Published:Updated:

எனக்குச் சாதாரண லைஃப்பே போதும்!

எனக்குச் சாதாரண லைஃப்பே போதும்!
பிரீமியம் ஸ்டோரி
எனக்குச் சாதாரண லைஃப்பே போதும்!

ஓவியா ஓப்பன் டாக்ஆர்.வைதேகி, படங்கள்: கே.ராஜசேகரன்

எனக்குச் சாதாரண லைஃப்பே போதும்!

ஓவியா ஓப்பன் டாக்ஆர்.வைதேகி, படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
எனக்குச் சாதாரண லைஃப்பே போதும்!
பிரீமியம் ஸ்டோரி
எனக்குச் சாதாரண லைஃப்பே போதும்!

டெங்குவைக் கூடக் கட்டுப்படுத்திவிடலாம் போலிருக்கிறது. ஓவியா ஃபீவருக்கு ஓய்வே இல்லை... ஓவியா ஆர்மிக்கும் ஓய்வே இல்லை.

‘எனக்கு மட்டும் அதிகாரமிருந்தால், உயிரெழுத்து களில் உன் பெயரின் தொடக்க எழுத்தை முதல் எழுத்தாக்குவேன்...’ என்பதில் தொடங்கி, `ஓவியா ஆர்மியில் இல்லாதவர்கள் வாழத் தகுதியற்றவர்கள்' என்பது வரை சமூக வலைதளங்களில் ஓவியாயணம் கொஞ்சம் ஓவர்தான்.

எனக்குச் சாதாரண லைஃப்பே போதும்!

‘களவாணி’ தொடங்கி எத்தனையோ படங்களில் நடித்தும் ஓவியாவுக்குக் கிடைக்காத புகழ் வெளிச்சத்தை, கண்களைக் கூசுகிற அளவுக்கு அவர்மீது பாய்ச்சிவிட்டது ‘பிக் பாஸ்’.

தடுக்கி விழுந்தால் ஓவியா ஆர்மி மீதுதான் விழ வேண்டும் என்கிற அளவுக்கு எங்கெங்கும் ஓவியாவின் புகழ் பாடல்கள். இத்தனைக்குப் பிறகும் ஓவியாவின் கால் தரையில் படர்ந்திருப்பதுதான் ஆச்சர்யம். அது மட்டுமல்ல, தன்னுடைய பேச்சு யாருடைய மனதையும் புண்படுத்திவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்.

பேச்சின் இடையே அடிக்கொருதரம், ``யாரையும் ஹர்ட் பண்ணுற மாதிரி எழுதிடாதீங்க’’ என்று கோரிக்கை வைத்துக்கொண்டே பேசுகிறார். அடடா... இப்படியும் ஒரு பெண்ணா? ஓவியாவுடன் ஓர் ஓப்பன் டாக் இதோ...

பிக் பாஸ் வாய்ப்பு எப்படி வந்தது?

``விஜய் டி.விலேருந்து கேட்டாங்க, கான்செப்ட்டைச் சொல்லி இன்ட்ரெஸ்ட் இருக்கானு கேட்டாங்க. அதுக்கு முன்னாடி இந்தியில வந்த ஷோவைக் கூட நான் பார்த்ததில்லை. புதுசா ஏதாவது ட்ரை பண்ணணும்னு அந்த டைம்ல மைண்டு இருந்திச்சு. ஸோ, ஓகே சொல்லிட்டேன். மத்தபடி பிளான்  பண்ணியெல்லாம் போகலை.’’

உங்க மனசுக்குப் பிடிச்ச ஹவுஸ்மேட் யார்?

``அனுயா... அவங்க எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவங்களைப்போலவே எல்லாரையும் பிடிக்கும். பிடிச்சவங்க, பிடிக்காதவங்கனு யாருமில்லை.’’

மறுபடியும் `ஃபினாலே' அன்னிக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் போனபோது எப்படி இருந்தது?

``ரொம்ப சந்தோஷமா இருந்தது. எல்லாரும் நல்லா பேசினாங்க, அந்த வீட்டுல அவ்ளோ நாள் இருந்திருக்கேன். அந்த வீட்டு மேல எனக்கு லவ் வந்திருச்சு.’’

எனக்குச் சாதாரண லைஃப்பே போதும்!

பிக் பாஸ் வீட்டிலேருந்து வெளியே வந்ததும் ஹேர் ஸ்டைலை  மாத்திட்டீங்க. உங்க தலைமுடியை கேன்சரில் முடி இழந்தவர்களுக்கு தானமா கொடுத்ததா ஒரு தகவல். அது பற்றி...

``ஆமா... பிக் பாஸ்லேருந்து வெளியில வந்ததும் என்னைக் கேட்டாங்க. என் அம்மாவும் கேன்சர்லதான் இறந்தாங்க. அதனால உடனே ஓகே சொல்லிட்டேன். ஆனா, அது வெளியில சொல்ற அளவுக்குப் பெரிய விஷயம் கிடையாது. அதை என் பர்சனல் விஷயமா பார்க்கறேன். இதை செய்திருக்கேன்னு காட்டிக்கிறதுக்காகவோ, பேசவோ செய்ததில்லை. ரொம்பவே பர்சனல்.’’

ஓவியா ஆர்மியை உங்கள் அம்மா பார்க்கலையேங்கிற வருத்தம் இருக்கா?

``நிச்சயமா இருக்கு. நான் நல்லாருக்கணும்னு ஆசைப்பட்டவங்க என் அம்மா. ஒருவேளை அவங்க உயிரோடு இருந்திருந்தா இப்போ என்னைப் பார்த்து ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பாங்க.

நான் வெளியில வந்தபோது, ‘உங்களுக்கு அம்மா இல்லைனு வருத்தப்படாதீங்க, நாங்கல்லாம் உங்களுக்கு அம்மாதான்’னு  நிறைய பெண்கள் என்கிட்ட சொன்னாங்க.  ரொம்ப சந்தோஷமா இருந்தது. எனக்கு இவ்வளவு பேர் இருக்காங்கங்கற அந்த ஃபீல் ரொம்ப ஸ்பெஷல். இப்பவும் அம்மா இறந்துட்டாங்கன்ற ஃபீல் இல்லை.  அவங்க எங்கேயோ இருக்காங்க... என்னைப் பார்த்துட்டிருக்காங்கனு நம்பறேன்.’’

உங்கள் வாழ்க்கையின் முக்கியமான ஆண்கள் பற்றி...

``என் அப்பா மட்டும்தான். வேற யாரும் கிடையாது. இந்த மாதிரி ஒரு சுதந்திரத்தை அவர் கொடுத்ததாலதான் என்னால மெச்சூர்டா யோசிக்க முடியுது. எங்கப்பா மாதிரி ஒரு பர்சனை நான் இதுவரை பார்த்தது கிடையாது. இனிமேலும் பார்க்கப் போறது கிடையாது.

எனக்கு ஸ்டார் ஸ்டேட்டஸ்ல எல்லாம் நம்பிக்கை இல்லை. அதெல்லாம் ஒருவிதமான பிரஷர். எனக்கு பிரஷர் குக்கர் வாழ்க்கை வேண்டாம். சாதாரண லைஃப் போதும். என்கிட்ட இன்னிக்கு நீங்க பார்க்கிற அத்தனை குவாலிட்டீஸுக்கும் காரணம் என் அப்பாதான். என் வாழ்க்கையின் முக்கியமான நபர் அவர்.

என் வாழ்க்கையில எல்லா முடிவுகளையும் நான்தான் எடுப்பேன். என்னை மீறிச் சில விஷயங்களை எப்படி ஹேண்டில் பண்ணணும்னு தெரியாமல் போனதுண்டு. அப்பெல்லாம் அப்பாகிட்டதான் கேட்பேன். அவர்தான் என் சார்பா முடிவெடுப்பார். அந்த முடிவுகள் சரியா இருக்கும்.’’

எனக்குச் சாதாரண லைஃப்பே போதும்!

ஓவியாவின் ஐடியல் மேன் எப்படி இருக்கணும்?

``முதல்ல மனுஷனா இருக்கணும்; நேர்மையா இருக்கணும். இரக்க சுபாவம் இருக்கணும். செல்ஃப் ரெஸ்பெக்ட் வேணும். இந்த மூணு குவாலிட்டீஸ் இருந்தாத்தான் நான் ஓர் ஆளை ரெஸ்பெக்ட் பண்ணுவேன்.’’

ஆரவ்வின் நிராகரிப்புக்குப் பிறகு ஆண்களின் மீதான ஓவியாவின் பார்வை மாறியிருக்கா?

`` ஆரவ் ரொம்ப நல்லவர். ஸ்ட்ராங்.  நிறைய நல்ல குவாலிட்டீஸ் அவர்கிட்ட இருக்கு.

நான் ஃபெமினிஸ்ட்டெல்லாம் இல்லை. நான் ஆண்களை ரொம்பவே மதிக்கிறேன்.  நான் என் அப்பாவைப் பார்த்துதான் மரியாதையைக் கத்துக்கிட்டேன். ஆண்கள்கிட்ட ஒரு பாதுகாப்பையும் மரியாதையையும் ஃபீல் பண்றேன். அந்தப் பார்வை இப்பவும் அப்படியேதான் இருக்கு. ஒரு சம்பவத்தை வெச்சு எல்லாமே தப்புன்னு சொல்லக் கூடாது. லைஃப்ல எதுவுமே நிரந்தரமில்லை. எல்லாமே மாறிக்கிட்டே இருக்கும்.’’

யாரைப் பற்றியும் புறம்பேசாத இந்தக் குணம் எப்படி வந்தது?

``நான் எப்பவுமே இப்படித்தான். எனக்கு யாரையும் பார்த்துப் பொறாமை இல்லை. யாரையும் யார்கூடவும் கம்பேர் பண்ணிப் பேசப் பிடிக்காது. எனக்கு என்னைப் பிடிக்கும். அடுத்தவங்களைப் பத்திப் பேசறது தேவையே இல்லையே. என் விஷயங்களை யோசிக்கவே எனக்கு டைம் இல்லை. அடுத்தவங்களைப் பத்தி எதுக்குப் புறம் பேசணும்?’’

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு வெளியே வரவே இல்லையே... ஏன் இந்தத் தலைமறைவு?

``அவ்வளவு நாள் அந்த வீட்டுல இருந்திருக் கேன். அதுலேருந்து மீண்டு வர எனக்கொரு டைம் தேவைப்பட்டது. அதாவது என்னோட பழைய சந்தோஷத்தைத் திரும்ப எனக்குள்ள கொண்டுவர கொஞ்சம் டைம் தேவைப்பட்டது. மத்தபடி வேற காரணமில்லை.’’

 சைஸ் ஸீரோவா மாறிக்கிட்டிருக்கிறதோட பின்னணி?

``ஓ... அப்படியா தெரியறேன்? எனக்கு அப்படியெல்லாம் எந்த பிளானும் இல்லை. பிக் பாஸ் வீட்டுல லிமிடெட் சாப்பாடுதான். இப்பவும் நான் அப்படித்தான் சாப்பிடறேன். பிளான் பண்ணியெல்லாம் ஸ்லிம் ஆகலை.’’

நீங்க போட்டிருக்கிற டாட்டூவுக்கு என்ன அர்த்தம்? எப்ப போட்டது?

``ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போட்டது. எனக்கு டாட்டூ ரொம்பப் பிடிக்கும். இது ஜிப்சி உமன் டாட்டூ. ஸ்ட்ராங்கான உமன்னு அர்த்தம். அதாவது அந்த டாட்டூ என்னுடைய கேரக்டரின் பிரதிபலிப்பு!’’