Published:Updated:

சிறுதானிய சூர்மா லட்டு!

சிறுதானிய சூர்மா லட்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுதானிய சூர்மா லட்டு!

லக்ஷ்மி வெங்கடேஷ்

தேவையானவை:

சிறுதானிய மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பொடித்த வெல்லம் - கால் கப், பாதாம் - 50  கிராம் (பொடியாக நறுக்கவும்), ஏலக்காய்  -  4  (தூளாக்கவும்), நெய்  -  தேவையான அளவு.

சிறுதானிய சூர்மா லட்டு!

செய்முறை:

கோதுமை மாவுடன் சிறு தானிய மாவு சேர்த்துக் கலக்கவும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவைச் சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் நெய் ஊற்றி, சூடானதும் உருண்டைகளைச் சேர்த்துப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். உருண்டை கள் ஆறியபின் மிக்ஸியில் பவுடராக அரைத்து, பெரிய கண் உள்ள சல்லடையில் சலிக்கவும். அதனுடன் ஏலக்காய்த்தூள்,  பாதாம் சேர்த்துக் கலக்கவும்.

மற்றொரு வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றி, சூடானதும் வெல்லத்தைக் சேர்க்கவும்.  வெல்லம் கரைந்து மேலே பொங்கி வரும்போது இறக்கி, மாவுடன் சேர்த்துக் கலக்கவும். சிறிதளவு நெய் விட்டு மாவை நன்கு பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சிறுதானிய சூர்மா லட்டு!

விரும்பிய அச்சில் மாவை நிரப்பியும் எடுக்கலாம்.

சிறுதானிய மாவு தயாரிப்பு முறை

சோளம், சாமை, வரகு, குதிரைவாலி, தினை, பனிவரகு – தலா அரை கப், கேழ்வரகு (ராகி) – அரை கப், பச்சைப் பயறு – கால் கப்.

கேழ்வரகையும், பச்சைப் பயறையும் நன்றாகக் கழுவி, முளைகட்டவிடவும். பிறகு, இரண்டையும் வெயிலில் நன்கு காய வைக்கவும். இவற்றில் உள்ள ஈரம் போய் நன்கு உலர்ந்ததும், அனைத்துத் தானியங்களையும் ஒன்றுசேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது இந்த மாவைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

சிறுதானிய மாவு கடைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கிறது.