Published:Updated:

தேடல் இருந்தால் ஜெயிக்கலாம்!

தேடல் இருந்தால் ஜெயிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
தேடல் இருந்தால் ஜெயிக்கலாம்!

டிவிடி முதல் சினிமா வரைகு.ஆனந்தராஜ் , படங்கள்: ரா.வருண் பிரசாத்

தேடல் இருந்தால் ஜெயிக்கலாம்!

டிவிடி முதல் சினிமா வரைகு.ஆனந்தராஜ் , படங்கள்: ரா.வருண் பிரசாத்

Published:Updated:
தேடல் இருந்தால் ஜெயிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
தேடல் இருந்தால் ஜெயிக்கலாம்!

``என் மாமனார் இராம.நாராயணன் உழைப்பில் உருவான நிறுவனத்தை இனி என் கணவரும் நானும் தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் செல்வோம். திரைப்படத் தயாரிப்பு, டிஸ்ட்ரிபியூஷன்னு காலண்டர் கடகடனு ஓடுது. மைல்ஸ் டு கோ” - ஆங்கிலம், தமிழ் இரண்டுமே அழகு, ஹேமா ருக்மணியின் உச்சரிப்பில். இவர் ‘ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ சி.இ.ஓ. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ திரைப்படத்தின் பரபர தீபாவளி ரிலீஸ் வேலைகளுக்கிடையே, தன் திரைத் துறைக் கனவுகள் குறித்துத் தீர்க்கமாகப் பேசுகிறார்.

“நான் மதுரைப் பெண். அங்கே லேடி டோக் காலேஜ்ல இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சப்போ, நான்தான் காலேஜ் பிரசிடென்ட். தலைமைப் பண்பும் ஆளுமையும்  இயல்பிலேயே எனக்கு வாய்க்கப்பெற்ற குணங்கள். அடுத்து மதுரை காமராஜர் யுனிவர்சிட்டியில் எம்.ஏ., ஜர்னலிஸம் இன் மாஸ் கம்யூனிகேஷன் முடிச்சேன்.

தேடல் இருந்தால் ஜெயிக்கலாம்!

புகழ்பெற்ற கமலா தியேட்டர் அதிபர்தான் என் தாத்தா. நான் திருமணமாகி வந்ததும் பிரபலத் திரைக்குடும்பம். ஆனாலும், எனக்கு சினிமாவில் ஆர்வமில்லை. என் பிசினஸ் மைண்டு என்ன செய்யலாம் என்ற தேடலை ஆரம்பிச்சது. நண்பர் ஒருவர் மூலமா கிடைச்ச ஐடியாவால், ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியைத் தொடங்கினேன். நூறு பேரை வேலைக்கு அமர்த்துற அளவுக்குச் சீக்கிரமே என் தொழில் வளர்ந்தது. என் பெண் ஸ்ருதி பிறந்ததும் அதிலிருந்து விலகினேன். அடுத்து பையன் ஷரண் நாராயணன் பிறக்கிறவரைக்கும் ஓர் அம்மாவா எனக்கான கடமைகளுக்கு என்னை நான் தரவேண்டியதா இருந்தது. அடுத்த இன்னிங்ஸில், சென்னையில் `டிவிடி’ லைப்ரரியை ஆரம்பிச்சேன். அந்தக் காலகட்டத்தில் `டிவிடி அட்மாஸ்பியர்’ என்பது பெண்களுக்கானதாக இல்லை. `அதற்கு ஒரு தொடக்கமா ஏன் நாம இருக்கக் கூடாது’னு யோசிச்சு எடுத்த முடிவு தான் ‘மூவி கிளப்’ என்கிற ஒரிஜினல் `டிவிடி’ லைப்ரரி’’ என்பவர், அதிலும் வெற்றியை ருசித்திருக்கிறார்.

தேடல் இருந்தால் ஜெயிக்கலாம்!

``என் லைப்ரரியில் உலகின் பெரும் பாலான மொழிப்பட `டிவிடி’களையும் விற்பனை செய்ததுடன் வாடகைக்கும் கொடுக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள்லேயே இன்னொரு கிளை ஆரம்பிக்கிற அளவுக்கு, நடுத்தரக் குடும்பத்தினர் முதல் பெரிய பிரபலங்கள் வரை சினிமா ரசிகர்களுக்கு என் லைப்ரரி ஃபேவரைட் இடமானது. கூடவே, தினமும் ஒரு மொழிப் படம்னு நானும் தவறாமல் பார்க்க ஆரம்பிச்சேன். இப்படித்தான் சில வருஷங்களில் நாலாயிரத்துக்கும் அதிகமான படங்களைப் பார்த்ததோட, கூகுள் செய்து சினிமாவில் நான் பார்த்த, எனக்குப் பிடிச்ச டெக்னிக்கல் விஷயங்கள் பலவற்றையும் தெரிஞ்சுக்கிட்டேன்” என்று சொல்லும் ஹேமா, 11 ஆண்டுகள் டிவிடி லைப்ரரியை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார். க்ரியேட்டிவ் துறையின்மீது அவருக்கு ஆர்வமும் மரியாதையும் ஏற்பட்டது இந்தக் காலகட்டத்தில்தான். அவர் மாமனாரின் இழப்பு, அவரை இந்தத் துறைக்கு புரொஃபஷனலாக அழைத்து வந்திருக்கிறது.

``மூணு வருஷத்துக்கு முன் என் மாமனார் காலமானப்போ, அந்த ஆலமர இழப்பு எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி. அவர் உருவாக்கின நிறுவனத்தை இன்னும் பல மடங்கு உயர்த்தும் உத்வேகம் எனக்கும் என் கணவருக்கும் ஏற்பட்டது. எப்போதும் அவருக்கு மாரல் சப்போர்ட்டாக இருக்கும் என்னை, இம்முறை நிர்வாகப் பொறுப்புக்கும் கொண்டுவந்தார், ‘ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ இயக்குநரான என் கணவர். அதன் சி.இ.ஓ-வாக என்னை நியமித்தார். இந்தச் சவாலான துறையைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள, ஒருவருக்கொருவர் பலம் கொடுத்துப் பயணிச்சுட்டு இருக்கோம்’’ என்கிறார் ஹேமா.

சினிமா தயாரிப்புப் பணிகளில் இணையாக இறங்கிய இந்தத் தம்பதி, ‘அரண்மனை’, ‘காஞ்சனா 2’, ‘டிமான்ட்டி காலனி’, ‘பாகுபலி’, ‘மாயா’, ‘அரண்மனை 2’, ‘தில்லுக்கு துட்டு’, ‘ஜாக்சன் துரை’, ‘காற்று வெளியிடை’ என்று விளாசிய சிக்ஸர்கள் பலப்பல. மெகா பட்ஜெட் படமான ‘சங்கமித்ரா’ உள்ளிட்ட இன்னும் எட்டுப் படங்கள் இவர்களின் தயாரிப்பின் கீழ் இருக்க, இந்தத் தீபாவளியின் ஸ்பெஷல் பட்டாசாகியிருக்கிறது இவர்கள் தயாரித்திருக்கும் ‘மெர்சல்’ திரைப்படம்.

தேடல் இருந்தால் ஜெயிக்கலாம்!

தன் மற்றுமொரு முயற்சியான டிராமா மற்றும் அதன் மூலம் துளிர்த்திருக்கும் ஒரு சேவைத்தளம் பற்றித் தொடர்ந்தார் ஹேமா...

``வெளிநாடுகளுக்குப் போகும்போது தேடித் தேடி நாடகங்கள் பார்ப்பேன். நம்ம ஊர்லயும் டிராமாக்கள் செய்தா என்னன்னு ஒரு சிந்தனை தோன்றியது. அதில் செலவும் குறைவு. நிறைய கலைஞர்களையும் அறிமுகப்படுத்த முடியும்.  அதனால், முதல் முயற்சியாக ‘சில்லு’ என்ற நாடகத்தை நடத்தினோம். நல்ல வரவேற்பு கிடைக்க, தொடர்ந்து வெரைட்டியான நாலு டிராமாக்களை நடத்தினோம். இதன் மூலமா கிடைக்கிற வருமானத்தை அப்படியே ஏழைக் குழந்தைகளின் படிப்புக்குக் கொடுத்துடுறோம்” என்ற ஹேமாவிடம், ``மெர்சல் எப்படி வந்திருக்கு?’’ என்றால், ``ஒரு தயாரிப்பாளர்கிட்டயே ரெவ்யூ கேட்கிறீங் களே?!’’ என்று கலகலவெனச் சிரிக்கிறார்.

“விஜய் சார் எங்களை ஒருநாள் திடீர்னு சந்திக்க வரச்சொல்ல, போனோம். ‘நாம ஒரு படம் பண்ணலாமே’னு அவர் சொன்னதும் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி. தொடர்ந்து, டைரக்டர் அட்லி சொன்ன கதை எங்களுக்குப் பிடிச்சிருந்தது. மியூசிக்குக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சாரும் கமிட் ஆக, பட வேலைகள் பரபரனு நடந்துட்டிருந்தப்போதான், எங்க நிறுவனத் தயாரிப்பில் இதுதான் நூறாவது படம்னு தெரியவந்தது. இன்னும் உற்சாகமாகிட்டோம். விஜய் சார் படங்கள்லயே அதிக பட்ஜெட் படம் இது.

மெர்சலில் காஜல் அகர்வாலுக்கு க்யூட் கேர்ள் ரோல், நித்யா மேனன் ரசிகர்கள் மனசைக் கவரும் ஹோம்லி தேவதை, சமந்தாவுக்கு ஸ்ட்ராங் உமன் கேரக்டர்... இப்படி மூணு பேருமே கலக்கியிருக்காங்க” என்று மகிழும் ஹேமா...

``ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கு இது 41-வது வருஷம். அதன் வீச்சை சர்வதேச அளவில் முரளியும் நானும் விரிவுபடுத்திட்டிருக்கோம். மிகச்சரியான பாதையில் போயிட்டிருக்கோம்!” - உறுதியும் கம்பீரமுமாகச் சொல்கிறார், சி.இ.ஓ ஹேமா ருக்மணி!

தேடல் இருந்தால் ஜெயிக்கலாம்!

வெளிநாட்டுல ஷூட்டிங் நடக்கும்போது தன்னோட போர்ஷன் முடிஞ்சதும், விஜய் சார் அப்படியே அங்கே சும்மா ஒரு வாக் போக ஆரம்பிச்சுடுவார். ஷூட்டிங் பிரேக்கில் சில நேரங்கள்ல தோள் மேல இருக்கிற துண்டை விரிச்சுப்போட்டு தரையில் அவர் படுக்கிறதைப் பார்க்க எங்களுக்கெல்லாம் ஆச்சர்யமா இருக்கும்.

தேடல் இருந்தால் ஜெயிக்கலாம்!

காஜல் அகர்வாலுக்கு வெளிநாடுகளில் வித்தியாசமான இடங்களைச் சுத்திப் பார்க்கிறது ரொம்பப் பிடிக்கும். அவங்களும் நானும் சேர்ந்து நிறைய சைட் சீயிங், போட்டிங்னு என்ஜாய் செய்தோம்.

தேடல் இருந்தால் ஜெயிக்கலாம்!

நித்யா மேனன் எங்களோடு உட்கார்ந்து குழந்தைமாதிரி பேசிட்டிருப்பாங்க. ஆனா, ‘ஷாட் ரெடி’னு சொன்னதும் ‘வாவ்’னு சொல்ற மாதிரி நடிச்சுட்டு வந்துடுவாங்க.

தேடல் இருந்தால் ஜெயிக்கலாம்!

போலந்து, மார்ச டோனியா, பிரான்ஸ், நெதர்லாந்துனு நாலு நாடுகள்ல பெரும்பாலான காட்சிகளை ஷூட் செய் திருக்கோம்.

தேடல் இருந்தால் ஜெயிக்கலாம்!

காமெடி, சென்டிமென்ட்ல கலக்கின வடிவேலு - கோவை சரளா ஜோடி, இந்தப் படத்திலும் ரசிகர்களை உருக வைக்கப் போறாங்க. தயாரிப்புப் பணிகளில் என்ன டென்ஷன்னாலும் இவங்ககூட கொஞ்ச நேரம் பேசினா போதும்... எல்லாத்தையும் மறக்க வெச்சு கலகலப்பாக்கிடுவாங்க.

தேடல் இருந்தால் ஜெயிக்கலாம்!

வடிவேல் சார், வெளிநாட்டு ஷூட்டிங் நேரங்களில் நம்மூர் சாப்பாடு கிடைக்காம ரொம்பவே சிரமப்பட்டார். ‘கஞ்சி, கூழ், மோர், வெங்காயம் கிடைக்காதா? இருந்தா எனக்கு அதையே கொடுங்கய்யா. இந்த வெளிநாட்டுச் சாப்பாடெல்லாம் மதுரக்காரனுக்கு வேண்டாம்’னு கேட்டுட்டே இருப்பார். அப்புறம் அவருக்கு ரெண்டு இந்தியர்கள் சமைச்சுக் கொண்டுவந்து கொடுக்க, வடிவேல் சார் ரொம்ப எமோஷனலாகிட்டார்.

``கற்றதும் பெற்றதும்!”

சினிமா என்ற கனவுத் தொழிற்சாலையின் பல அத்தியாயங்களைத் தன் மாமனாரிடமிருந்து கற்றுக்கொண்டதைப் பற்றி ஹேமா ருக்மணி கூறும்போது, ``மாமா, இடைவிடாம நூற்றுக்கும் அதிகமான ஹிட் படங்களை இயக்கினது, பெருசா தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே பக்தி மற்றும் பேய்ப்படங்களை இயக்கினது, தயாரிப்பாளராகவும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் படங்களை ரிலீஸ் செய்தும் வெற்றி பெற்றதுனு அவரோட திரைப்பயணங்கள் எல்லாமே எங்களுக்கு பாடங்களாகக் கிடைச்சது. அவரோட உழைப்பை நேரடியா பார்த்தது, ஸ்பெஷல் க்ளாஸ் மாதிரின்னு சொல்லலாம்’’
என்கிறார்.