Published:Updated:

மிஸ் தமிழ்!

மிஸ் தமிழ்!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ் தமிழ்!

புதிய தளம்எம்.ஆர்.ஷோபனா, படம்: சி.ரவிக்குமார் 

மிஸ் தமிழ்!

புதிய தளம்எம்.ஆர்.ஷோபனா, படம்: சி.ரவிக்குமார் 

Published:Updated:
மிஸ் தமிழ்!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ் தமிழ்!

பிற மாநிலப் பெண்கள் ஆதிக்கம் செலுத்திவரும் மாடலிங் உலகில், தமிழ்ப் பெண்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கச் செய்யும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது ‘உலகத் தமிழ் வம்சாவளி’ அமைப்பு. இதற்கான தளமாக ‘மிஸ் தமிழ் யுனிவர்ஸ்’ என்கிற போட்டி, வரும் ஜனவரியில் நடைபெறவுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ்ப் பெண்களுக்கான பொதுஅறிவு, திறமை, அழகு ஆகியவற்றின் அடிப்படையில், ‘மிஸ் தமிழ் சிங்கப்பூர்’, ‘மிஸ் தமிழ் மலேசியா’, ‘மிஸ் தமிழ் நார்வே’ போன்ற போட்டிகளின் தொடர்ச்சியாக தமிழகத்தில் வசிக்கும் தமிழ்ப் பெண்களுக்கான, ‘மிஸ் தமிழ்ச் சென்னை’ போட்டி, சென்னையின் ‘லீ ராயல் மெரிடியன்’ ஹோட்டலில் நடைபெற்றது.

மிஸ் தமிழ்!

இதன் ஒருகட்டமாக, ‘உலகத் தமிழ் வம்சாவளி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமாரிடம் பேசியதில், “ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள், ஜனவரி மாதத்தில் நடக்கும் ‘மிஸ் தமிழ் யுனிவர்ஸ்’ பட்டத்துக்குப் போட்டியிடுவார்கள். மாடலிங் துறையில் தமிழ்ப் பெண்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கான அடித்தளம்தான் இது” என்றார்.

அழகுப் பெண்கள் அனைவரும், மணமகள் தோற்றத்தில் மேடையில் நளின நடைபோட்டனர். அவர்களிடம் நடுவர்களில் ஒருவரான கவிஞர் சிநேகன், ‘பெண்களின் சுதந்திரம் தொடங்குவது வீட்டிலிருந்தா... வெளியிலிருந்தா?’ எனக் கேட்க, அனைவரின் பதிலுக்குப் பின்,   ‘மிஸ் தமிழ்ச் சென்னை’யாக காருண்யாவும், ரன்னராக ஸ்வேதாவும் தேர்வாகினர். 

‘மிஸ் தமிழ்ச் சென்னை’ காருண்யா, “எனக்குப் பூர்வீகம் தஞ்சாவூர். பாண்டிச்சேரியில் செகண்ட் இயர் மெடிக்கல் படிக்கிறேன். பிடிச்ச ஏரியா மாடலிங். அடுத்த டார்கெட் சினிமாதான்'' என க்ரிஸ்ப்பாகப் பேசினார்.
ரன்னர்-அப் ஸ்வேதா, “எனக்குச் சொந்த ஊர் வேலூர். தமிழிலும் மாடலிங்கிலும் விருப்பம் இருந்ததால்  கலந்துகிட்டேன்.  வெற்றி கிடைச்சது கூடுதல் மகிழ்ச்சி” என அழகாகக் கண்களைச் சிமிட்டினார்.

கங்கிராட்ஸ் பியூட்டீஸ்!  மன்னிக்க... வாழ்த்துகள் தமிழச்சிகளே!