Published:Updated:

“இயற்கையோடு இணைந்தால் விடியலும் இனிமை!”

“இயற்கையோடு இணைந்தால் விடியலும் இனிமை!”
பிரீமியம் ஸ்டோரி
“இயற்கையோடு இணைந்தால் விடியலும் இனிமை!”

அழைப்புவிடுக்கும் அசத்தல் குடும்பம்!வாழ்தல் இனிதுகு.ஆனந்தராஜ், படங்கள்: க.விக்னேஸ்வரன், ல.அகிலன்

“இயற்கையோடு இணைந்தால் விடியலும் இனிமை!”

அழைப்புவிடுக்கும் அசத்தல் குடும்பம்!வாழ்தல் இனிதுகு.ஆனந்தராஜ், படங்கள்: க.விக்னேஸ்வரன், ல.அகிலன்

Published:Updated:
“இயற்கையோடு இணைந்தால் விடியலும் இனிமை!”
பிரீமியம் ஸ்டோரி
“இயற்கையோடு இணைந்தால் விடியலும் இனிமை!”

கோயம்புத்தூர் விமான நிலையம் அருகிலுள்ள குளத்தூர் பகுதியில், இயற்கையோடு இணைந்த தனிமை வாழ்க்கையை ஆனந்தமாக வாழும் சுபாஷினி சந்திரசேகர் குடும்பத்தைச் சந்தித்தோம், ஆச்சர்யங்களை நமக்கு அள்ளித்தருகின்றனர் இந்தத் தம்பதியர்.

``நான் பிறந்து வளர்ந்தது இந்தக் குளத்தூர்தான். எங்க குடும்பப் பூர்வீகத் தொழிலான விவசாயத்தில் சிறு வயசுல இருந்தே ஆர்வம். பத்தாவது முடிச்சதும் படிப்பை நிறுத்திட்டு வேலையில் சேர்ந்தேன். நிரந்தரமா ஒரு வேலையில் இல்லாம, அடுத்தடுத்து மாறிட்டே இருந்தேன். அப்படி டிரைவர் வேலை பார்த்தப்போ, விவசாயப் பொருள்களை நகரப் பகுதிக்குக் கொண்டுவரும் வேலைக்காக மலைப்பகுதிகளுக்குத் தினமும் பயணம் செஞ்சுட்டிருப்பேன். அதுக்காக வனப்பகுதிக்குள்ள பயணிக்கிறப்போ, அங்கே முழுக்க முழுக்க இயற்கையான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கிற அந்த மக்கள்கிட்ட பேசுறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்ககிட்ட கேட்டு வித்தியாசமான மூலிகைத் தாவரங்களைக் கொண்டுவந்து எங்க வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற தோட்டத்துல ஆர்வமா வளர்ப்பேன். அதனாலேயே வருமானத்தை இரண்டாம்பட்சமா நினைச்சு, அந்த டிரைவர் வேலையை ரசிச்சு செஞ்சுக் கிட்டிருந்தேன். இயற்கை விவசாயம் என் மனசுல ஆழமா பதிஞ்சது அந்தக் காலகட்டத்துலதான்.

“இயற்கையோடு இணைந்தால் விடியலும் இனிமை!”

அந்த 90-களில் இயற்கை விவசாயம் செய்துக்கிட்டிருந்த எங்கப்பா உள்ளிட்ட பலரும் ரசாயன முறை விவசாயத்துக்கு மாறினாங்க. அது எனக்குச் சுத்தமா பிடிக்கலை. ஆனா, என் எண்ண ஓட்டங்களை                    அப்படியே பிரதிபலிக்கிற சுபாஷினி, அப்போ எனக்கு வாழ்க்கைத் துணையா வந்து சேர்ந்தது என் வரம்’’ என சந்திரசேகர் சிரிக்க, மெல்லிய குரலில் பேசத் தொடங்குகிறார் சுபாஷினி...

``நானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவதான். பி.எஸ்ஸி., தாவரவியல் படிச்சுட்டு எங்கக் குடும்ப விவசாய வேலைகளைப் பார்த்துட்டு இருந்தேன். அப்போதான் இவருக்கும் எனக்கும் திருமணம் முடிந்தது. இயற்
கையைக் கெடுக்காத, இயற்கையோடு இணைந்த ஒரு வாழ்க்கை என்ற கனவு எங்க ரெண்டு பேருக்கும் இருந்ததால, அதற்கான சாத்தியங்களைப் பத்திப் பேசிட்டே இருப்போம். ஒரு விபத்துல அவரோட ஒரு கால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில சேர்த்து 100 நாள்கள் வைத்தியம் பார்த்தும் குணமாகலை. அவர் இயற்கைமுறையில குணமாகிட லாம்கிற நம்பிக்கையோட வீட்டுக்குக் கூட்டிப்போகச் சொன்னார். இயற்கை வைத்தியத்துல பத்தே நாள்ல குணமானார். இயற்கை மேல அவர் வெச்சிருக்கிற நேசத்தையும் நம்பிக்கையையும் முழுசாப் புரிஞ்சுக்கிட்டேன். `இனி என்ன ஆனாலும், வாழ்நாள் முழுக்க இயற்கையை நோக்கித்தான் நாம வாழணும். ரசாயனம் கலந்த உணவுப் பொருள்களையும் அத்தியாவசியப் பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது'னு ரெண்டு பேரும் உறுதியாக முடிவெடுத்தோம்'' என்கிறார் சுபாஷினி.

“இயற்கையோடு இணைந்தால் விடியலும் இனிமை!”
“இயற்கையோடு இணைந்தால் விடியலும் இனிமை!”

``2011-ம் வருஷம் நான் வேலையை விட்டுட்டேன். இயற்கை வழிகாட்டல் கூட்டங்களுக்குப் போய் பயனுள்ள விஷயங்கள் பலவற்றைக் கத்துக்கிட் டேன். அதனால, இயற்கை ஆர்வமுள்ள பலரின் நட்பு கிடைச்சு, எங்க துணிச்ச லான முடிவுக்கு நம்பிக்கை கிடைச்சது. அப்பாவின் நாலு ஏக்கர் நிலத்துல, ரெண்டு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு வாங்கினோம். எங்க பகுதி முழுக்கவே கிணற்றுப் பாசனம்தான். வருஷம் முழுக்கத் தண்ணீர் வற்றாது. ஆனா, எங்க நிலத்தடி நீர், கடல் தண்ணியைப் போல உப்புத்தன்மையோடு இருக்குங்கறதால, நெல் உள்ளிட்ட பணப் பயிர்களை விளைவிக்கிறது சவாலான விஷயம். இருந்தாலும், இந்தத் தண்ணியை உறிஞ்சி வளரும் தாவரங்களைச் சோதனை முறையில் கண்டறிந்தோம்.

பல மாத சோதனை முடிவில், நல்ல தெளிவு கிடைச்சது. அதன்படி தக்காளி, கத்திரி, சப்போட்டா, மாதுளை, மா, நாவல், சீதாப்பழம், நெல்லி, தென்னை, சவுக்கு, முருங்கை, தேக்கு, சந்தன மரம், மூங்கில், வேம்பு, குமிழ்னு பலவகை மூலிகைத் தாவரங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான செடிகளை வெச்சு வளர்க்க ஆரம்பிச்சோம். நிறைய சவால்களையும் பிரச்னைகளையும் தாண்டி பல தாவரங்களிலிருந்தும் விளைச்சல் கிடைக்க ஆரம்பிச்சது.

“இயற்கையோடு இணைந்தால் விடியலும் இனிமை!”

`சுபம் இயற்கை அங்காடி'ங்கிற பெயர்ல வீட்டுக்குப் பக்கத்துலேயே ஆர்கானிக் ஷாப் ஆரம்பிச்சு, அதுல எங்க விளைபொருள்களை விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். மேலும், இயற்கை விவசாயிங்ககிட்ட இருந்து பாரம்பர்ய அரிசி, தானியங்கள், பழம் மற்றும் காய்கறிகள்னு உணவுத் தேவைக்கான பொருள்களை நேரடியா போய் வாங்கிட்டுவந்து விற்பனை செய்யத் தொடங்கி, அந்தப் பயணம் இப்போ வரை தொடர்ந்
திட்டிருக்கு...’’ என்று சந்திரசேகர் சொல்லும்போதே கவனித்தோம்... தோட்டத்தில் நிறைய பழங்களைப் பறவைகள் தின்று சேதாரமாக்கியிருந்தன. `இதனால நிறைய நஷ்டம் ஏற்படுமே?' என்றபோது, இருவரும் ஒரு சிரிப்பைத் தந்துவிட்டுச் சொன்ன பதில், நாம் சிந்திக்க வேண்டியது...
 
``ஒரு ஜீவனை அழிச்சுதான் இன்னொரு ஜீவன் வாழ முடியும் என்பதுதான் இயற்கை நியதி. அப்படிப் பல ஜீவராசிகளையும் மனுஷன் சாப்பிடுறான். அதே மாதிரி பறவைகளுக்கு இயற்கையாக விளையும் பழங்கள், காய்கறிகள்தானே உயிர்வாழ ஆதாரம்? ஊர்ல இருக்கிற எல்லாருமே தங்களோட வீட்டுல சில பழவகை மரங்களை வளர்த்தா, எல்லாப் பறவைகளும் பரவலா போய்ப் பசி தீர்த்துக்கும். அப்போ ஒருவருக்கு அதிக நஷ்டம் ஏற்படாது. எங்க ஊர்லயே நாங்க மட்டும்தான் இப்படிப் பல நூறு மரங்களை வளர்த்திட்டிருக்கோம். சந்தோஷமா சாப்பிட்டுப் போகட்டும்னு நாங்க விட்டுடுவோம். பறவைகள் சாப்பிட்டதுபோக மீதி இருக்கிற பழங்களைத்தான் எங்க அங்காடியிலயும், வெளியூர் வணிகர்களுக்கும் விற்பனை செய்கிறோம்’’ என சுபாஷினி சொல்ல, பச்சை வயலொன்று எழும்பி காற்றில் மிதப்பதுபோல, `சட்சட சட்சட'  சத்தத்துடன் 50-க்கும் மேற்பட்ட கிளிகள் நம்மைக் கடந்து பறந்துசென்ற தருணம்... வாவ்!

பட்ஜெட் போடாத தங்களின் 15 வருட வாழ்க்கை முறையைச் சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார் சுபாஷினி... ``இந்தக் கணம்தான் நிஜம்னு நம்புறோம். அதனால, நாங்க நிஜமில்லாத நாளைக்கு, அடுத்த ஒரு வாரத்துக்கு, மாசத்துக்கு, வருஷத்துக்குனு நோக்கி ஓடுறதில்லை. அப்படி ஓடினால்தானே நிம்மதி போகும்? மனுஷனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளுமே அன்னன்னிக்கான உணவுத் தேவையை நோக்கி மட்டுமே ஓடுது. அவை எல்லாமே மகிழ்ச்சியாத்தானே இருக்கு?

``ஒரு வருஷத் தேவைக்கான மழை நீரை சேமிச்சு, அதை குடிநீர் தேவைக்குப் பயன்படுத்துறதை 15 வருஷங்களா செய்துட்டு வர்றோம். போக்குவரத்துக்கும் பெரும்பாலும் சைக்கிளைத்தான் பயன்படுத்துறோம். பொண்ணுங்க ரெண்டு பேரையும் மார்க் நோக்கி விரட்டுற தப்பைச் செய்ய மாட்டோம். `புரிஞ்சு படிங்க, ஃபெயில் மார்க் வாங்கினாலும் பரவாயில்லை'னு சொல்லித்தான் வழிநடத்திட்டிருக்கோம். ஒன்பதாம் மற்றும் பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் எங்க ரெண்டு பொண்ணுகளும் நல்லா படிச்சுட்டு வர்றாங்க. அதைவிட எங்களுக்குச் சந்தோஷம்... விளையாட்டிலும் நேஷனல் லெவல் அத்லெட் பிளேயர்ஸா இருக்காங்க. 

“இயற்கையோடு இணைந்தால் விடியலும் இனிமை!”

ஒருவர் மாறி ஒருவரா நானும் மனைவியும் பார்த்துக்கிற எங்க கடை வேலை, பொண்ணுங்க படிப்பு நேரம் போக... மத்த நேரம் எல்லாம் இந்தத் தாவரங்களோடுதான் எங்க வாழ்க்கையைக் கழிக்கிறோம். பாரம்பர்ய அரிசி ரகங்கள் உள்பட இயற்கை உணவுப் பொருள்களைத்தான் பயன்படுத்துறோம். இரவு 9 மணிக்குத் தூங்கி, காலை 5 மணிக்கெல்லாம் எழுந்துடுவோம். சொன்னா நம்பமாட்டீங்க... நாங்க நாலு பேரும் ஆஸ்பத்திரிக்குப் போயும், இங்கிலீஷ் மருந்து மாத்திரை யைப் பயன்படுத்தியும் 15 வருஷங் களாகுது. காய்ச்சல், சளினு என்ன நோவு வந்தாலும் இயற்கை வைத்தியம் தான்.

இந்த இயற்கையுடன் இணைந்த தற்சார்பு வாழ்க்கை, எங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்குது. எங்க வாழ்வியலை மத்தவங்களுக்குச் சொல்லிக்கொடுக்க, விழிப்பு உணர்வு ஏற்படுத்த நாங்க தயாரா இருக்கோம்’’ என்கிறார் சந்திரசேகர். 

பெருவாழ்வு என்பது இதுதானோ!