Published:Updated:

என் தோற்றம்... என் பெருமிதம்... காற்றைப் போல நான் எழுவேன்!

என் தோற்றம்... என் பெருமிதம்... காற்றைப் போல நான் எழுவேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
என் தோற்றம்... என் பெருமிதம்... காற்றைப் போல நான் எழுவேன்!

மு.பிரதீப் கிருஷ்ணா

வெற்றியின் உச்சத்துக்கு ஆண் செல்லும்பட்சத்தில் வெற்றியும் திறமையுமே அடையாளம். தோற்றம், பின்புலம், கடந்தகாலம் எதுவும் பெரிய விஷயமில்லை.

பெண்ணுக்கு? திறமை, வெற்றி, புகழ் அனைத்தையும் தாண்டி அவளுக்கான வேறோர் அடையாளத்தை இந்த உலகம் தேடிக்கொண்டே இருக்கிறது. போராட்டங்கள் பல கடந்து சாதித்தவளுக்கும் தோற்றம், நிறம், அழகு போன்ற விஷயங்களே அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன.

செரீனா வில்லியம்ஸ்... மகளிர் டென்னிஸின் தங்க மங்கை. 39 கிராண்ட் ஸ்லாம்கள், 4 ஒலிம்பிக் தங்கங்கள், 85 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை என செரீனாவுக்கு அங்கீகாரம் கொடுத்த இந்த உலகம், சங்கடங்களையும் சேர்த்தே அளித்தன. கருப்பு என்கிற காரணத்தால் சிறுவயதிலேயே டென்னிஸைத் துறக்க நிர்பந்திக்கப்பட்ட இவர், அத்தனை சோதனைகளையும் மீறி வெற்றி பெற்றார். ஆனால், இந்தச் சமூகம் அவர் நிறத்தின்மீது இனவெறியைப் பாய்ச்சியது.  இன்னும் பாய்ச்சிக்கொண்டே இருக்கிறது.

என் தோற்றம்... என் பெருமிதம்... காற்றைப் போல நான் எழுவேன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டென்னிஸ் அரங்கின் ஈடு இணையில்லா இந்த சாம்பியன், இப்போது ஒரு தாய். தன்னைப்போலவே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அமெரிக்க பிசினஸ்மேன் அலெக்சிஸ் ஒஹானியனுக்கும் செரீனாவுக்கும் செப்டம்பர் 1 அன்று பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்த்து மகிழ்ந்த இந்தத் தாயின்  மனதுக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள். தன்னை நடத்தியது போலத்தானே இச்சமூகம் அவளையும் நடத்தும்? தன் அன்னைக்குக் கடிதம் எழுதுகிறார் செரீனா. வேடிக்கையும் வேதனையும் கலந்து எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதம் பலரின் கன்னங்களைப் பதம் பார்க்கும். அதன் சுருக்கப்பட்ட வடிவம் இங்கே!

“அன்புள்ள அம்மா,

என் தோற்றம்... என் பெருமிதம்... காற்றைப் போல நான் எழுவேன்!

நான் அறிந்த திடமான பெண்களில் நீங்களும் ஒருவர். நான் என் குழந்தையைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன் (கடவுளே... ஆம், எனக்குக் குழந்தை பிறந்துள்ளது!). அவள் என்னைப் போன்றே கால்களும் கரங்களும் கொண்டிருக்கிறாள். என்னைப் போலவே வலுவான, திடமான உடலைக் கொண்டிருக்கிறாள். 15 வயதிலிருந்து இன்றுவரை நான் சந்தித்துக் கொண்டிருக்கும் இன்னல்களை இவளும் சந்திக்க நேரிட்டால், அதை நான் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை.

வெளித்தோற்றம் வலுவாக இருந்ததால் என்னை  ‘ஆண்’ என்றே அடையாளப்படுத்தினர். நான் ஊக்கமருந்துகள் பயன்படுத்துவதாகவும் கூறினார்கள் (ஆனால், நான் எப்போதுமே மிகவும் நேர்மையாகவே செயல்பட்டேன்). மற்ற பெண்களைவிட நான் பலமாக இருந்ததால், `இவள் பெண்களுடன் விளையாடக் கூடாது. ஆண்கள் விளையாட்டுக்கே உகந்தவள்’ என்றும் கூடப் பேசினார்கள்  (இல்லை. நான் கடுமையாக உழைத்தேன். இந்த நேர்மாறான தோற்றத்துடன்தான் பிறந்தேன். ஆனால், நான் அதற்காகப் பெருமைப்படுகிறேன்).

சில பெண்கள் இப்படியும் இருப்பார்கள் என்று உலகத்துக்கு நாம் உணர்த்தியதற்காகப் பெருமைப் படுகிறேன். நாம் அனைவரும் ஒரேமாதிரி இருப்பதில்லை. நம்முள் நெளிவு, பலம், திடம், உயரம், குள்ளம் என பல வேற்றுமைகள். ஆனாலும், நாம் பெண்களே. அதனால் நமக்குப் பெருமையே!

எனக்கு முன் இருக்கும் இந்தச் சவால்களை எதிர்கொள்ள முன்மாதிரி யாக விளங்கும் உங்களுக்கு நன்றி.

என் தோற்றம்... என் பெருமிதம்... காற்றைப் போல நான் எழுவேன்!

நீங்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த வற்றையே என் மகள் ஒலிம்பியாவுக்கும் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் கொண்டிருந்த மனபலத்தை நானும் கொண்டிருக்க  விரும்புகிறேன்.

எனக்கு நீங்கள் தொடர்ந்து உதவு வீர்கள் என்று நம்புகிறேன். நான் உங் களைப் போல சக்திவாய்ந்தவளாகவும் சாதுவானவளாகவும் இருக்கிறேனா எனத் தெரியாது. விரைவில் அதை அடைவேன் என்று நம்புகிறேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன்!

நீங்கள் சுமந்த ஐவருள் இளையவள்,

- செரீனா

ப்படி முடியும் அந்தக் கடிதம் நிறமும் தோற்றமும் ஒரு சிசுவையும் அவள் தாயையும் எப்படியான சூழ்நிலைக்கு இந்தச் சமூகம் தள்ளிக்கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. செரீனா மட்டுமல்ல, எண்ணற்ற பெண்கள் இப்படிப்  பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.  ``என்னை நீங்கள் வார்த்தைகளால் தாக்கலாம். உங்கள் வெறுப்பால் என்னைக் கொல்லவும் முயலலாம். ஆனால், காற்றைப் போல நான் எழுவேன்” என்று ஒருமுறை கூறிய செரீனா, இந்த முறை இன்னும் பலமாக எழப்போகிறார். காற்றாக அல்ல... புயலாக!

செரீனா பெற்றெடுத்த குட்டிச் செல்லமே... கவலைப்படாதே! ஈரம் கொண்ட சமத்துவ உள்ளங்கள் நீ தவழ்ந்து வர சிவப்புக் கம்பளம் விரித்துக் காத்திருக்கின்றன!