தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

மெசேஜ் சொல்வோம் எல்லாம் வாட்ஸ்அப் மயம்!

மெசேஜ் சொல்வோம் எல்லாம் வாட்ஸ்அப் மயம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மெசேஜ் சொல்வோம் எல்லாம் வாட்ஸ்அப் மயம்!

கார்க்கி பவா - ஓவியம்: சசி மாரீஸ்

டுத்த வீக் எண்ட் வந்தால், உங்கள் சொந்தக் கிராமத்துக்கு ஒரு விசிட் அடிங்க. திண்ணையில, வெத்தலைப் பாக்கு இடித்துக்கொண்டிருந்த பாட்டிகள் இப்போ ஆண்டிராய்டு போனில் `பிக் பாஸ்' பார்த்துட்டிருப்பாங்க. இல்லைன்னா, வாட்ஸ்அப்ல அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டிருப்பாங்க! 

மெசேஜ் சொல்வோம் எல்லாம் வாட்ஸ்அப் மயம்!

லேப்டாப் வந்த புதுசுல சூட்கேஸ்ல அதை வெச்சு எடுத்துட்டுப்போய் அலப்பறை பண்ண அப்பாக்கள் போலவே, மின்னல் வேகத்துல வாட்ஸ்அப் டெக்னாலஜியை புரிஞ்சிக்கிட்டு, அதுல அட்டகாசம் பண்ற அம்மாக் களும் அதிகம்.

கோயிலுக்குப் போற டீமுக்கு ஒரு குரூப், காலைல வாக்கிங் போற டீமுக்கு தனி குரூப், சீரியல் பார்க்குற ஆட்களுக்குத் தனித்தனி குரூப்னு வாட்ஸ்அப் குரூப் லிஸ்ட் ஏராளம்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கிற குரூப்புகள்கூட சாம்பிள்தான். இவை தவிர இன்னும் இருக்கு ஏராளமா... இப்போ இங்கே இருப்பதைப் படிங்க தாராளமா!

சூப்பர் சிங்கர் குரூப்

இது ஓர் இசை குரூப். பேரு கூட `ரஞ்சனி', `மோகனா'ன்னு ராகத்தோட பேருதான் வெச்சிருப்பாங்க. காலைல காபிக்குப் பால் காயுற கேப்ல, சின்னதா ஒரு தொகையறாவைப் பாடி அனுப்புவாங்க ஒரு சிங்கர். அதுல சர்க்கரை கம்மி, டிகாக் ஷன் ஜாஸ்தி... ரகத்துல பாட்டுல சுருதி எங்க விலகுச்சு, தாளம் எங்க எகிறுச்சுன்னு ஃபீட்பேக் ரகம் ரகமா (ராகமாக்கூட) வரும்!

ஃபார்வர்டு ஃபோரம்

`ரட்சகன்' படத்துல நாட்டைப் பத்தி தப்பா பேசினதும் நாகார்ஜுனாவுக்கு நாக்குப்பூச்சி எட்டிப்பார்க்குமே... அதோட டிஜிட்டல் வெர்ஷன்தான் இந்த குரூப். எப்பவும் ஆக்ட்டிவான குரூப் இதுதான். ஏன்னா, இங்க எதையும் அவங்களா டைப் பண்ண மாட்டாங்க. எல்லாமே ஃபார்வர்டுதான். உணர்ச்சிவசப்பட்டு அவசரமாக ஃபார்வர்டு செய்துவிடுவார்கள். அந்தச் செய்தியின் உண்மைத்தன்மை அறியாமல் ‘என்னது சிவாஜி செத்துட்டாரா?’ எனச் சோக ஸ்மைலியை கொட்டித் தீர்ப்பார்கள் இந்த குரூப்வாசிகள்!

வாழ்த்து குரூப்


இந்த குரூப்பில் இருக்கும் யாருக்காவது பிறந்த நாளா? உடனே வாழ்த்துகள் குவியும். இன்னிக்குக் குடியரசு தினமா? அதுக்கும் வாழ்த்துகள் குவியும். இன்னிக்குத் தீபாவளியா? அதுக்கும் வாழ்த்தலாம். இவை எதுவுமே இல்லையா? ஒண்ணும் பிரச்னை இல்லை... குட்மார்னிங் சொல்லி வைப்போம்!

உங்க மைண்ட்வாய்ஸ் புரியுது... இந்த உலகின் ஆகச்சிறந்த வாட்ஸ்அப் மெசேஜ் குட்மார்னிங் தானே!

நல்விடியல் ஆரம்பமாகட்டும்!