Published:Updated:

“நான் பக்கா தமிழ்ப் பொண்ணு!”

“நான் பக்கா தமிழ்ப் பொண்ணு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நான் பக்கா தமிழ்ப் பொண்ணு!”

சனா

து படபட பட்டாசு வெடிக்கும் தீபாவளி சீசன். பண்டிகைக் கொண்டாட்டமென்றால் நம் ஹீரோயின்களின் பர்சனல் பக்கங்கள் இல்லாமலா? இதோ... பரபரப்புடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்த இரு பட்டாம்பூச்சிகளிடம் ஸ்வீட் டாக்!

“நான் பக்கா தமிழ்ப் பொண்ணு!”

``சொந்த ஊர் மதுரை. நான் பக்கா தமிழ்ப் பொண்ணு. துபாயில் செட்டிலாகி 15 வருஷங்களாகிடுச்சு. அம்மா, அப்பா, தம்பி எல்லாரும் அங்கேதான் இருக்காங்க. நான் மட்டும்தான் நடிக்கறதுக்காக இந்தியாவில் சுத்திக்கிட்டிருக்கேன். 2015-ல் `மிஸ் இந்தியா' பட்டம் ஜெயிச்சதன் மூலமா `ஒருநாள் கூத்து’ பட வாய்ப்பு கிடைச்சது. அதுக்கப்புறம் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ படங்கள்ல நடிச்சு, அடுத்தடுத்து ஐந்து படங்கள் முடிச்சிட்டேன். நிறைய படம் பண்ணணும். கெத்தா நிக்கணும்!’’ என்கிற நிவேதா பெத்துராஜுக்கு ஸ்டார் ஃபிஷ் கண்கள்!

“நான் பக்கா தமிழ்ப் பொண்ணு!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சமீபத்தில் விசிட் அடித்த இடம்?

வெங்கட் பிரபுவோட ‘பார்ட்டி’ படத்துக்காக ஃபிஜி தீவுக்குப் போயிட்டு வந்தேன். 

சமீபத்தில் பார்த்த படம்?

‘மாநகரம்’.

பொழுதுபோக்கு?

புக்ஸ் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். டிரைவ் பண்ணப் பிடிக்கும்.

சமீபத்தில் வாங்கிய பொருள்?

சுஸூகி பாலேனோ (suzuki polana) கார்.

“நான்ஸ்டாப்பா பேசுவேன் நான்!”

``அம்மா டீச்சர், அப்பா இன்ஜினீயர். பிறந்தது வளர்ந்தது எல்லாம் கேரளாதான்.  நல்லா தமிழ்ப் பேசுவேன். ‘சாட்டை’ படத்தின்போது எனக்குத் தமிழ்ப் பேசக் கற்றுக்கொடுத்தவர் சமுத்திரக்கனி சார்தான். அந்தப் படத்துக்குப் பிறகு ‘என்னமோ நடக்குது’, ‘மொசக்குட்டி’, ‘அகத்திணை’, ‘புரியாத புதிர்’, ‘குற்றம் 23’ படங்கள்ல நடிச்சேன்.  இப்ப ஜி.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’, அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ பண்ணிட்டிருக்கேன்.

“நான் பக்கா தமிழ்ப் பொண்ணு!”

ரொம்ப ஜாலியா இருக்கணும். தேவைப்பட்டா ரிஸ்க் எடுக்கலாம். தப்பே இல்ல. எதுவா இருந்தாலும் மனசுக்குள்ளேயே வெச்சுக்காம ஓப்பன்னா பேசிடுவேன். திறந்தவெளிப் புத்தகமா இருந்தா சங்கடம் இல்லை பாருங்க’’ - நான்ஸ்டாப்பாக பேசும் மஹிமா நம்பியாருக்கு எல்லாமே ஜாலிதானாம்!

சமீபத்தில் பார்த்த படம்?

தெலுங்கில் ‘நின்னுக்கோரி’. தமிழில் நான் நடித்த ‘புரியாத புதிர்’.

சமீபத்தில் வாங்கிய பொருள் என்ன?

என்னோட செல்ல நாய்க்குட்டி செத்துப்போச்சு. இப்ப  அதுக்குப் பதிலா... வண்ண மீன்களுக்கான தொட்டி.

பிடித்த உணவு?

பிரியாணிதான் என் ஆல் டைம் ஃபேவைரைட். இப்ப டயட் இருக்குறதுனால பிரியாணி சாப்பிடறதே இல்லை.

முதல் பாராட்டு?

‘சாட்டை’ படத்தில் இடைவேளைக் காட்சி வரும் இடத்தில் எனக்குப் நீளமான டயலாக் இருக்கும். அப்போ எனக்குத் தமிழ் தெரியாது. ரொம்பப் பயந்து நடிச்சேன். அந்த சீன் பேசி முடிஞ்சதும் சமுத்திரக்கனி சார் கைதட்டிப் பாராட்டினார். அதுதான் மறக்க முடியாத பாராட்டு!

சமீபத்தில் விசிட் அடித்த ஊர்?

 ‘கொடி வீரன்’ ஷூட்டிங்குக்காகக் கேரளா போய்ட்டு வந்தேன்.

அப்புறம்... மதுரையை எத்தனை முறை விசிட் அடிச்சாலும் போர் அடிக்காது!

பொழுதுபோக்கு?

எனக்குச் சும்மா உட்கார்ந்திருப்பதுதான்  பிடிக்கும். அதனால், சும்மா உட்கார்ந்துட்டே  இயற்கையை ரசிப்பேன். அப்புறம் பேசுறது ரொம்பப் பிடிக்கும். அதனால  யாருக்கிட்டயாவது பேசிக்கிட்டே இருப்பேன்!