Published:Updated:

அவர் நல்ல மனுஷி... இவர் இரும்பு மனுஷி!

அவர் நல்ல மனுஷி... இவர் இரும்பு மனுஷி!
பிரீமியம் ஸ்டோரி
அவர் நல்ல மனுஷி... இவர் இரும்பு மனுஷி!

டாப் 10 பெண்கள் ஆரவ் சாய்ஸ்ஆர்.வைதேகி, படங்கள்: கே.ராஜசேகரன்

அவர் நல்ல மனுஷி... இவர் இரும்பு மனுஷி!

டாப் 10 பெண்கள் ஆரவ் சாய்ஸ்ஆர்.வைதேகி, படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
அவர் நல்ல மனுஷி... இவர் இரும்பு மனுஷி!
பிரீமியம் ஸ்டோரி
அவர் நல்ல மனுஷி... இவர் இரும்பு மனுஷி!

ளம்பெண்களின் கனவில் துரத்திய கருப்பன்களையும் கார்த்திகேயன்களையும் அவுட் ஆஃப் ஃபோகஸில் அப்பால் போகச் சொல்லிவிட்டு, ஆட்டோ ஃபோகஸில் அதிரடி என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஆரவ். ‘பிக் பாஸி’ன்  மிஸ்டர் ஹேண்ட்சம்தான் இன்று ஸ்வீட்டிக்களுக்கு ஆஸம்! பிக் பாஸ் டைட்டில், முதல் பட அறிவிப்பு என ஆரவ் அநியாயத்துக்கு பிஸி. ஓவியாவைப் பற்றிப் பேசியே ஓய்ந்து போயிருந்தவரிடம், ஒரு மாறுதலுக்காக அவர் வாழ்க்கையின் மிக முக்கியமான பெண்கள் பற்றிக் கேட்டோம்... ஓவியாவைத் தவிர்க்கக் கூடாது என்கிற கண்டிஷனுடன்!

அவர் நல்ல மனுஷி... இவர் இரும்பு மனுஷி!

அம்மா தாஷிரா

எனக்கு ஓர் அண்ணன், ஓர் அக்கா. கடைசிப் பையன்ங்கிறதால நான் வீட்டுக்குச் செல்லப் பிள்ளை. அம்மாவுக்கு இன்னும் ஸ்பெஷல் செல்லம். ஸ்கூல் படிக்கிறபோது இந்த அன்பு மனுஷியை அவ்வளவாகப் புரிந்துகொண்டதில்லை. சாப்பாடு எடுத்து வைக்கலையா, உப்பில்லையா... எல்லாத்துக்கும் அம்மாகிட்டக் கோபப் பட்டுக் கத்தியிருக்கேன். சாப்பாட்டைத் தூக்கிக்கிட்டுப் பின்னாலேயே ஓடி வருவாங்க. அந்த அளவுகடந்த அன்புக்குப் பின்னால இருந்த தியாகங்களையோ, கஷ்டங்களையோ யார்கிட்டயும் காட்டிக்காம எங்களுக்காகவே வாழறவங்க.

ப்ளஸ் ஒன் படிக்கிறதுக்காக போர்டிங் ஸ்கூல் போனபோதுதான் முதல்முறையா அம்மாவை மிஸ் பண்ணினேன். சாப்பாடு எடுத்து வெச்சுக்கிறது, யூனிஃபார்மைத் தேடறதுனு எல்லா வேலைகளையும் நானே செய்ய வேண்டிவந்தபோது ரொம்பக் கஷ்டமா இருந்தது. அம்மானு ஒரு மனுஷி கூடவே இருந்தபோது என் வேலைகள் எல்லாம் கரெக்ட் டைமுக்கு நடந்திருக்கு.

பிக்பாஸ்ல நூறு நாள்கள் முடிஞ்சு இன்னும்கூட நான் அம்மாவைப் போய் பார்க்க முடியலை. போன்ல பேசினதோடு சரி. ஷோவுலயும் போட்டோஸ்லயும் என்னைப் பார்த்துட்டு, ‘அவன் ரொம்ப இளைச்சிட்டான். வரச் சொல்லுங்க’னு பார்க்கிறவங்கக்கிட்டல்லாம் சொல்லிக் கிட்டிருக்காங்க.

அவர் நல்ல மனுஷி... இவர் இரும்பு மனுஷி!

அம்மாவுக்கு நான் மாடலிங்லயோ, சினிமாவுலயோ ஆர்வம் காட்டறதுல ஆரம்பத்துலேருந்தே பெருசா உடன்பாடில்லை. ‘பிக் பாஸ்’ ஷோவுல நடுவுல சின்னச் சின்ன பிரச்னைகள் வந்தபோது அம்மா ரொம்ப அப்செட் ஆயிருந்தாங்கனு கேள்விப்பட்டேன். அப்புறம் அடுத்தடுத்த நாள்கள்ல என் மேல பதிஞ்ச பாசிட்டிவ் பார்வையும் என் வெற்றியும் அம்மாவுக்குக் கொஞ்சம் சந்தோஷம் கொடுத்தது. எங்கப்பாவும் எங்க ஊர்ல கொஞ்சம் செல்வாக்கான நபர். அப்பாவை வெச்சு எங்களை அடையாளப்படுத்தினவங்க யெல்லாம் இன்னிக்கு ஆரவோட அப்பாவா, ஆரவோட அம்மாவானு கேட்கறாங்க. ஒரு மகனா அம்மா, அப்பாவுக்குப் பெருமையைத் தேடிக் கொடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். அம்மாவோட அந்த அன்பை வேறெந்த உறவாலயும் ஈடுகட்டவே முடியாது.

அக்கா நாதியா

அக்காங்கிறதைத் தாண்டி அவங்க எனக்கு இன்னோர் அம்மான்னே சொல்லலாம். எனக்கு எல்லா விஷயங்கள்லயும் மெச்சூர்டான ஆலோசனைகள் சொல்வாங்க. ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க.

கரெஸ்பாண்டென்ட் கீதாஞ்சலி

ப்ரீகே.ஜியிலேருந்தே என்னைச் செதுக்கினவங்க இவங்கதான். பாட்டு, டான்ஸ், டிராமானு எல்லா விஷயங்கள்லயும் என்னை என்கரேஜ் பண்ணினவங்க. ‘எனக்குப் பாட வராது’னு சொன்னபோதும், ‘உன்னால முடியும்’னு பாட வெச்சு, என்னை மத்தவங்க பாராட்டக் காரணமானவங்க. நடிக்க வராதுனு சொன்ன என்னை, ஒரு நடிகனா மாத்தினவங்க. இன்னிக்கும் கீதாஞ்சலி மேடம்கூடப் பேசிக் கிட்டிருக்கேன். அம்மாவுக்கு அடுத்து என் வளர்ச்சியில முக்கியப் பங்கு வகிக்கிறவங்க இவங்கதான். வாய்ப்பு கிடைக்கிற இடங்கள்ல எல்லாம் அவங்களுக்கு நான் நன்றி சொல்லத் தவறுவதில்லை.

பாட்டனி டீச்சர் சவிதா

ப்ளஸ் ஒன்ல போர்டிங் ஸ்கூல் போனபோது எனக்கு எக்கச்சக்கமான ஸ்ட்ரெஸ். டீச்சரா மட்டுமில்லாம எனக்கு ஓர் அக்காவா இருந்து பார்த்துக்கிட்டவங்க சவிதா மிஸ். படிப்பை நினைச்சு நான் ஸ்ட்ரெஸ்சுக்குள்ள போனபோதெல்லாம் என்னைச் சமாதானப்படுத்தி, எனக்குச் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து, குடும்பத்துல ஒருத்தரா என்னை நடத்தினவங்க. இன்னிக்கும் அவங்க குடும்பத்துல எல்லாரும் எனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்காங்க.

தோழிகள் அகிலா, ஜுனைரா, அஹானா

நான் ஆறாவது படிக்கிறபோது ஆரம்பிச்ச நட்பு அது. இப்பவும் நாங்க நாலு பேரும் அவ்ளோ க்ளோஸ். என்னைத் திட்டுவாங்க. எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. சப்போர்ட் பண்ணுவாங்க. என்மேல கண்மூடித்தனமான நம்பிக்கையையும் அன்பையும் வெச்சிருக்கிறவங்க. என் முதல் படம் ‘ஓகே கண்மணி’யில ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி தலை காட்டியிருப்பேன். அதுக்குக்கூட ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ போய் பார்த்தவங்க. ‘சைத்தான்’ ரிலீசான போதும் அதுதான் நடந்தது. பிக் பாஸ்ல நான் எப்படி இருக்கப் போறேனோங்கிற பயம் கண்டிப்பா இவங்க மூணு பேருக்கும் இருந்திருக்கும்.  ஆனா, நூறு நாள்கள் இருந்துட்டு வந்த பிறகு என்னைவிட அதிகமா சந்தோஷப்பட்டவங்க இவங்க.

அவர் நல்ல மனுஷி... இவர் இரும்பு மனுஷி!

ஓவியா

‘பிக் பாஸ்’லதான் அறிமுகமானாங்க. என்னுடைய வெரிகுட் ஃப்ரெண்ட். அவங்களை மாதிரி நல்ல மனுஷியைப் பார்க்க முடியாது. கண்ணை மூடிக்கிட்டு அவங்களை நம்பிடலாம். அவங்களுடைய அந்தக் குணம்தான் என்னை அவங்களுக்கு க்ளோஸாக்கினது. யாரைப் பத்தியும் தப்பா பேச மாட்டாங்க.  யாராவது அவங்களுக்குத் தப்பு பண்ணினாலுமே அதை மனசுக்குள்ள வெச்சுக்கத் தெரியாது. அந்த ஸ்பாட்லயே விட்டுட்டுப் போயிடுவாங்க. முதுகுக்குப் பின்னாடி பேசவே தெரியாது. விளையாட்டாக் கூட பொய் சொல்லத் தெரியாது. கண்ணைக் கட்டி விளையாடற கேம்ல நாமெல்லாம் கண்ணைச் சரியா கட்டலைனா, ‘பரவாயில்லை... கண் தெரியுது... விளையாடிடலாம்’னு நினைப்போம்.  ஆனா ஓவியா, ‘எனக்குக் கண்ணு தெரியுது. தெரியாதபடி நல்லா கட்டி விடுங்க. அப்பதான் விளையாடுவேன்’னு சொல்வாங்க. அப்படியோர் இன்னோஸென்ட் அவங்க. அதனாலதான் பிக் பாஸ் ஷோவுல அவங்களை எல்லாரும் கார்னர் பண்ணினபோது நான் அவங்க பக்கம் நின்னேன்.

அவங்க ஷோவை விட்டுப் போனதும் பயங்கரமா மிஸ் பண்ணினேன். அவங்க இடத்தை வேற யாராலயும் நிரப்ப முடியலை. அந்த வீட்டுல நாங்க செலவழிச்ச டைம் அதிகம். நிறைய பேசியிருக்கோம். ‘காக்கா ஏன் மேல பறக்குது? குருவி ஏன் கீழே பறக்குது’ங்கிற ரேஞ்சுல ஏதாவது பேசிட்டிருப்பாங்க. அவங்க போனதும் அதுலேருந்து வெளியில வந்து இன்னோர் ஆள்கிட்ட பேசிப் பழகவே எனக்கு ரெண்டு வாரங்களாச்சு. ஷோ முடிஞ்சதும் ஓவியாவை மீட் பண்ண முடியலை. ஷூட்டிங்ல பிஸியா இருந்தாங்க. ஆனா, விஜய் டி.வியில நடந்த ஒரு ஷூட்ல ஓவியாவோடு பேசினேன். நம்புங்க மக்களே... நாங்க மறுபடியும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்.

அவர் நல்ல மனுஷி... இவர் இரும்பு மனுஷி!

பிந்து மாதவி

ஷோ கடைசிக்கட்டத்தை நெருங்க ஆரம்பிச்சதும் பிந்து மாதவியும் நானும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். அவங்க என் அம்மாவுக்குப் பிறக்காத பெண்ணா, எனக்கு அக்காவாதான் தெரிஞ்சாங்க.  அவங்களுக்கும் என்மேல அதே ஃபீலிங்தான். பிக் பாஸ் வீட்டுக்குள்ள எல்லாருக்கும் எல்லார்கூடவும் செட் ஆகாது. எங்க ரெண்டு பேருக்குமான அந்தப் பந்தம் எப்படி, எங்கே ஆரம்பிச்சதுன்னே தெரியலை. பிந்துவும் ரொம்ப ரிஸர்வ்டு பர்சன். என்மேல அவங்களுக்கு அந்த நம்பிக்கை வந்தது பெரிய விஷயம். நான் நாமினேட் ஆனபோது பிந்து அழுதாங்க. அப்பதான் அவங்க என் மேல வெச்சிருந்த அன்பை உணர்ந்தேன். ‘ஃப்ரீஸ் அண்ட் ரிலீஸ்’ கேம் விளையாடினபோது வெளியிலேருந்து வந்த நிறையபேர் ‘ஆரவ் உனக்கு வெளியில பெரிய எதிர்காலம் இருக்கு... உன் லெவலே வேற மாதிரியிருக்கு’னு சொல்வாங்க. அப்பல்லாம் பிந்து அவ்வளவு சந்தோஷப்படுவாங்க. அவங்க எலிமினேட் ஆனபோது அவங்களுக்குப் பதிலா நான் போயிடணும்னு வேண்டிக்கிட்டிருந்தேன். அவங்க வெளியில போறதை என்னாலப் பார்க்க முடியாதுனு சொல்லிக்கிட்டிருந்தேன்.  அப்பவும் அவங்க என்னைக் கட்டிப்பிடிச்சு, அழுதுட்டு எனக்கு விஷ் பண்ணிட்டுப் போனாங்க. ஷோ முடிஞ்சதும் பிந்துவோடு டின்னர் போனேன். இப்ப இன்னும் எங்க நட்பு ஸ்ட்ராங்காகியிருக்கு.

அவர் நல்ல மனுஷி... இவர் இரும்பு மனுஷி!

நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எப்பவுமே என் ஃபேவரைட். அவங்களை மாதிரி ஸ்ட்ராங் லேடியை நான் சினிமாவுல பார்த்ததில்லை. மக்கள் மனசுல இடம் பிடிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு இன்னிக்கு எனக்குத் தெரியுது. சினிமாவுல அறிமுகமாகி, ஒரு ரவுண்டு வந்துட்டு, மறுபடி ஒரு பிரேக்குக்குப் பிறகு வந்து இவ்வளவு பிரபலமாகிறதுங்கிறது சாதாரண காரியமில்லை. விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் தாண்டி இன்னிக்கு நிக்கறாங் கன்னா அது மிகப்பெரிய விஷயம். நயன்தாரா மேடம் மேல எனக்குப் பெரிய மரியாதை உண்டு. இண்டஸ்ட்ரியின் இரும்பு மனுஷி அவங்க.

என்னவள்?

என்னையும் என் வேலையையும் புரிஞ்சுக்கணும்கிறதைத் தாண்டி என் வாழ்க்கையில வரப்போற பெண்ணைப் பத்திப் பெரிசா எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

என் லைஃப்ல இதுவரை எல்லா முடிவுகளை யும் நான்தான் எடுத்திருக்கேன். அதனால கல்யாண விஷயம் கட்டாயமா அம்மா, அப்பாவோட சாய்ஸ்.’’