Published:Updated:

நெல்லையில் ஒரு மைக்கேல் ஜாக்சன்!

நெல்லையில் ஒரு மைக்கேல் ஜாக்சன்!
பிரீமியம் ஸ்டோரி
News
நெல்லையில் ஒரு மைக்கேல் ஜாக்சன்!

அவள் ஜாலி டே கொண்டாட்டம்எஸ்.முத்து பெனினா , படங்கள்: எல்.ராஜேந்திரன்

ல்வாவுக்குப் பிரசித்திபெற்ற நெல்லையில் அவள் விகடன் ஜாலி டே செப்டம்பர் 16-17 தேதிகளில் தித்திப்புடன் நடைபெற்றது. டைட்டில் ஸ்பான்சர் `சத்யா’ நிறுவனம் அவள் விகடனுடன் நடத்திய இந்த  `ஜாலி டே’ வாசகிகள் திருவிழாவை பவர்டு பை ஜி.ஆர்.டி. தங்க மாளிகை மற்றும் அபிராமி அரிசி, அசோசியேட் பார்ட்னர் சுப்ரீம் ஃபர்னிச்சர்ஸ் இணைந்து அமர்க்களப்படுத்தினர்.

போட்டிகளுக்கான முதல்நாள் முன் தேர்வு நெல்லை-திருவனந்தபுரம் சாலையில் உள்ள செல்வி மேரேஜ் ஹாலில் நடந்தது. பாடல், நடனம், நடிப்பு, மிமிக்ரி, ஆர்ட் அண்டு கிராஃப்ட், ரங்கோலி, மெஹந்தி,
அடுப்பில்லாச் சமையல், டப்ஸ்மாஷ், செல்ஃபி என அனைத்து ஏரியாக்களிலும் அரங்கத்தைக் கலகலப்பாக்கினார்கள் அவள்  விகடன் வாசகிகள். 80 வயது பாட்டி ஆக்டிங் போட்டியில் தேர்வாகி இளையவர்களுக்கும் உற்சாகம் தந்தார்.

நெல்லையில் ஒரு மைக்கேல் ஜாக்சன்!

மறுநாள் ஜாலி டே நிகழ்வின் வெல்கம் நடனமாகப் பரதநாட்டியம் அரங்கேற, வளைகரங்களின் கைதட்டல் ஓசைகள் விழாச்சாரல் ஆகின. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சின்னத்திரை ஸ்டார்ஸ் சுட்டி அரவிந்த், சித்ரா ஆகியோர் மேடையேறியதுமே வாசகிகளுக்கு உற்சாகத்தைப் பற்றவைத்தனர். நடனப் போட்டியாளர்கள் மேடையில் ஆட, ‘நாங்களும் சளைத்தவர்கள் இல்லை’ என, பார்வையாளர்கள் இருக்கையிலேயே எழுந்து ஆட, விழா வைப்ரேட் மோடுக்குப் போனது.  தூத்துக்குடி வாசகி வசந்தியின் ஆட்டத்தில் ஆர்ப்பரித்த கூட்டம், ‘எங்க ஊர் மைக்கேல் ஜாக்சன்’ என அவரைக் கொண்டாடி மகிழ்ந்தது. ‘பஞ்சு மிட்டாய் சீல கட்டி’ பாடலுக்கு நடனமாடிய கல்லிடைக்குறிச்சி லதாவைச் ‘சின்ன குஷ்பு’ எனக் கொஞ்சினர். 

சிறப்பு விருந்தினராக ‘வடிவேல்’ பாலாஜி மேடை யேற, வழக்கம்போல செம லூட்டி. தோழிகளின் சிரிப்பொலி நான்ஸ்டாப் ஆனது. மேடையேறிய நம் வாசகி சந்தனமாரி, வடிவேல் பாலாஜியைச் சளைக்காமல் கலாய்க்க, ‘ஆளைவிடுங்க தாயே...’ எனக் கையெடுத்துக் கும்பிட்ட பாலாஜி, அவரை மேடையிலிருந்து இறக்குவதற்கு குளுக்கோஸ் குடிக்க வேண்டியதாகி விட்டது.

அடுத்துவந்த அட்ராக் ஷன்... தொலைக்காட்சி பிரபலம் அசார் பல குரல்களில் பேசி அசத்த, தொடர்ச்சியான கைதட்டல்களைத் தந்தனர் தோழிகள். ரஜினி குரலில் பேசியதும் மேடையேறிய கோமதி பாட்டி, அவருக்குப் பத்து ரூபாய் பரிசளித்துத் தட்டிக்கொடுக்க, ‘தேங்க்யூ பாட்டி’ என்றார் கூல் கெய்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நெல்லையில் ஒரு மைக்கேல் ஜாக்சன்!

சத்யா நிறுவனம் தனது ஷோரூம்களில் நடத்திய `லக்கி பாக்ஸ்' போட்டியில் வென்ற ஆறு நபர்களுக்கு இருபதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

ஜி.ஆர்.டி. தங்க மாளிகை நடத்திய `வளையல் அடுக்குதல்', 'நகையின் எடை என்ன?' ஆகிய போட்டிகளில் வென்ற வாசகர்களுக்குப் பரிசுகள் அள்ளிக் கொடுக்கப்பட்டன. அபிராமி அரிசி வகையில் 2 கிலோ சீரக சம்பா வாங்குபவர்களுக்கு அரை கிலோ தானியம் பாக்கெட் இலவசமாக வழங்கப்பட்டது. அபிராமி அரிசி வகை விளம்பரம் குறித்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சிறப்புப்பரிசுகள் வழங்கப்பட்டன. மியூசிக்கல் சேர் போட்டியில் வென்றவர்களுக்கு சுப்ரீம் ஃபர்னிச்சர் நிறுவனம் `சேர்’ பரிசளித்து மகிழ்ந்தது.

நெல்லையில் ஒரு மைக்கேல் ஜாக்சன்!
நெல்லையில் ஒரு மைக்கேல் ஜாக்சன்!

வாசகிகள் அள்ளிச்சென்ற `ஆன் தி ஸ்பாட்' போட்டிகளின் பரிசு மதிப்பு மட்டுமே ரூபாய் இரண்டு லட்சம் என்பது ஹைலைட். பம்பர் பரிசான ரெஃப்ரிஜிரேட்டர் மேடையில் கண்சிமிட்டியபடியே இருந்தது. சத்யா நிறுவனம் வழங்கும் அந்தப் பரிசை வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்  என அனைவரும் ஆவலோடு  எதிர்பார்த்திருக்க, முடிவை கூலாக அறிவித்தார் சித்ரா. உற்சாக திக் திக் நிமிடங்களுக்குப் பின்னர், சத்யா என்ற நம் வாசகியே ‘சத்யா’ வழங்கிய பம்பர் பரிசைக் கைப்பற்றி ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார்.

நெல்லையில் ஒரு மைக்கேல் ஜாக்சன்!

காலை மாலை டீ, ஸ்நாக்ஸ், மதிய உணவு அளித்து உற்சாகம், துள்ளல் என அள்ளி அள்ளிக்கொடுத்த இந்த ஜாலி டேவை வாசகிகள் ஆசைதீரக் கொண்டாடினர். எப்போதும் குடும்பத்தைத் தோளில் தூக்கிச் சுமக்கும் தோழியர் அனைவரும், அன்று நாள் முழுக்க மகிழ்ச்சியை மட்டுமே மனதில் சுமந்தனர். ‘இந்த நாளை எங்க வாழ்க்கையில் மறக்க முடியாததாக மாற்றிய அவள் விகடனுக்கு ஆயிரம் தேங்க்ஸ்’ என்று நெகிழ்ந்தவர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியாக 500 ரூபாய் மதிப்புள்ள சத்யா கிஃப்ட் கூப்பன் அளிக்கப்பட, மீண்டுமொருமுறை பிரகாசமாகின அவர்களின் முகங்கள்!