தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

“பருமனும் அழகே!” - இது பாடி பாசிட்டிவிட்டி கான்செப்ட்

“பருமனும் அழகே!” - இது பாடி பாசிட்டிவிட்டி கான்செப்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
“பருமனும் அழகே!” - இது பாடி பாசிட்டிவிட்டி கான்செப்ட்

ஸ்ரீலோபாமுத்ரா

‘` ‘ஒல்லியான, அழகான பெண்’ என்றுதான் சொல்ல வேண்டுமா? ‘பருமனான, அழகான பெண்’ என்பதை ஏற்றுக்கொள்ளும் மனது, முதலில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு வேண்டும்’’ - அழுத்தமாகச் சொல்கிறார் ஃபல்குனி வசவடா... கொழுகொழு கன்னங்கள், அடர் லிப்ஸ்டிக், ஒன்றுக்கொன்று கச்சிதமாகப் பொருந்தும் ஆடை, ஆபரணம், எல்லாவற்றுக்கும் மேலாக மிடுக்கான அணுகுமுறை என்று தோற்றத்திலும் ஈர்க்கிற பெண்மணி!  

“பருமனும் அழகே!” - இது பாடி பாசிட்டிவிட்டி கான்செப்ட்

அகமதாபாத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் ஃபல்குனியின் ‘Falguni’s Fashion Fundas’ என்கிற ஃபேஸ்புக் பக்கம், ஆரம்பித்த ஆறு மாதங்களுக்குள் ஐயாயிரம் லைக்ஸைக் கடந்துள்ளது. காரணம், அதில் அவர் விதைக்கும் ‘பாடி பாசிட்டிவிட்டி கான்செப்ட்’.

``பெண்களை ‘இதைச் செய்யுங்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று துரத்தும் மற்றுமொரு ஃபேஷன் பேஜ் அல்ல, என் முகநூல் பக்கம். இதில், சரும நிறம் முதல் உயரம், எடை வரை தங்களின் இயல்பான தோற்றத்தை ‘அழகு’ என்று ஏற்றுக்கொள்ளும், கொண்டாடும் மனநிலையைப் பெண்களுக்குத் தந்து, அந்தத் தோற்றத்துக்கு ஏற்றவாறு அவர்கள் அலங்கரித்துக்கொள்ள வழிகாட்டுகிறேன். அதுதான், பாடி பாசிட்டிவிட்டி கான்செப்ட்'' என்கிறார் ஃபல்குனி தலைகோதி.

‘`ஆரோக்கியமும் அளவான எடையுடன் இருப்பதும் முக்கியம்தான். ஆனால், ஒபிஸிட்டி, தைராய்டு பிரச்னை, திருமணம், பிரசவம் போன்ற காரணங்களால் உடலின் மெட்டபாலிஸம் ஒத்துழைக்காமல்போக, டபுள் எக்ஸ்எல், ட்ரிபிள் எக்ஸ்எல் சைஸ்களில் இருக்கும் பெண்கள், அதனாலேயே தாழ்வு மனப்பான்மை கொள்வதைத் தவிர்த்து, தாங்களும் அழகுதான் என்று உணர வேண்டும்.

நம் சமூகம் நம்மை அவ்வளவு எளிதில் இந்தப் பக்குவத்தை அடைவதற்கு அனுமதிக்காதுதான். படிப்பில் இரண்டு தங்கப்பதக்கங்கள் பெற்ற நானும், உடல் எடை குறித்த மற்றவர்களின் கேலி, விமர்சனங்கள், எடையைக் குறைக்க அவர்கள் தாராளமாகத் தரும் ஆலோசனைகள் என்று நிறைய கசப்பான அனுபவங்களைக் கடந்திருக்கிறேன். ஆனால், ‘ப்ளஸ் சைஸ் ஃபேஷன் கான்செப்ட்’ என்கிற பருமனான பெண்கள் தங்களின் உடல் அமைப்புக்குப் பொருத்தமாக உடுத்தும் ஃபேஷனை நான் கைக்கொண்டேன். அதைத்தான் என் முகநூல் பக்கத்திலும் பிரபலப்படுத்தி வருகிறேன்’’ என்று சொல்லும் ஃபல்குனியின் ஆலோசனை களால் பலன்பெற்ற கல்லூரிப் பெண்கள் முதல் இல்லத் தரசிகள் வரை, கமென்டில் வந்து அவருக்கு நன்றி சொல்கிறார்கள்.

‘`மை டியர் லேடீஸ்... உங்கள் கண்ணாடியை ரசியுங்கள். காட் இட்?!” - புன்னகைக் கிறார் ஃபல்குனி!

பருமனானவர்களுக்கு ஃபல்குனி பரிந்துரைக்கும் ஃபேஷன் டிப்ஸ்! 

• ப்ளஸ் சைஸ் பெண்கள் முதலில் தங்கள் உடலின் வடிவத் தைப் புரிந்துகொள்ள வேண்டும். உடல் பகுதி, இடுப்புப் பகுதி, தொடைப் பகுதி என்று எந்தப் பகுதி பருமனாக உள்ளதோ, அதைச் சரிசெய்யும் வகையில் டிசைன் செய்த ஆடைகளை அணிய வேண்டும்.

• பிரகாசமான வண்ணங்கள் மற்றும் வேலைப்பாடுகளுடைய உடைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

• ஜீன்ஸ் அணியும்போது இடுப்பளவுக்கு இறக்கமான டாப்ஸ் அணியலாம்.

• திரண்ட தோள்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கழுத்துப் பகுதியை ‘வி’ அல்லது சதுர வடிவில் டிசைன் செய்து அணியலாம்.

• பப்ளியாக இருப்பதால் சற்று இறுக்கமான ஆடைகள் அணியத் தயங்க வேண்டாம். தன்னம்பிக்கையுடன் முயன்று பார்க்கலாம்.

• எப்போதும் ‘ஐ’ம் பியூட்டிஃபுல்’ என்ற மந்திரத்தை மறக்கக் கூடாது.