Published:Updated:

“நான் ராமநாதபுரம் பெண்ணு!”

“நான் ராமநாதபுரம் பெண்ணு!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நான் ராமநாதபுரம் பெண்ணு!”

வெ.வித்யா காயத்ரி - பா.விஜயலட்சுமி - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன் - தி.குமரகுருபரன்

ன் டி.வி-யில் திங்கள் முதல் சனி வரை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘சுமங்கலி’ சீரியலில் அடக்கமான மருமகளாக நடித்துவரும் திவ்யா, மண்வாசனைப் பெண்!  

“நான் ராமநாதபுரம் பெண்ணு!”

சொந்த ஊர் ராமநாதபுரம். அப்பா மாதிரி வழக்கறிஞர் ஆகணும்னுதான் சிறுவயசுலேயே என் ஆசை. அதனால பி.ஏ முடிச்சதும் பி.எல் படிக்க சென்னை வந்தேன். அக்கா வீட்ல தங்கியிருந்தப்போ, அவங்க ஃப்ரெண்ட் ஒருத்தர் என்னை குறும்படத்துல நடிக்கக் கேட்டாங்க. அந்தக் குறும்படம் மூலமா `விஜே’ வாய்ப்பு கிடைச்சது. அப்படியே சீரியலுக்கு வந்துட்டேன்.

சட்டம் படிக்கிறேன்னு சொல்லிட்டு வந்து நடிக்க முடிவெடுத்ததுக்கு வீட்டுல என்ன சொன்னாங்க?


`நடிக்கவெல்லாம் போகக் கூடாது’னு அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. அவங்களுக்கு என் எதிர்காலத்தை நினைச்சு பயம். நான் எப்பவும் நேர்மையா இருப்பேன்னு அவங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்த பிறகு, அவங்களும் என் விருப்பத்துக்கு மரியாதை கொடுத்தாங்க. இப்போ எங்க ஊர்ல உள்ளவங்கள்லாம் என்னைப் பாராட்டும்போது அவங்களுக்கே ரொம்பப் பெருமையா இருக்காம்.

‘லட்சுமி வந்தாச்சு’ சீரியல்ல நெகட்டிவ் ரோல்லயும் கலக்கினீங்களே?

எனக்கு நெகட்டிவ் ரோல்ல நடிக்கிறது ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு சீனையும் ஜாலியா என்ஜாய் பண்ணி நடிச்சேன். அது ஒரு புது அனுபவமா இருந்துச்சு. இப்போவெல்லாம் நெகட்டிவ் ரோல் மூலமாதான் மக்கள்கிட்ட மாஸா ரீச் ஆக முடியும்.
‘சுமங்கலி’ சீரியல்ல அமைதியான மருமகளா இருக்கீங்க, நிஜத்தில் திவ்யா எப்படி..?

அந்த கேரக்டருக்கும் எனக்கும் துளி கூட சம்பந்தமில்லை. நிஜத்தில் நான் ரொம்ப வாயாடுவேன். துறுதுறுன்னு ஏதாவது பண்ணிட்டேதான் இருப்பேன். நான் செம போல்டான பொண்ணு.

சினிமா வாய்ப்பு வந்ததா?

நிறைய... நல்ல கதையும், நல்ல டீமும் கிடைச்சா நிச்சயம் நடிப்பேன். ஒரு சீன்ல நடிச்சாலும் பேர் சொல்ற கேரக்டரா இருக்கணும்.

காதல், கல்யாணம்..?

இப்போதைக்கு எதுவுமே கிடையாது. என்னோட கவனம் முழுக்க நடிப்புல மட்டும்தான் இருக்கு. இன்னும் பல வருஷங்களுக்கு மக்கள் மறக்கமுடியாத அளவுக்கு சேனல் ஏரியாவில் என்னை நிரூபிக்கணும்; நிலை நிறுத்திக்கணும். அதுக்காகத்தான் இப்போ உழைச்சுட்டு இருக்கேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“நான் ராமநாதபுரம் பெண்ணு!”

இயக்குநர் ஹரிப்ரியா...  இன்று நடிகை ஹரிப்ரியா!

``இ
யக்குநர் ஹரிப்ரியா... சொல்றப்பவே எவ்ளோ இனிமையா இருக்கு. விஸ்காம் முடிச்சு, டைரக்டர் ஆகணும்கிறது என்னோட மிகப்பெரிய கனவு. அதுக்காகவே விஸ்காம் டிப்ளோமோ படிச்சேன். சில சேனல்கள்ல இன்டர்ன் புரோகிராம் டைரக்டராவும் இருந்திருக்கேன். நண்பர்களோட ஆசைதான் என்னை நடிகையா மாத்திடுச்சு.

`கனாகாணும் காலங்கள்’ ஆடிஷன் நடந்தப்போ, எங்கிட்ட அடம்பிடிச்சு, அம்மாகிட்ட ஓகே வாங்கி அனுப்பிவைச்சது என் நண்பர்கள்தான். அவர்களோட அந்த ஆசையாலோ என்னவோ, நான் அந்த ஆடிஷனில் செலக்ட் ஆகிட்டேன்” என நடிகையான ரகசியம் சொல்லும் ஹரிப்ரியாவின் காதல் கணவர், சின்னத்திரை நடிகர் விக்னேஷ்குமார். `கனாகாணும் காலங்கள்’ சீஸன் இரண்டில் அறிமுகமானவர், இப்போது ‘வாணி ராணி’ சீரியல் ஹீரோ.   

“நான் ராமநாதபுரம் பெண்ணு!”

“அவ்ளோ பெரிய காதல் கதையெல்லாம் இல்லை. குட்டிக் கதைதான். அவரும் நானும் சேர்ந்து ‘மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்’ சீரியலில் நடிச்சோம். சீரியலில் காதல் வந்துச்சோ இல்லையோ, நிஜத்தில் காதல் பத்திக்கிச்சு. அந்த நேரத்தில் ரெண்டு பேர் வீட்லயும் நியூஸ் பேப்பரிலிருந்து மேட்ரிமோனியல் வரை சந்துபொந்து எல்லாம் வரன் தேடிட்டிருந்த நேரம்.

இவர் ஒருநாள் பேசிட்டே இருக்கிறப்போ ‘நாம ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது’னு கேட்டுட்டார். எனக்கும் விக்கியை ரொம்பப் பிடிக்கும். சரி, வீட்டில் ஏத்துக்காமப் போயிட்டா கஷ்டமாகிடுமேனு அப்பா அம்மாகிட்ட பேசினோம். அவங்களும் உடனே பச்சைக்கொடி காட்டிட்டாங்க. அப்புறம் என்ன, டும்... டும்... டும்தான்” என்று ஆர்ப்பாட்டமே இல்லாமல் காதல் கதை சொன்னவரிடம், குழந்தை பற்றிக் கேட்டால், ‘`அச்சச்சோ குழந்தை பற்றி எழுதிடாதேள்... அப்புறம் எனக்கு வயசாகிடுத்துன்னு நினைச்சுடுவா. ஆனால், என் ஆத்துக்காரர் எனக்குக் குழந்தை மாதிரினு எழுதிடுங்கோ'' என ‘கனாகாணும் காலங்கள்’ ஹரிப்ரியாவாக டயலாக் பேசி, முகத்தை மூடிச் சிரிக்கிறார். 

ஒருபக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும், இன்னொருபக்கம் எம்.பி.ஏ படித்துக்கொண்டிருக்கிறார் ஹரிப்ரியா. “படிக்கிறது எனக்கு அவ்ளோ பிடிக்கும். வாழ்க்கையில் பெரிய சொத்தே படிப்புதான். வேணும்னா பாருங்க, அடுத்த வருஷத்துக்குள் பிஹெச்.டி-யும் அப்ளை பண்ணிடுவேன்” என்று தன்னம்பிக்கை மிளிரப் பேசுகிறவருக்கு ஒரு பெரிய ஹேட்ஸ் ஆப்!