா. மெடிசின் படிக்கணும்னு ஆசைப்படறா. நிறைய விஷயங்கள்ல என்னைப் போலவே இருக்கா. நானும் அவளும் ரொம்ப க்ளோஸ். சேர்ந்து டான்ஸ் பண்ணுவோம். நிறைய படங்கள் பார்ப்போம். இப்போதைக்கு அவதான் என் உலகம்...’’