Published:Updated:

நினைச்சது மட்டுமல்ல... நினைக்காததும் நடக்க ஆரம்பிச்சிருக்கு!

நினைச்சது மட்டுமல்ல... நினைக்காததும் நடக்க ஆரம்பிச்சிருக்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
நினைச்சது மட்டுமல்ல... நினைக்காததும் நடக்க ஆரம்பிச்சிருக்கு!

குட்டி பானுப்ரியாஆர். வைதேகி

“நுங்கம்பாக்கம் கவர்மென்ட் ஸ்கூல்ல டென்த் படிச்சிட்டி ருந்தேன். ரஜினி சாரோட ‘சிவாஜி’ படம் பார்க்கிறதுக்காக கிளாஸை கட் அடிச்சிட்டு ஃப்ரெண்ட்ஸ்கூட தியேட்டருக்குப் போனேன். அது எக்ஸாம் டைம். ஃப்ரெண்ட்ஸ் பிரின்சிபால்கிட்ட போட்டுக்கொடுத்துட்டாங்க. நான் நல்லா படிக்கிற பொண்ணு. ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவேன்னு எல்லாரும் எதிர்பார்த்திட்டிருந்த டைம்ல நான் இப்படிப் பண்ணினதை பிரின்சிபாலால ஏத்துக்கவே முடியலை. அம்மா அப்பாவைக் கூப்பிட்டு டி.சி கொடுத்துட் டாங்க. அப்புறம் பிரைவேட்டா எழுதி பாஸ் பண்ணினேன்.

அம்மா அப்பாவுக்கு என் சினிமா ஆர்வம் தெரியும்கிறதால ஒண்ணும் சொல்லலை. பல வருஷங்கள் கழிச்சு அதே சீன் என் முதல் படத்துல வந்தபோது செம த்ரில்லிங்கா இருந்தது. என் லைஃபையே திரும்பிப் பார்க்கிற மாதிரி இருந்துச்சு. என்ன ஒண்ணு... நிஜ வாழ்க்கையில என்கூட கிளாஸை கட் அடிச்சிட்டு படம் பார்க்க வந்த ஃப்ரெண்ட்ஸை என்னால ஃபேஸ்புக் மூலமா கூடக் கண்டுபிடிக்க முடியலை...’’

நிறைய மகிழ்ச்சியும் கொஞ்சம் வருத்தமும்  கலந்து பேசுகிறார் ஷோபனா கார்த்திகேயன். ‘மகளிர் மட்டும்’ படத்தில் ஜூனியர் பானுப்ரியாவாகவும் அவரின் மகளாகவும் நடித்திருப்பவர்.

நினைச்சது மட்டுமல்ல... நினைக்காததும் நடக்க ஆரம்பிச்சிருக்கு!

``நான் சென்னைப் பொண்ணுங்க. சேட்டைக்கார தமிழ்ப் பொண்ணு. இப்போ பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சிட்டிருக்கேன். தேவி படங்கள் பார்த்துப்பார்த்து சிறு வயசுலேருந்தே சினிமான்னா அவ்வளவு பிடிக்கும்.
ஸ்கூல் படிக்கிறபோதே நடிக்கிறதுக்கான வாய்ப்பு தேடிட்டிருந்தேன். என் தங்கச்சி கோமதி மாடலிங் பண்ணிட்டிருக்கா. ‘மகளிர் மட்டும்’ படத்துக்குச் சிறு வயசு பானுப்ரியா கேரக்டருக்கு ஆள் தேடறாங்கங்கற தகவல் என் தங்கை மூலமாதான் எனக்குத் தெரிஞ்சது. ‘நீ ட்ரை பண்ணு... நிச்சயம் செலக்ட் ஆவே’னு சொன்னா. எனக்குச் சுத்தமா நம்பிக்கையே இல்லை. கொஞ்சமும் எதிர்பார்க்காத நேரத்துல எல்லாமே நடந்திருச்சு. ஆடிஷன் போனபோதும் சரி, படத்துக்கு சைன் பண்ணினபோதும் சரி... பெரிய சீரியஸ்னஸ் இல்லை.  அப்போ, அது சூர்யாவோட படம்னுகூடத் தெரியாது. அதுதான் எனக்கு  லைஃப்பா இருக்கப் போகுதுங்கிற நினைப்புகூட இல்லை. முதல் நாள் ஷூட்டிங்லதான் ‘அடடா நாம பண்றது எவ்வளவு பெரிய கேரக்டர்’னு புரிஞ்சது. என்னைச் சுற்றிலும் பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட்ஸ்.

பானுப்ரியா மேடத்தோட சிறு வயசு கேரக்டர்லயும் செகண்ட் ஹாஃப்ல அவங்க மகளாகவும் நடிக்கப் போறேன்னு தெரிஞ்சதும் அவங்க படங்கள் நிறைய பார்த்து ஹோம்வொர்க் பண்ணினேன். நடிப்பு சொல்லிக்கொடுத்தபோது, பானுப்ரியா மேடத்தோட மேனரிசம்ஸை ஃபாலோ பண்ணச் சொன்னாங்க. மிமிக்ரி பண்ற மாதிரி இருக்கக் கூடாது... அந்தக் கேரக்டராகவே வாழணும்னு சொன்னாங்க. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நினைச்சது மட்டுமல்ல... நினைக்காததும் நடக்க ஆரம்பிச்சிருக்கு!

முதல் நாள் ஷூட்டிங்ல பானுப்ரியா மேடத்தைப் பார்த்துப் பேசினேன். ‘நீ என்னை மாதிரியே இருக்கே... நல்லா பண்ணு... நிதானமா இரு’னு வாழ்த்தினாங்க.

எங்கம்மாவும் தங்கச்சியும் ‘நீ பானுப்ரியா மாதிரியே இருக்கே... கண்ணு அவங்களைப் போலவே இருக்கு’னு அடிக்கடி சொல்லியிருக்காங்க. அப்போ அதெல்லாம் பெரிசா தெரியலை. அவங்களை மாதிரி இருக்கேன்கிறதுல சந்தோஷப்பட்டிருக்கேனே தவிர, அதுதான் எனக்கு முதல் வாய்ப்பை வாங்கித் தர போகுதுனு நினைக்கலை...’’ - கூலாகப் பேசுகிற ஷோபனாவின் குரலிலும் பானுப்ரியா பிரதிபலிக்கிறார்.
அப்புறம்?

``முதல் படம் நல்ல பேரை வாங்கிக் கொடுத்திருக்கு. அடுத்த வாய்ப்புக்காகப் பொறுமையா காத்திட்டிருக்கேன். விஜய் சேதுபதி, பிரபாஸ் கூடல்லாம் நடிக்கணும். லைஃப்ல நினைச்சது மட்டுமில்லை, நினைக்காததும் நடக்க ஆரம்பிச்சிருக்கு. ஐயம் ஹேப்பி...’’ - ஷோபனாவின் அழகுக் கண்களில் ஆயிரம் கனவுகள்!