Published:Updated:

“பேங்க் வேலையை விட்டுட்டு பொட்டீக் ஆரம்பித்தேன்!”

“பேங்க் வேலையை விட்டுட்டு பொட்டீக் ஆரம்பித்தேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பேங்க் வேலையை விட்டுட்டு பொட்டீக் ஆரம்பித்தேன்!”

மாதம் லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் லட்சுமிவே.கிருஷ்ணவேணி, படங்கள்: ப.சரவணகுமார்

‘`ஆறு வருஷம் பேங்க்ல வேலை பார்த்தேன். ஆனாலும், ‘இது உன் ஏரியா இல்லை’னு மனசு சொல்லிட்டே இருந்துச்சு. ஒரு சுப முகூர்த்த நாள்ல வேலையை விட்டுட்டேன்’’ - சுவாரஸ்யமாகப் பேசுகிறார், சென்னை அண்ணா நகரில் உள்ள ‘பிளண்ட் அண்ட் ஸ்டைல்’ பொட்டீக் உரிமையாளர் லட்சுமி. தொழில் தொடங்கிய நான்கு  ஆண்டுகளுக்குள் லட்சங்களில் மாத வருமானம் பார்க்கும் ஸ்மார்ட் உழைப்பாளி!

``படிக்கிற காலத்துல எல்லோருக்கும் டீச்சர், டாக்டர், இன்ஜினீயர் என எதிர்காலத்தில் என்ன ஆகணும் என்று மனசுக்குள் ஒரு குறிக்கோள் இருக்கும். அப்படிப் படிச்ச படிப்புக்கேற்ப நினைச்ச வேலை கிடைச்சு, செட்டில் ஆகிடுவாங்க பலர். சிலருக்கு, அதுக்கு அப்புறம்தான் தங்களோட ஆர்வம் வேறு ஏதோ என்பது அழுத்தமா புரிய ஆரம்பிக்கும். அப்படித்தான் எனக்கும். ஆறு வருஷம் தனியார் வங்கியில் ரிலேஷன்ஷிப் மேனேஜரா வேலை பார்த்துட்டு இருந்த எனக்கு, ‘நமக்கு ஹெச்.ஆர் ஸ்கில்ஸ் இருக்கு. நம்மால தனியா ஒரு நிறுவனத்தை நடத்த முடியும்’னு மனசுக்குள்ள ஓர் ஆரோக்கியமான குரல் கேட்க ஆரம்பிச்சது. என்னை நானே கண்டுபிடிச்சதை வீட்டில் சொன்னப்போ, ‘ரொம்ப கரெக்ட். உன்னால முடியும்’னு சப்போர்ட் பண்ணினாங்க. 

“பேங்க் வேலையை விட்டுட்டு பொட்டீக் ஆரம்பித்தேன்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதலாளியா இல்லாம, வாடிக்கையாளரா இருந்து யோசிக்கும்போதுதான் தொழிலில் பல தெளிவுகள் கிடைக்கும். ஒரு வார இறுதியில் டிரஸ் எடுக்க கடை கடையா ஏறி இறங்கியும், நான் மனதில் நினைத்திருந்த டிரஸ் எங்கேயும் கிடைக்கல. பெரும்பாலான ஷோரூம்களில் ஒரே மாதிரியான ரகங்கள்தான் இருந்தன. அன்னிக்கு நைட் அந்த விஷயம் என் மனசில் ஓடிட்டே இருந்தது. அடுத்த நாள் காலை... காபி குடித்து கப்பை கீழவைக்கும்போது, என்னோட பிசினஸ் என்னன்னு முடிவெடுத்திருந்தேன்... பொட்டீக். அப்பா, அம்மாகிட்ட, ‘நான் பொட்டீக் வைக்க நினைக்கிறேன். அதுக்கு ஃபேஷன் டிசைனிங் படிக்கணும்’னு சொன்னேன். தோளைத் தட்டிக்கொடுத்தாங்க. கை நிறைய சம்பளம் தந்துட்டு இருந்த வங்கி வேலையை விட்டுட்டேன்.

டிசைனிங் கோர்ஸில் சேரும் முன், ஆடைகள் எப்படித் தயாராகுது என்பதை ஃபேக்டரி விசிட்கள் மூலம் கற்றுக்கொண்டேன். அடுத்ததா டிசைனிங்ல எட்டு மாச டிப்ளோமா கோர்ஸ் படிச்சேன். டிரஸ் மெட்டீரியல்கள், டிசைன்கள் பற்றியெல்லாம் தேடித் தேடித் தெரிஞ்சுக்கிட்டேன்.

“பேங்க் வேலையை விட்டுட்டு பொட்டீக் ஆரம்பித்தேன்!”

பாங்காங், சீனா என பல இடங்களில் இருந்தும் வெஸ்டர்ன்   உடைகளை இறக்குமதி செய்தேன். மும்பையில் ஹோல்சேல் பர்ச்சேஸ் செய்தேன். நிஃப்ட்டில் ஃபேஷன் டிசைனிங் முடித்த டிசைனர்களிடம் உடைகளை வடிவமைத்து வாங்கினேன். வீட்டின் தரைத்தளத்தில் முந்நூறு ஸ்கொயர்ஃபீட்டில் ஒரு ஷோரூம் ஆரம்பிச்சேன். என்னோட கலெக்‌ஷன் பிரத்யேகமா இருந்ததால, உடனுக்குடன் விற்றுத் தீர்ந்தன.

வங்கி வேலையைவிட்ட கொஞ்ச நாள்கள்வரை, ஏதோ ஒன்று நெருடலாத்தான் இருந்தது. ஆனா,

“பேங்க் வேலையை விட்டுட்டு பொட்டீக் ஆரம்பித்தேன்!”

பொட்டீக்கில் வருமானம் வர ஆரம்பிச்ச பிறகு, உற்சாகம் மட்டுமே ஊற்றெடுக்க ஆரம்பிச்சது. தொடர்ந்து பறந்து பறந்து பர்சேஸ், விறுவிறு விற்பனைன்னு தொழில் களைகட்டிச்சு. ரெண்டே வருஷத்துல, அண்ணா நகரில் ஆயிரம் ஸ்கொயர் ஃபீட்டில் ‘பிளண்ட் அண்ட் ஸ்டைல்’ பொட்டீக் ஆரம்பிக்கிற அளவுக்கு, இதில் லாபமும் நம்பிக்கையும் எடுத்தேன். ஐந்து பெண்களை வேலைக்கு அமர்த்தினேன். `நூறு டிரஸ் பார்த்துட்டு, ‘வேற டிசைன் காட்டுங்க’னு கேட்டாலும், கஸ்டமர் களிடம் நோ சலிப்பு... ஒன்லி பொறுமை’ - இதுதான் அந்தப் பெண்களுக்கு நான் சொல்லியிருக்கிற மந்திரம்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் கிட்ட டெய்லரிங் கோர்ஸ் முடிச்சிருக்கிற என் அம்மாவை நம்பி, சீக்கிரமே பொட்டீக்கில் டெய்லரிங் யூனிட் ஆரம்பிக்கப்போறேன். என் பொட்டீக் ஆல்பத்துக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை மாடலாக வைத்து போட்டோஷூட் செய்தோம். நிறைய டி.வி ஆர்ட்டிஸ்ட்டுகள், `விஜே’க்கள், ஸ்டைலிஸ்ட்டுகள் இப்போ என் ரெகுலர் கஸ்டமர்ஸ். காரணம், என் பொட்டீக்கில் 100% யூனிக் கலெக்‌ஷன்ஸ்தான்... ரிப்பீட் இருக்கவே இருக்காது. மாசம் ரூபாய் ஒரு லட்சம் டு ரெண்டு லட்சம் வருமானம் கிடைக்குது. என் மேல நான் வெச்ச நம்பிக்கையைக் காப்பாத்திட்டேன்!” - மனதின் பேச்சைக் கேட்டுத் துணிச்சலான முடிவெடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கும் உற்சாகத்தில் பேசிய இளம் பெண் லட்சுமி, அனுபவசாலியாக டிப்ஸும் கொடுத்தார்...

‘`மனசுக்குப் பிடிச்ச முயற்சியை அதுக்கான உழைப்பைக் கொடுத்து முன்னெடுத்தா நிச்சயம் பலன் கிடைக்கும். எந்தத் தொழிலிலும் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். அதிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர சோர்ந்துடக் கூடாது. எதையுமே அனுபவமாகப் பார்க்க ஆரம்பிச்சிட்டா ஜெயிக்க ஆரம்பிச்சிடலாம்!”