Published:Updated:

க்ரியேட்டிவாகச் சாதிக்க பெண்களால் முடியும்!

க்ரியேட்டிவாகச் சாதிக்க பெண்களால் முடியும்!
பிரீமியம் ஸ்டோரி
க்ரியேட்டிவாகச் சாதிக்க பெண்களால் முடியும்!

யாழ் ஸ்ரீதேவி

க்ரியேட்டிவாகச் சாதிக்க பெண்களால் முடியும்!

யாழ் ஸ்ரீதேவி

Published:Updated:
க்ரியேட்டிவாகச் சாதிக்க பெண்களால் முடியும்!
பிரீமியம் ஸ்டோரி
க்ரியேட்டிவாகச் சாதிக்க பெண்களால் முடியும்!

முதல் புன்னகையில் தொடங்கி விடைபெறும் நொடியின் கையசைப்பு வரை ஸ்வாதி பேசிய வார்த்தைகளில் ஒரு ரிதத்தை உணரமுடிகிறது. அந்த அழகுணர்வுதான் அவரின் புகைப்படங்களிலும் வெளிப்படுகிறது. உற்சாக வண்ணத்துப்பூச்சியாக வலம்வரும் டிராவல் போட்டோகிராபர், சேலத்தைச் சேர்ந்தவர். பி.எஸ்ஸி., விஸ்காம் பட்டதாரி. இப்போது பெங்களூரில் மீடியா மேனேஜ்மென்ட்  படித்துக்கொண்டிருக்கிறார்.  அதோடு, ‘ஸ்கெட்ச் கரியர் பெங்களூர்’ நிறுவனத்தில் போட்டோகிராபி பயிற்சியாளராக வும் இருக்கும் ஸ்வாதி, பெங்களூரு மாடல்களுடன் போட்டோஷூட்டில் பிஸி. நேரம் கிடைக்கும்போது பெண்களுக்கு இலவச போட்டோகிராபி வகுப்புகளும் எடுக்கிறார்.

க்ரியேட்டிவாகச் சாதிக்க பெண்களால் முடியும்!
க்ரியேட்டிவாகச் சாதிக்க பெண்களால் முடியும்!

``மீனுக்காக ஒற்றைக்காலில் காத்திருக்கும் கொக்குபோல, நான் எதிர்பார்க்கிற அந்த ஒரு ஷாட் கிடைக்க நாள் கணக்காகவும் காத்திட்டிருப்பேன்’’ என்கிற ஸ்வாதி, தன் டிராவல் போட்டோகிராபி புகைப்படங்களுடன் தன் எழுத்திலேயே வெளியான கட்டுரைகளையும் காட்டுகிறார். ஆம்... இந்தப் பெண் பேனாவும் பிடிக்கிறார்.

``பள்ளி, கல்லூரிக் காலங்களில் நான் நிறைய நாடகங்களில் நடிச்சிருக்கேன். எதையாவது எழுதிட்டிருப்பேன். மீடியாதான் என் இலக்கா இருந்துச்சு. ப்ளஸ் டூ லீவில் போட்டோகிராபி வொர்க்‌ஷாப்ல கலந்துகிட்டேன். எழுத்தைப்போலவே கேமராமீதும் எனக்கு ஆர்வம் அதிகமாச்சு.

வித்தியாசமான போட்டோக்களுக்காக டிராவல் பண்ண ஆரம்பிச்சேன். குட்டிக் குட்டி கிராமங்கள் உள்பட தமிழ்நாடு முழுக்கப் பயணிச்சிருக்கேன். அந்த மக்களோட வாழ்க்கை முறை, பாரம்பர்யத்தையெல்லாம் கேமராவில் பதிவு செய்வதோடு, என் மனதில் குறிச்சுக்கிட்டேன். புகைப்படங்களுடன் என் எழுத்திலும் அவற்றையெல்லாம் வெளிப்படுத்தினேன்’’ என்பவர், தன் வொர்க்கிங் ஸ்டைல் பற்றியும் பகிர்ந்தார்.

``வழக்கமா போட்டோகிராபர்கள் காலையில் 6 மணியிலிருந்து 9 மணிவரை, மாலையில் 3 மணியிலிருந்து 6 மணி வரை உள்ள `கோல்டன் ஹவர்ஸ்’ல புகைப்படங்கள் எடுத்துக் குவிப்பாங்க. என்னைப் பொறுத்தவரை புகைப்படத்துக்கு லைட்டிங் மட்டுமே இலக்கணமில்லை. ஒவ்வொரு படத்திலும் ஒரு ஜீவன் இருக்கணும்னு நினைப்பேன். அதில் ஒன்லைன் ஸ்டோரி இருக்கணும். கேமராவை ரெடி செய்றதுக்கு முன்னாடி, அந்த மனுஷங்ககிட்ட நிறைய பேசி அவங்களோட உணர்வுகளைப் பெற நம்மைத் தயாராக்கிக்கணும். அதனாலதான் திருமண விழா புகைப்படங்களைக்கூட டாக்குமென்டரி உணர்வு களோட கோவையாகவும் கலவையாகவும் என்னால எடுக்க முடியுது’’ என்ற ஸ்வாதி, விவசாயிகள் முதல் மாடல்கள் வரையிலான தன் கேமரா அனுபவங்களைப் பகிர்ந்தார்.

க்ரியேட்டிவாகச் சாதிக்க பெண்களால் முடியும்!
க்ரியேட்டிவாகச் சாதிக்க பெண்களால் முடியும்!

``சமீபத்தில் கும்ப கோணத்துல விவசாயிகள் வாழ்க்கையைப் பற்றிய ஒரு போட்டோஷூட்டுக்காகப் போயிருந்தேன். உலகத்துக்கே சோறு போடுற அவங்க வீட்டுக்குழந்தைகள் எலும்பும் தோலுமா இருந்ததைப் பார்த்தப்போ மனசுக்கு ரொம்ப வேதனையாகிடுச்சு. ‘நீங்க எடுத்துட்டுப் போற போட்டோவைப் பார்த்தாச்சும் அரசாங்கம் எங்களுக்கு உதவ வருதான்னு பாப்போம்மா...’னு அவங்க சொன்னப்போ, என் பொறுப்பை இன்னும் அழுத்தமா உணர்ந்தேன். என் புகைப்படங்களால் அப்படி ஒரு நல்லது நடந்தா அதைவிட நிறைவு வேறில்லை எனக்கு.

க்ரியேட்டிவாகச் சாதிக்க பெண்களால் முடியும்!

பணிபுரியும் நிறுவனத்தில் நான் எடுக்கிற போட்டோகிராபி வகுப்புகளில் ஆண்கள்தான் அதிகளவில் இருக்காங்க. பெண்கள் அபூர்வமாகத்தான் வர்றாங்க. ஆனா, வாசல்ல கோலம் போடுறதுல தொடங்கும் கலை உணர்வு என்பது இயல்பில் பெண்களுக்கே அதிகம். அவங்க போட்டோகிராபியில இறங்கினா க்ரியேட்டிவிட்டியில் ஆண்களைவிடக் கலக்குவாங்க. அதனால, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பெண்களுக்கு இலவச போட்டோகிராபி வகுப்புகள் எடுக்கிறேன். மாடல் போட்டோகிராபி செய்யும்போது அந்த மாடல்ஸ், ‘ஒரு பெண் போட்டோகிராபர்கிட்ட வேலைபார்க்கிறதைப் பாதுகாப்பா உணர்றோம்’னு சொல்வாங்க. அதனால இங்க எல்லா துறைகளிலும் பெண்கள் பெருகும்போது, ஆண் மையச் சூழல்ல அவங்கச் சந்திக்கிற பிரச்னைகள் குறையும்னு நம்புறேன்’’ என்பவர், தன் எதிர்காலத் திட்டங்களைக் கூறும்போது குரலில் உற்சாகம் பொங்குகிறது...

க்ரியேட்டிவாகச் சாதிக்க பெண்களால் முடியும்!

``பக்காவா ஒரு போட்டோ ஸ்டுடியோ ஆரம்பிக்கணும். ஃபேமிலி போட்டோ எடுக்க வர்றவங்களுக்கு கான்செப்ட் போட்டோகிராபி பண்ணிக்கொடுக்கணும். கிராஃபிக் டிசைன், போட்டோகிராபி பயிற்சி வகுப்புகள் எடுக்கணும். என் ஸ்டுடியோவில் பெண்களைப் பெரும்பான்மையா பணியமர்த்தணும். இப்படியெல்லாம் நான் தன்னம்பிக்கையுடன் யோசிக்க என் அம்மாதான் காரணம். எனக்குக் கிடைக்கிற பாராட்டுகள் எல்லாமே ஓவர் டு அம்மா” என்று தன் அம்மா உமாதேவியைக் கட்டிக்கொள்கிறார் ஸ்வாதி!

க்ரியேட்டிவாகச் சாதிக்க பெண்களால் முடியும்!

‘`அம்மாதான் எல்லாம்!”

ஸ்வாதியின் அம்மா உமாதேவி, ஒரு சிங்கிள் மதர். ஓவியம், ஆடை வடிவமைப்பு என்று கலக்குபவர். தன் மகளின் ஆசைக்கு அணைபோடாத அம்மா. ``சமுதாயத்துல வித்தியாசமான ஒரு பாதையில நடைபோடுற பெரும்பாலான பெண்களுக்கு முதுகில் தட்டிக்கொடுத்து முன்னேறிச் செல்லச் சொல்லும் வீடு கிடைச்சிருக்கும். இங்கே என் அம்மாதான் என் வீடு... என் உலகம்’’ என்கிறார் ஸ்வாதி.