Published:Updated:

RJ கண்மணி அன்போடு... - “நான் என்னைக் காதலிக்கிறேன்!”

RJ கண்மணி அன்போடு... - “நான் என்னைக் காதலிக்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
RJ கண்மணி அன்போடு... - “நான் என்னைக் காதலிக்கிறேன்!”

படங்கள்: சொ.பாலசுப்ரமணியம்

RJ கண்மணி அன்போடு... - “நான் என்னைக் காதலிக்கிறேன்!”

படங்கள்: சொ.பாலசுப்ரமணியம்

Published:Updated:
RJ கண்மணி அன்போடு... - “நான் என்னைக் காதலிக்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
RJ கண்மணி அன்போடு... - “நான் என்னைக் காதலிக்கிறேன்!”

டகத்துறையில் பணியாற்ற விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டும் வகையில் வெற்றிப் பிரபலங்களைச் சந்திக்கிறார் கண்மணி. இந்த வரிசையில் ஆர்.ஜே, டி.வி, சினிமா என கலக்கிவரும் பிரியா பிரின்ஸ். இனி, ஓவர் டு கண்மணி அண்ட் பிரியா...

சீரியல்ல நடிகைகள் பங்கு ஆரோக்கியமா இருக்கா, பிரியா?

``வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்ல இருக்கிற நேரம் குறைவு.  ஹவுஸ் வொய்ஃபா இருக்கிற பெண்களோ 24 மணி நேரமும் வீட்ல இருக்க வேண்டியிருக்கு. அவங்களுக்கு எமோஷனலா ஒரு சப்போர்ட் தேவைப்படும். அந்த எமோஷன்ஸ் சீரியல் வழியா பெண்களுக்குக் கிடைக்கிறது.

அவங்ககூடவே இன்னும் சில மனிதர்கள் வாழ்கிற மாதிரி உணர்றாங்க.

RJ கண்மணி அன்போடு... - “நான் என்னைக் காதலிக்கிறேன்!”

இப்போ எல்லாமே கைக்கு அடக்கமா வந்திடுச்சு. டி.வி சீரியலைக்கூட யூடியூப்ல பார்க்க முடியுது. அதனால நடிகைகளின் பங்கு டி.வி மீடியால ஆரோக்கியமாவே இருக்கு. இயக்குநர்கள் பொதுவா உணர்வுபூர்வமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. அதுக்கேற்ற மாதிரி செய்தா `இதத்தாம்மா உங்கிட்ட எதிர்பார்த்தேன்’னு பாராட்டுவாங்க.''

காதலிக்கும்போது பகிர்ந்துக்க நிறைய நேரம் இருக்கும். ஆனா, திருமணத்துக்குப் பின்னால அதுக்கு நேரம் இல்லைம்பாங்க. இதை நீங்க எப்படிப் பார்க்கறீங்க?

``நேரம் இல்லைங்கிறதை நான் தவறான வார்த்தையா பார்க்கறேன். நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு மணி நேரமும் பொன்னானது. அந்த நேரத்துக்கான வேலையைத் திட்டமிடறது நாம்தானே? எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்குறோமோ, அதுதான் முதலிடத்தைப் பிடிக்குது.

நேரத்தை அபகரிக்கிற விஷயங்கள்ல இருந்து விலகியிருந்தா உறவுகளோட பேச நேரம் கிடைக்கும். அப்படிப் பேசறதுலதான் எனக்கு விருப்பம். நான் `நேரம் இல்லை’ன்னு எதுக்கும் சொன்னதில்லை.  அதனால்தான் ஃபேஸ்புக்ல சாட் பண்றதை நான் விட்டுட்டேன்.’’

உங்க அழகின் ரகசியம் சொல்லுங்களேன்...

``அழகுக்காக சிகிச்சை எதுவும் எடுத்துக்கல. நம்மோட உண்மையான ஸ்கின்டோனுக்கு மாறணும்னா... உணவுத் திட்டம் ரொம்ப முக்கியம். நாம குடிக்கிற பால் ஜீரணமாக எட்டு மணி நேரம் ஆகும். அதுக்கும் மேல நாம எடுத்துக்கிற உணவுகள் செரிக்க..? அதனால காலையில வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கிறது, ரெண்டு பாதாம் பருப்பும் பாதி வேகவைத்த காய்கறிகளும் சாப்பிடறது, பழங்களை அப்படியே உரிச்சு சாப்பிடறது... இதையெல்லாம் வழக்கமா வெச்சிருக்கேன். தினமும் உடற்பயிற்சி செய்யறது, வயிற்றுல இருக்குற கழிவுகள் வெளியேற நிறைய தண்ணீர் குடிக்கிறதுடன், ரசாயனம் கலந்த அழகுப் பொருள்கள் பயன்படுத்துறதையும் விட்டுட்டேன். சப்பணங்கால் போட்டு தரையில அமர்ந்து சாப்பிடுவேன். தேவைக்கு அதிகமா எதையும் சாப்பிடுறதில்ல.  விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், முருங்கைக்காய் எண்
ணெய் (Moringa  oil)... இப்படி ஸ்கின்னுக்கு ஆரோக்கியமானதைப் பயன்படுத்தறேன். வீட்லயே சோற்றுக் கற்றாழை இருக்கு. அதுலதான் `ஃபேஸ் பேக்’ போடுறேன். நிறைய மேக்கப் போடாம தானாவே என் சருமத்தோட நிறம் மாறிடுச்சு. உணவு, உடற்பயிற்சி, எண்ணம், பராமரிப்புப் பொருள்கள்... இதெல்லாம் மாறினா, உங்களோட உண்மையான கலர்ல ஜொலிக்கலாம்.

உடல்வாகுக்கு ஏற்ற உடையைத் தேர்வு பண்ணுவேன். லிப்ஸ்டிக், காஜல் விஷயத்துலயும் அழகுக் கலைஞரோட ஆலோசனையோட வாங்கிப் பயன்படுத்துவேன். முகத்தைப் பராமரிக்க இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தலாம். தலையில பொடுகு இருந்தாக்கூட முகப்பரு பிரச்னைகள் வரும். உணவு தவறா இருந்தா பொடுகு வரும். எல்லாத்தையும் சரி பண்ணிட்டா போதும். சோம்பேறித்தனத்தால இதுக்கெல்லாம் நேரம் இல்லைன்னு சொன்னா எதுவும் முடியாது.''

RJ கண்மணி அன்போடு... - “நான் என்னைக் காதலிக்கிறேன்!”

உடல்வாகுக்கு பயிற்சி எடுத்துட்டு இருக்கீங்களா?

``உணவுல கட்டுப்பாடா இருக்கணும். கண்டிப்பா உடற்பயிற்சி அவசியம்.  ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் வேணும். நான் என்னை ரொம்பவே காதலிக்கிறேன். நீங்களும் உங்களைக் காதலியுங்கள்!’’

`மாப்பிள்ளை’ சீரியலில் உங்கள் அனுபவம் எப்படி?

``விஜய் டி.வி-யில என்னோட முதல் புராஜெக்ட் ‘என் பெயர் மீனாட்சி’. நல்ல தமிழ்ல டயலாக் பேசி நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அதுக்கப்புறம் மூணு வருஷங்கள் நிறைய சினிமாக்கள்ல நடிச்சிருக்கேன். மறுபடியும் விஜய் டி.வி-யில `மாப்பிள்ளை’ சீரியல்ல நடிக்கிறேன். திருமணமான ஆண்கள் படற அவஸ்தையை மையமா வெச்சு `மாப்பிள்ளை’ சீரியல் எடுத்திருக்காங்க. ஆணும் பெண்ணும் நண்பர்களா பழகுறதை இந்தக் காலத்துல ஏத்துக்குறாங்க. அப்படி ஒரு தோழியா நான் `மாப்பிள்ளை’ல நடிச்சிருக்கேன். நல்ல தோழியா இருக்கறது பிடிச்சிருக்கு.’’

சீரியல்லயும் சினிமாவுலயும் நடிக்கிறதால கிசுகிசுக்களுக்கு நிறைய வாய்ப்பிருக்குமே... எப்படி சமாளிக்கிறீங்க?

``எல்லார்கிட்டயும் ஓப்பனா பேசிடுறேன். பர்சனலா யார்கிட்டேயும் பகிர்ந்துக்கிறதில்ல. அதனால என் நட்பு வட்டத்துல இருக்கிறவங் களோட எண்ணிக்கை குறைவு. கிசுகிசுக்கள்ல சிக்கினதில்லை. அப்படியே வந்தாலும் கண்டுக் காம கடந்து போயிடுவேன். உண்மையில்லாத ஒரு விஷயத்துக்கு ஏன் கவலைப்படணும்?’’

`மீடியாவில் அழகா இருக்கிற பெண்களுக்கு தமிழ்ப் பேசத் தெரியாது’ என்கிறார்களே..?

``தோற்றத்தை வெச்சு எதையும் முடிவு பண்ணக் கூடாது. நான் நல்லா தமிழ்ப் பேசுவேன். ஆடிஷனுக்கு போயிருந்தேன். அங்கே இருந்தவர் கையில ஸ்கிரிப்ட் கொடுத்துட்டு சொன்னார்... `அழகா இருக்கறதைவிட பர்ஃபார்ம் பண்ணத் தெரிஞ்சிருக்கணும்’னு. மனசுக்குள்ள வருத்தம்தான். எனக்குத் தமிழ்ப் பேசத் தெரியாதுன்னு அவரா யோசிச்சு அதைச் சொன்னார். அப்புறம் மனப்பாடம் பண்ணிட்டு சரியா பேசிக் காட்டினேன். என்னை விமர்சனம் பண்ணினவரே பாராட்டினார். `நல்லா வருவம்மா’னு ஆசீர்வாதம் பண்ணினார். நம்ம மேல நமக்கு எப்பவும் நம்பிக்கை வேணும்.’’

எந்த ரோல்ல நடிக்கணும்னு உங்களுக்கு கனவிருக்கு?

``மஹாராணி... அப்புறம் சிண்ட்ரெல்லா - இந்த ரெண்டு வேடத்துலயும் நடிக்கணும். டி.வி-யில அதிர்ஷ்ட தேவதையா வந்து பரிசு கொடுக்குற நிகழ்ச்சில நான் பல கெட்டப்புல வந்திருக்கேன். குதிரைச்சவாரி செய்யணும்னு ஆசையிருக்கு.’’

சினிமா வாய்ப்புகள் எப்படியிருக்கு?

``செலக்டிவ்வா நடிக்கிறேன். சமீபத்துல சங்கர் சாரோட `2.0’ படத்துல நடிச்சிருக்கேன். பெரிய வாய்ப்பு. அந்த செட்ல நிறைய கத்துக்கிட்டேன். சிங்கிள் பர்ஃபார்மராதான் நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். நல்ல வாய்ப்புகள் கிடைச்சா மட்டும் நடிக்க ஒப்புக்கறேன்.''

கிளிசரின் போட்டுத்தானே அழறீங்க?

``அந்தச் சூழலை உணர்ந்து நடிப்பேன். அழுகை தானா வரும். `மாப்பிள்ளை’ சீரியல்ல செந்தில் மேல எனக்கு ஒருதலைக் காதல். அவன் கிடைக்க மாட்டான்கிறப்போ நான் எனக்கான தனிப்பட்ட சோக
மான விஷயங்களை நினைச்சு அழுதுட்டேன்.’’

உங்களால மறக்க முடியாத பாராட்டு?

``நான் ஒரு ஷார்ட் பிலிம்ல நடிச்சப்போ, கூட நடிச்ச நண்பன் ஹரி ராமகிருஷ்ணன் நாலு நாள்ல நாலாயிரம் முறை பாராட்டினான். அது என்னால மறக்க முடியாதது. எழுத்தாளர் ராதாகிருஷ்ணன், என்னை பாராட்ட நினைச்சா கவிதையாவே எழுதிக் கொடுப்பார். அது ரொம்ப ஸ்பெஷலா இருக்கும்.’’

சீரியல்ல நடிக்க ஆசைப்படற பெண்களுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கு, பிரியா?

``சீரியல்ல நடிக்க வர நினைக்கிறவங்களுக்கு நடிக்கிற திறமை இருக்கணும். சீரியல்ல பார்க்கிறது வேற... நடிக்கிற இடத்துல கிடைக்குற அனுபவங்கள் வேற... நீங்க நீங்களா இருக்கணும். கத்துக்கிற ஆசையோட டி.வி துறைக்கு வரணும். நம்மோட தகுதியை வளர்த்துக்கிறது மூலமாத்தான் வருமானமும் உயரும். சிலர் குடும்பக் கஷ்டத்துக்காக நடிக்க வந்திருப்பாங்க. சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சதும், எதுக்கு வந்தோமோ அதை மறந்துடுவாங்க. ஒரு சிலர் தன்னையும் உயர்த்திட்டு, குடும்பத்தையும் காப்பாத்தி வெற்றியடைஞ்சிருக்காங்க. அதுக்கு நிறைய சகிப்புத்தன்மை வேணும்.

எல்லா வாய்ப்புகளையும் ஏத்துக்கக் கூடாது. சரியானதைத் தேர்வு செய்யணும். யார் கேட்டாலும் மொபைல் எண் கொடுக்கக் கூடாது.

சரியான நபர்கள் யாருன்னு புரிஞ்சு பழகணும். நீங்க செக்ஸியா ஒரு டிரஸ் போட்டாலும் உங்க முகத்துல நம்பிக்கை இருந்தா அது செக்ஸியா தெரியாது. மீடியா துறையில காணாமப் போயிடாம நிலைச்சு நிற்க உங்களை நீங்க தயார்படுத்திக்கணும்.''

மீடியால, `வாய்ப்பு இல்லை'ங்கற தால மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை முடிவுக்கு போறவங் களைப் பத்தி?

``சபர்ணா விஷயத்துலகூட அவ வாய்ப்பில்லைன்னு நெனச்சு, அப்படிப் பண்ணிட்டா. அது தவறு. அவ குடும்பத்தை விட்டுட்டு தனியா தங்கியிருந்தா. மன அழுத்தம் இருந்தா நம்பிக்கையான நண்பர்கள்கிட்ட மனம்விட்டுப் பேசிடணும். வாய்ப்புகள் நிறைய இருக்கு. நம்பிக்கையோட காத்திருக்கணும். பணம்தான் இலக்குன்னா, நமக்கு திறமை உள்ள துறையில வருமானத்துக்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கணும். நம்மை பிஸியா வெச்சுக்கிட்டாலே இதுபோன்ற எண்ணங்கள் வராது.’’