Published:Updated:

“நயன்தாரா மாதிரி நல்ல நடிகை ஆகணும்!”

“நயன்தாரா மாதிரி நல்ல நடிகை ஆகணும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நயன்தாரா மாதிரி நல்ல நடிகை ஆகணும்!”

ஆர்.வைதேகி

ர்வசி மாதிரியே சிரிக் கிறார்... ஊர்வசி மாதிரியே சிணுங்குகிறார்... ‘மகளிர் மட்டும்’ படத்தில் ஊர்வசியின் சின்ன வயது கேரக்டரில் நடித்த வந்தனா சேச்சிக்குப் பூர்வீகம் கொச்சினாம்.

‘`யாரை மாதிரி வேணா நடிச்சிடலாம். ஆனா, ஊர்வசி மேடம் மாதிரி நடிக்கிறது ரொம்பக் கஷ்டம். ரிகர்சல் டைம்ல ரொம்ப கஷ்டப்பட்டேன். ‘ஊர்வசி மேடத்தை அப்படியே காப்பி பண்ணாதீங்க. அவங்க மேனரிசம்ஸைக் கவனியுங்க. அதை உங்க ஸ்டைல்ல பண்ணுங்க’னு சொல்லிட்டாங்க. இது எனக்கு முதல் படம். `சொதப்பிடக்கூடாதே'ங்கிற பயத்துலயே நடிச்சேன். படம் பார்த்தவங்க எல்லாரும் பாராட்டறாங்க... கனவா, நினைவான்னே தெரியலை...’’ - நிறைய சிரிப்பும் கொஞ்சம் பேச்சுமாக ஈர்க்கும் வந்தனா, எம்.ஏ. சோஷியாலஜி மாணவி.

‘`ஸ்கூல் படிக்கிறபோதே மாடலிங்லயும் நடிப்புலயும் ஆர்வம் உண்டு. நிறைய விளம்பரங்களுக்கு மாடலிங் பண்ணியிருக்கேன்.  என் போட்டோஸ் எப்படியோ நாகர்கோயில்ல ஒரு கோ-ஆர்டினேட்டர் கையில சிக்கியிருக்கு.  அவங்க  போன் பண்ணி, `பிரம்மானு ஒரு டைரக்டரோட படத்துக்கு ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு வர முடியுமா'னு கேட்டாங்க. ‘இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் வந்தனா’னு உடனே ஓகே சொன்னேன். பிரம்மா சாரே கொச்சினுக்கு வந்தார். அவர்கூட பிரபல மேக்கப் மேன் பட்டணம் ரஷீது சாரும் இருந்தார். அவர்தான் எனக்கு ஜூனியர் ஊர்வசி மாதிரி மேக்கப் பண்ணினார். பிரம்மா சார் சில சீன்ஸ் கொடுத்து நடிச்சுக் காட்டச் சொன்னார். எல்லாம் முடிஞ்சது. ‘சொல்லியனுப்பறோம்’னு கிளம்பிட்டாங்க.

“நயன்தாரா மாதிரி நல்ல நடிகை ஆகணும்!”

ரெண்டு நாள் பயங்கர படபடப்போடு இருந்தேன். மூணாவது நாள் ‘நீங்க செலக்ட் ஆகிட்டீங்க’னு போன் வந்தது. ஊர்வசி மேடம் நடிச்ச வேற சில படங்களோட கிளிப்பிங்ஸை எனக்கு அனுப்பி வெச்சு, அதையெல்லாம் பார்த்து அவங்க நடிப்பைக் கவனிக்கச் சொன்னாங்க. அந்த ஹோம்வொர்க்கை எல்லாம் முடிச்சுட்டுச் சென்னை வந்தேன். போட்டோ ஷூட்டுல ஊர்வசி மேடத்தை மீட் பண்ணினேன். என்னைப் பார்த்து ஷாக் ஆயிட்டாங்க. ‘அப்படியே என்னை மாதிரியே இருக்காளே’னு டைரக்டர்கிட்ட ஆச்சர்யப்பட்டாங்க...’’ - வார்த்தைகளில் முந்திக் கொள்கிற மலையாளத்தைக் கவனமாகத் தவிர்த்துத் தொடர்கிறார் வந்தனா.

‘` ‘மகளிர் மட்டும்’ ஷூட்டிங் ஒரு ஸ்கூல்ல நடந்திட்டிருந்தது. பிரேக் டைம்ல நான் தனியா உட்கார்ந்திருந்தேன். அந்த வழியில போயிட்டிருந்த நடுத்தர வயசுப் பெண்கள் சிலர் என்கிட்ட வந்து, ‘நீ ஊர்வசியோட பொண்ணா’னு கேட்டாங்க. எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியலை. ‘ஆத்தா நான் பாஸாயிட்டேன்’னு மனசு துள்ளிக் குதிச்சது. ஆனாலும், ஊர்வசி மேடம் மாதிரியே இருக்கிறதை மட்டும் வெச்சு சமாளிக்க முடியாதுனு தெரியும். ஷூட்டிங் நடந்த முப்பது நாள்களும் மனசுக்குள்ள ஊர்வசியாவே வாழ்ந்திருக்கேன். அத்தனை உழைப்புக்கும் அந்த ஒரு சீன் பேர் வாங்கித் தந்திருச்சு...’’ - சிலிர்க்கிறார் சின்ன ஊர்வசி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“நயன்தாரா மாதிரி நல்ல நடிகை ஆகணும்!”

``ஃப்ரெண்ட்ஸ் நாங்க மூணு பேரும் பிரியற அந்த சீன் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்ச சீனும் அதுதான். என் ஃப்ரெண்ட்ஸை ஹாஸ்டலை விட்டுக் கூட்டிட்டுப் போயிடுவாங்க. நான் மட்டும் ஸ்டோர் ரூம்ல மாட்டிப்பேன். என்னை விட்டுட்டுப் போறாங்களேங்கற தவிப்புல கதவுக் கண்ணாடியை உடைச்சுக்கிட்டு வெளியில ஓடிவருவேன். அந்த சீன்ல என் விரல் கட்டாகி, தையல் போடற அளவுக்குப் போயிடுச்சு. ஆனாலும், சீன் முடியறவரைக்கும் அதைக் காட்டிக்காம நடிச்சுட்டேன். `ரொம்ப இயல்பா செய்தீங்க'னு சூர்யாவும் ஜோதிகாவும் பாராட்டினது மறக்க முடியாதது...’’ - ஊர்வசியிலிருந்து வெளியே வராதவராகச் சொல்பவருக்கு, நிஜ வாழ்க்கையிலும் காலேஜை கட் அடித்துவிட்டுப் படம் பார்த்த அனுபவங்கள் உண்டாம்.

‘`ஆனா, படத்துல வந்த மாதிரி நிஜத்துல ஒரு தடவைகூட மாட்டலைங்கிறதுதான் ஸ்பெஷல்...’’ - எல்லா முறையும் எஸ்கேப்பாகிவிட்டவரின் எதிர்கால லட்சியம்... தமிழ், மலையாள சினிமாவில் நல்ல நடிகை என்கிற அடையாளம்...

‘`நயன்தாரா மாதிரி’’ என்று அழுத்தம் சேர்க்கிறார்.

நல்லது!