Published:Updated:

“அது ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்!” - `பிக் பாஸ்' ரைசா

“அது ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்!” - `பிக் பாஸ்' ரைசா
பிரீமியம் ஸ்டோரி
“அது ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்!” - `பிக் பாஸ்' ரைசா

ஆர்.வைதேகி, படங்கள்: கே.ராஜசேகரன்

“அது ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்!” - `பிக் பாஸ்' ரைசா

ஆர்.வைதேகி, படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
“அது ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்!” - `பிக் பாஸ்' ரைசா
பிரீமியம் ஸ்டோரி
“அது ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்!” - `பிக் பாஸ்' ரைசா

பிக் பாஸில் பார்த்தது போலவே நிமிடத்துக்கொரு முறை டச்சப் செய்துகொள்கிறார். நொடிக்கொரு எக்ஸ்பிரஷனில் அசத்துகிறார். வரிக்கொரு `ட்ரூ', `அஃப் கோர்ஸ்', `அடப்போங்கய்யா' சொல்கிறார்.
ரைசா இப்போது செம ஹேப்பி மட்டுமல்ல... செம பிஸியும்கூட. படங்களில் நடிக்க கதைகள் கேட்கிறார். பறந்துப் பறந்து மாடலிங் பண்ணுகிறார். திடீரென பிக் பாஸ் மோடில் கேட்ஜெட்ஸுக்கெல்லாம் ரெஸ்ட் கொடுத்துவிட்டு, அம்மா அப்பாவைப் பார்க்க பெங்களூரு போகிறார். `படபட’, `பறபற’ ரைசாவுடன் ஒரு ஜாலி சாட்...

ரைசா டேட்டா ப்ளீஸ்...

``அப்பாவுக்குக் கேரளா. அம்மாவுக்கு டெல்லி. எனக்கு ஒரு தங்கச்சி. அவளுக்கு 21 வயசு. நான் டெல்லியில பிறந்தேன். ஊட்டியில வளர்ந்தேன். அதனாலதான் எனக்கு தமிழ் நல்லா தெரியுது. அப்புறம் காலேஜுக்காக பெங்களூரு போனேன். பி.காம் முடிச்சிருக்கேன். காலேஜ் போகிற நேரம் தவிர மீதி நிறைய டைம் இருந்தது. `வெட்டியா சுத்திட்டிருக்க வேணாம்... ஏதாவது பண்ணலாமே'னு நினைச்சேன். என் ஃப்ரெண்ட்ஸ்தான் மாடலிங் ட்ரை பண்ணச் சொன்னாங்க.

“அது ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்!” - `பிக் பாஸ்' ரைசா

பார்ட் டைமா மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் நிறைய வாய்ப்பு கள் வர ஆரம்பித்தன. `மிஸ் இந்தியா'வுல கலந்துக்கிட்டேன். அப்புறம் பிஸியா கிட்டேன். என் கோ-ஆர்டினேட்டர் மூலமா தான் பிக் பாஸுக்குள்ள வந்தேன். பிக் பாஸுக்கு அப்புறம் நான் எவ்ளோ ஃபேமஸ்னு உங்களுக்கே தெரியும். இது வேற லெவல். சத்தியமா எதிர்பார்க்கலை!''

ரைசான்னா என்ன அர்த்தம்?

``நிறைய அர்த்தங்கள் இருக்கு. ரோஸ்... லவ்... கேர்ஃப்ரீ... குயின்... எப்படி வேணா எடுத்துக்கலாம்.''

`வி.ஐ.பி 2'..?

``பிக் பாஸ் ஹவுஸுக்குள்ள போகறதுக்கு முன்னாடி நடிச்ச படம். நான் பண்ணின விளம்பரத்தைப் பார்த்துட்டுக் கேட்டாங்க. உள்ளே போன பிறகு படம் ரிலீஸாச்சு.  என்ன நடந்ததுன்னே தெரியலை. அதுல அனுபவம்னு நான் எதையுமே ஃபீல் பண்ணலை. ஒருவேளை நான் பிக் பாஸ்ல இல்லாமப் போயிருந்தா, அந்தப் படத்துல என்னை யாருக்கும் தெரிஞ்சிருக்காது.''

“அது ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்!” - `பிக் பாஸ்' ரைசா

ரைசா சாய்ஸ் எது... மாடலிங்கா, நடிப்பா?

``ரெண்டுமே பிடிக்கும். மாடலிங் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல். என்னுடைய திறமையை பெட்டரா வெளிப்படுத்தற விஷயம் மாடலிங்னு நினைக்கிறேன்.  அதே நேரம், நான் நல்லா நடிக்கிறேன்னு பாராட்டு வாங்கினா சந்தோஷப்படுவேன். அதனால நடிப்பும் முக்கியம்தான். மாடலிங் கொஞ்சம் ஈஸியும்கூட. நடிப்புல பேர் வாங்கணும்னா ஒரு ஸ்பெஷல் காரணம் வேணும்னு நினைக்கிறேன்.''

“அது ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்!” - `பிக் பாஸ்' ரைசா

பிக் பாஸ்ல கத்துக்கிட்ட விஷயங்கள் என்னென்ன..?

``பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்த ஒவ்வொரு நாளும் எங்க எல்லாரோட மனநிலையும் ரோலர் கோஸ்டர் மாதிரிதான் இருந்தது. ஒவ்வொரு நாளும் கஷ்டமாவும் இருந்திருக்கு. ஒவ்வொரு நாளும் சூப்பராவும் இருந்திருக்கு. ஒவ்வொரு நாளும் ஒரு சேலஞ்சா போச்சு. அந்த அனுபவம்தான் என்னை இன்னும் ஸ்ட்ராங்கா மாத்தியிருக்குனு சொல்வேன்.

நிறைய லைஃப் லெசன்ஸ்  கத்துக்கிட்டேன். மக்கள்கிட்ட எப்படிப் பேசணும், அவங்களை எப்படி ஜட்ஜ் பண்ணணும்னு கத்துக்கிட்டேன். ஆரம்ப நாள்கள்ல நான் அந்த வீட்டுக்குள்ள இருந்தவங்ககூட பெரிசா பேசினதில்லை. அப்புறம் அடுத்தவங்க பேசறதைக் கவனிக்க ஆரம்பிச்சேன். சாப்பாடோ, துணியோ என்னவா வேணா இருக்கட்டும்... இருக்கிறதை எப்படி மதிக்கணும்னு கத்துக்கிட்டேன். இப்போ ரொம்பப் பக்குவப்பட்டிருக்கேன். அப்படி என்னை மாத்தின பிக் பாஸுக்கு தேங்க்ஸ்.''

“அது ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்!” - `பிக் பாஸ்' ரைசா

மேக்கப் இல்லாத ரைசா?

``உண்மையைச் சொல்லணும்னா அது ரொம்ப போர்.  எனக்கு மேக்கப்போடு இருக்கிறது எவ்வளவு பிடிக்குமோ, அதே அளவுக்கு மேக்கப் இல்லாம இருக்கிறதும் பிடிக்கும். வீட்டுல உள்ளபோது மேக்கப் போட மாட்டேன். பிக் பாஸ் வீட்டுல எனக்கு செய்யறதுக்கு ஒண்ணுமே இல்லை. அதனால எனக்கும் அடுத்தவங்களுக்கும் மேக்கப் போட்டுக்கிட்டே இருந்தேன். அடுத்தவங்களை அழகாக்கிப் பார்க்கிறதும் எனக்குப் பிடிக்கும்.''

நாய் பிடிக்குமா?

``நிஜ வாழ்க்கையில நான் அநியாயத்துக்கு அனிமல் லவ்வர். நாய்க்குட்டிகள்னா ரொம்பப் பிடிக்கும். பிக் பாஸுக்கு அப்புறம் நாய் குரைக்கிற சத்தமே பிடிக்காமப் போயிடுச்சு. வீட்டுல `ஷிரு'னு ஒரு நாய்க்குட்டி வளர்க்கறோம். பிக் பாஸ்ல நான், நாய், அந்தச் சத்தம்னு எல்லாத்தையும் பார்க்கிறபோது இப்போ செம காமெடியா இருக்கு.''

ரைசா தூங்குமூஞ்சியா?

``பிக் பாஸ்ல நான் டாஸ்க் டைம்ல தூங்கினதே இல்லை. பண்றதுக்கு ஒண்ணுமே இல்லைங்கிறபோதுதான் தூங்கினேன். வேலை பார்க்கிறபோது எனக்கு வேலைதான் முக்கியம். தூங்கறபோது தூக்கம்தான் முக்கியம்.''

ரீடர்ஸுக்குக் கொஞ்சம் பியூட்டி டிப்ஸ் ப்ளீஸ்...

``நிறைய தண்ணீர் குடிங்க. உடம்புல தண்ணீர் வற்றிப் போயிடாமப் பார்த்துக்கோங்க. நல்லா தூங்குங்க. நல்லா சாப்பிடுங்க. எண்ணெயையும் சர்க்கரையையும் தவிர்த்துடுங்க. வேப்பிலை யூஸ் பண்ணுங்க. அது உங்க ஸ்கின்னுக்கு ரொம்ப நல்லது. கண்டதையெல்லாம் முகத்துல போடாதீங்க. காலையில ஒண்ணு, மதியம் ஒண்ணு, நைட் ஒண்ணுனு ஓவரா எதையும் யூஸ் பண்ணாதீங்க. அப்பப்போ கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க.''

மாடலிங்கையும் மேக்கப்பை யும் தவிர என்னவெல்லாம் பிடிக்கும்?

``நல்லா சமைப்பேன். நிறைய படிப்பேன். பாட்டு கேட்பேன். டிராவல் பண்ணுவேன்.''

“அது ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்!” - `பிக் பாஸ்' ரைசா

கோபம் வருமா?

``வரும்... ஆனா, வராது. சில நேரம் பயங்கரமா கோபம் வரும். `ஏன் எனக்கு அவ்ளோ கோபம்'னு யோசிப்பேன். சில நேரம் கோபமே வராது. `இந்த இடத்துல ஏன் கோபமே வரலை'னு யோசிப்பேன். ஏன்னு எனக்கே தெரியாது.''

ஒரு மாடலா உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிற விஷயம்?

``நான் மாடலிங் பண்ண ஆரம்பிச்சபோது நல்ல கலரா, செம பர்சனாலிட்டியோடு இருக்கிறவங்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும்கிற நிலைமை இருந்தது. இப்போ அந்த நிலைமை ரொம்பவே மாறியிருக்கு. மாநிறமா இருக்கிறவங்களும் கலக்கறாங்க. நிறைய எக்ஸ்பெரிமென்ட்ஸ் நடக்குது. இந்த ட்ரெண்டு நல்லாருக்கு. பொண்ணுங்க ஆதிக்கம் செலுத்தற ஓர் இண்டஸ்ட்ரி இது. வேற எந்தத் துறையைவிடவும் இதுல பொண்ணுங்களுக்கு வாய்ப்புகள் அதிகம். அதுவும் நல்ல விஷயம்தானே..?''

`அடப்போங்கய்யா'வையும் `ட்ரூ'வையும் எங்கே கத்துக்கிட்டீங்க?

`` `ட்ரூ' - நான் அடிக்கடி யூஸ் பண்ற வார்த்தைதான். `அடப்போங்கய்யா' மட்டும் அங்கே போய்தான் கத்துக்கிட்டேன். யாரோ சொல்லியிருப்பாங்க... பிடிச்சிருச்சு. அவ்வளவுதான்.''