Published:Updated:

கலம்கரி - ஒரு வண்ணப் பயணம்!

கலம்கரி - ஒரு வண்ணப் பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கலம்கரி - ஒரு வண்ணப் பயணம்!

யாழ் ஸ்ரீதேவி

கலம்கரி... ஆந்திராவின் பழைமையான கலை வடிவம். முகலாயர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்களின் ஆதரவில் வளர்ந்த அழகு ஆர்ட்!

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டணம் நகரின் அருகில் உள்ள பெத்தென்னா... கலம்கரியின் பிறப்பிடம். குர்தா தொடங்கி, பிளவுஸ், அனார்கலி, லெஹங்கா, துப்பட்டா, கைப்பை என அனைத்திலும் ஃபேஷன் மெட்டீரியலாகியிருக்கிறது கலம்கரி.

கலம்கரி - ஒரு வண்ணப் பயணம்!

கடந்த ஐந்தாண்டுகளாக கலம்கரிக்குப் புத்துயிரூட்ட உழைத்து வருபவர், ஹைதராபாத் தில் வசிக்கும் சங்கீதா. இந்திய அளவில் ஆண்டுக்குப் பத்து இடங்களில் கலம்கரி திருவிழா நடத்திவரும் சங்கீதா, இதன் பழைமை சிதையாமல் புதுமைப் படுத்திவரும் டிசைனர். ஆன் லைனில் இவருக்கு (facebook.com/SangeethaKalamkari) மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கலம்கரி - ஒரு வண்ணப் பயணம்!

``நான் மதுரைப் பொண்ணு. திருமணத்துக்குப் பிறகு, இருபது வருஷங்களா ஹைதராபாத்வாசி'' என்று சிநேகமாகப் பேசுகிறார் சங்கீதா. ``டிஸ்லெக்சியா, ஆட்டிசம் எனக் கற்றலில் குறைபாடுடைய  குழந்தைகளுக்கு ‘ஸ்மைல்ஸ்’ என்ற பெயரில் பத்து வருஷங்களா ஸ்பெஷல் ஸ்கூல் நடத்திட்டு வர்றேன். அஞ்சு வருஷங்களுக்கு முன்னால, ஒரு பிசினஸ் செய்ய லாமேனு யோசிச்சு, ‘லூம்ஸ்’ என்ற பெயர்ல ஒரு சின்ன ஜவுளிக்கடை ஆரம்பிச்சேன். அதுல தனித்த அடையாளம் பெற என்ன செய்ய லாம்னு யோசிச்சப்போ, கலம்கரி வேலைப்பாடு நினைவுக்கு வந்துச்சு’’ என்பவர், அதற்கான கிரவுண்ட் வொர்க்கில் இறங்கியிருக்கிறார்.

கலம்கரி - ஒரு வண்ணப் பயணம்!

``காளஹஸ்திக்குப் போய் கலம்கரி ஓவியங்கள் துணிகளில் உருவாகும் விதத்தைப் படிப்படியா தெரிஞ்சுக் கிட்டேன். இயற்கை முறை, கடினமான மனித உழைப்பு, நுணுக்கமான வேலைப்பாடுகள்னு தயாரானாலும், காட்டன் துணியில வரையப்படுறதால அது அதிக பிரபலம் ஆகலைனு புரிஞ்சுக்கிட்டேன். ஒரு ப்யூர் கலம்கரி வொர்க் புடவை 15 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும். ஆனா, காட்டன்ல அந்த விலைக்குரிய ரிச்னஸ் தெரியாது. அதுவே, கலம்கரி ஓவியங்களை சில்க், சந்தேரி என வேற ஃபேப்ரிக்ல போடும்போது கிராண்ட் லுக் கிடைக்கும்னு முயற்சி செய்தேன்.

கலம்கரி - ஒரு வண்ணப் பயணம்!

கலம்கரி கலைஞர்கள்கிட்ட என் ஐடியாவைச் சொல்லி, ஆர்ட்டிஸ்ட் குழுவை உருவாக்கினேன். வழக்கமான கலம்கரியில சிவப்பு, பச்சை, மெஜந்தானு  இயற்கையில் கிடைக்கிற வண்ணங்கள் மட்டுமே இருக்கும். அவற்றை இன்னும் பளிச்னு காட்ட, பிக்மென்ட் கலர்ஸை அவற்றுடன் சேர்த்தேன். ஒரு வைப்ரன்ட் லுக் கிடைச்சது. இருந்தாலும், புடவை அல்லது சல்வார் முழுக்க கலம்கரியா இருந்தா அவ்வளவா ஈர்க்காதுனு, கலம்கரி பார்டர், கலம்கரி அப்ளிக்னு அங்கங்க பேட்ச் வொர்க் செய்யலாம்னு டிசைன் செய்தேன்’’ என்பவருக்கு, முதல் சில படிகள் வழுக்கவே செய்திருக்கின்றன.

கலம்கரி - ஒரு வண்ணப் பயணம்!

``இவ்வளவு மெனக்கெட்டும், ஆரம்ப காலத்துல பெரிய வரவேற்பு கிடைக்கலை. மனம் தளராம குர்தா, அனார்கலினு அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கினேன். ஆடைக் கண்காட்சிகளில் கலந்துக்கிட்டப்போ, ஜிகுஜிகு உடைகளுக்கு மத்தியில் கலம்கரியை மக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தாங்க... வாங்கலை. அப்போதான், கலம்கரி தனித்துவமானது, அதுக்குத் தனியா கண்காட்சி நடத்தணும்னு கத்துக்கிட்டு களத்தில் இறங்கினேன்.

கலம்கரி - ஒரு வண்ணப் பயணம்!

நான் டிசைன் செய்த புடவை, சல்வாருக்கு நானே மாடலா மாறினேன். என் முகநூல் பக்கத்தில் என் கலம்கரி முயற்சிகளை அப்டேட் செய்துட்டே இருந்தேன். ஆன்லைன்ல கலம்கரியைத் தேடுறவங்க என்னோட புராடக்டை வாங்க ஆரம்பிச்சாங்க’’ என்பவருக்கு, அன்று முதல் வெற்றிதான்!

கலம்கரி - ஒரு வண்ணப் பயணம்!

``காளகஸ்தியிலுள்ள 50 கலைஞர்களை ஒருங்கிணைத்து எனது டிசைன்களை உருவாக்குறேன். அதுல பெரும்பாலானவங்க பெண்கள். என்னோட புதிய முயற்சிகள் அவங்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கு. பழைமைக்கு உயிர்கொடுக்கிறதுதான்  ஃபேஷன். அதை நம்பினதுனாலதான் கலம்கரி எனக்குப் புகழ் கொடுத்திருக்கு’’ என்கிறார் சங்கீதா நன்றியுடன்!

கதை சொல்ல உருவான கலை!

நாயக்க மன்னர்களின் காலத்தில் இந்து சமயப் புராணக் கதைகளைப் பாடகர்களும் இசைக் கலைஞர்களும் ஊர் ஊராகச் சென்று சொல்லி வந்தனர். அப்போது அந்தக் கதைகளை பெரிய சீலைகளில் ஓவியக் காட்சிகளாக வரைந்து எடுத்துச்செல்லத் தொடங்கினர். முதல் கலம்கரி ஓவியம் அதுதான். நாயக்கர் காலத்தில் இக்கலை தஞ்சை வரை பரவியது. கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சிக்கல் நாயக்கன் பேட்டையில் இன்றும் கலம்கரி ஓவியங்கள் வரையப்படுகின்றன. இங்கு நம் மண்ணின் மரபுகளுடன் ‘தஞ்சாவூர் கலம்கரி’ என்ற புதிய பாணி பின்பற்றப்படுகிறது.

தாவரச் சாயங்களே அசல் கலம்கரி!

அடிப்படையில் கலம்கரி என்பது, தாவரச் சாயங்கள்கொண்டு பருத்தித் துணிகளில் கைகளால் அழகிய ஓவியங்களாகத் தீட்டப்படுவது. இன்று கலம்கரியை பல ரகத் துணிகளிலும், செயற்கைச் சாயங்களைக் கொண்டும், மெஷின் பிரின்ட்களாகவும் உருவாக்குகின்றனர். என்றாலும், இயற்கைச் சாயம் கொண்டு பாரம்பர்ய முறையில் தயாரிக்கப்படும் கலம்கரிக்கு ஒரு ஸ்பெஷல் மார்க்கெட் இருக்கிறது.