Published:Updated:

இனி வேண்டாம் அழுகாச்சி!

இனி வேண்டாம் அழுகாச்சி!
பிரீமியம் ஸ்டோரி
இனி வேண்டாம் அழுகாச்சி!

சிரி சிரி சிரிவிக்னேஷ் சி செல்வராஜ்

இனி வேண்டாம் அழுகாச்சி!

சிரி சிரி சிரிவிக்னேஷ் சி செல்வராஜ்

Published:Updated:
இனி வேண்டாம் அழுகாச்சி!
பிரீமியம் ஸ்டோரி
இனி வேண்டாம் அழுகாச்சி!

‘சீரியல் பார்த்தால் கண்ணைக் கசக்குவது சகஜம்தானே' என்று சொல்வதெல்லாம் பழங்காலம் மக்களே! இப்போதெல்லாம் சீரியலோ, பேய் படமோ விழுந்துவிழுந்து சிரிப்பதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். இப்படி சத்தமே இல்லாமல் நகைச்சுவைக்காகவே சில தொடர்கள் உலக லெவலில் ஹிட் அடித்து இருக்கும் நேரத்தில் உலக அளவில் ஹிட் அடித்த சில நகைச்சுவை டி.வி நிகழ்ச்சிகளைப் பற்றிச் சும்மா தெரிஞ்சுக்கலாம் வாங்க!

தி பிக் பேங் தியரி (The Big Bang Theory)

சி.பி.எஸ் (CBS) சேனலில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஒளிபரப்பாகும் இந்த சிச்சுவேஷன் காமெடி சீரியல் ஆரம்பத்தில் சுணக்கமாக இருந்தாலும் பிறகு, பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரு அதிமேதாவி நண்பர்கள்,  இரண்டு பொதுப்புத்தி கொண்டவர்கள் மற்றும் ஒரு மீடியாவுக்குச் செல்ல விரும்பும் பெண் என இவர்கள் ஒரே அப்பார்ட்மென்ட்டில் இருக்கும்போது அவர்களது வாழ்க்கை எப்படியிருக்கும் என நகைச்சுவையாகச் சொல்லும் இந்த சீரியலில், காமெடி கியாரண்டி.

இனி வேண்டாம் அழுகாச்சி!

#அஞ்சறைப்பெட்டி யூடியூப்பில் பார்க்க...

https://goo.gl/DVciN2

தி ஆபீஸ் (The Office)

அலுவலகத்தில் தினசரி நிகழும் சம்பவங்களை நகைச்சுவையாக அணுகும் நோக்கத்தோடு என்.பி.சி (NBC) டி.வி-யில் தொடங்கப்பட்டது `தி ஆபீஸ்’ சீரியல். ஆபீஸ் டூர், அப்ரைசல் கலாட்டா, போர்டு மீட்டிங், மேனேஜர் பஞ்சாயத்துகள் என எல்லோரும் அலுவலகங்களில் சந்திக்கும் விஷயங்களை ஒரு கம்பெனியில் நிகழும் சம்பவங்களாகக் காமெடியாகச் சொல்லி ஹிட் அடித்தது, இந்த சிட்காம் ஷோ. ஒன்பது வருடங்களாக 201 எபிஸோடுகள் ஒளிபரப்பப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி வேண்டாம் அழுகாச்சி!

#ஆபீஸ் டகால்டியூடியூப்பில் பார்க்க...

https://goo.gl/z9SsYd

சாட்டர்டே நைட் லைவ்

ஆண் பெண் பாகுபாடில்லாமல் பார்வையாளர்களைக் கொண்ட நிகழ்ச்சி இது. 1975-ல் தொடங்கி காமெடி நிகழ்ச்சிகளின் வெற்றி வரலாற்றுக்கு விதைபோட்ட நிகழ்ச்சி எனலாம். அரசியல் நிகழ்வுகள், அமெரிக்கக் கலாசாரம் எனச் சகலத்தையும் நையாண்டி செய்யும்விதமாக வாரம் ஒரு டாப்பிக்கோடு வெவ்வேறு நபர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று காமெடியில் கலக்குவார்கள். இந்த நிகழ்ச்சி ‘cold open’ எனும் டைட்டில் கார்டு போடுவதற்கு முன்பே வெல்கம் செய்யும் முறையில் தொடங்கப்பட்டது.  ட்ரம்ப் வெளியுறவுக் கொள்கைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக ட்விட்டரில் அதிக கவனம் செலுத்துவதாகக் கலாய்த்து ஒளிபரப்பான எபிஸோட்டால்  ட்ரம்ப் கொந்தளித்ததும் நடந்திருந்திருக்கிறது.

இனி வேண்டாம் அழுகாச்சி!

#நையாண்டி மேளம் யூடியூப்பில் பார்க்க...

https://goo.gl/mMkdLx

நியூ கேர்ள் (New Girl)

அமெரிக்காவின் சிச்சுவேஷன் காமெடி சீரியலான `நியூ கேர்ள்’ ஃபாக்ஸ் டி.வி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக் கிறது. ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஜெஸிகாவும் அவள் சந்திக்கும் பிரச்னைகளையும் மையமாக வைத்து தொடர்ந்த இந்த சீரியல் ஆறாவது சீசனாக வெற்றிகரமாகத் தொடர்கிறது. பெண்களின் ஃபேவரைட் ஷோ எனலாம். பத்து மில்லியன் அமெரிக்கர்களுக்கு மேல் பார்த்து பலத்த வரவேற்பைப் பெற்ற இந்த ஷோ வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டது.

இனி வேண்டாம் அழுகாச்சி!

#வெளிநாட்டுப் பொண்ணு யூடியூப்பில் பார்க்க...

https://goo.gl/mavwaJ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism