Published:Updated:

கோவை ஜாலி டே.... தில்லு ப்ளஸ் லொள்ளு!

கோவை ஜாலி டே.... தில்லு ப்ளஸ் லொள்ளு!
பிரீமியம் ஸ்டோரி
கோவை ஜாலி டே.... தில்லு ப்ளஸ் லொள்ளு!

இரா.குருபிரசாத், தி.ஆதிரை படங்கள்: க.விக்னேஸ்வரன், ல.அகிலன்

கோவை ஜாலி டே.... தில்லு ப்ளஸ் லொள்ளு!

இரா.குருபிரசாத், தி.ஆதிரை படங்கள்: க.விக்னேஸ்வரன், ல.அகிலன்

Published:Updated:
கோவை ஜாலி டே.... தில்லு ப்ளஸ் லொள்ளு!
பிரீமியம் ஸ்டோரி
கோவை ஜாலி டே.... தில்லு ப்ளஸ் லொள்ளு!

வள் விகடன் மற்றும் ‘கோல்டு வின்னர்’ இணைந்து நடத்திய ‘ஜாலி டே’, பவர்டு பை அபிராமி அரிசி வகைகள்...

வாசகிகளுக்கு விருப்பமான இந்தத் திருவிழா கோயம்புத்தூரில் அக்டோபர் 7, 8 தேதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

முதல் நாள் முன்தேர்வுப் போட்டிகள் டாடாபாத்தில் உள்ள சிருஷ்டி மஹாலில் நடைபெற்றன. ‘அவள் விகடன்னா தில்லு, கோவைன்னா லொள்ளு’ என `லூட்டி'யும் `நாட்டி'யுமாகக் கல்லூரிப் பெண்கள் கலந்துகொள்ள, அவர்களுக்கு டஃப் ஃபைட் கொடுக்கிற அளவுக்கு ஹோம் மேக்கர்களும் சீனியர் பெண்மணிகளும் பங்கேற்றுக் கலக்கினர். நிகழ்வுக்கு வந்திருந்த அவள் வாசகியான ஆசிரியை ப்ரியாவை இன்ஸ்டன்ட் நிகழ்ச்சித் தொகுப்பாளராக்கி, நாம் சர்ப்ரைஸ் கொடுக்க, போட்டிகளைச் சீராக எடுத்துச்சென்றார் அவர். ‘நடனப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு என் டான்ஸ் ஸ்கூலில் இலவசமாக நடனம் கற்றுத்தருகிறேன்’ என நடுவர் களில் ஒருவரான விக்னா ஜான் அறிவிக்க, மேடை அடி தூளானது.

கோவை ஜாலி டே.... தில்லு ப்ளஸ் லொள்ளு!
கோவை ஜாலி டே.... தில்லு ப்ளஸ் லொள்ளு!

அடுப்பில்லாச் சமையல் போட்டியில் சிறுதானிய பிரியாணி வகைகள், இளநீர் ஷேக், நட்ஸ் லாலிபாப் என்று அறுசுவைகளில் அசத்திய தோழிகள், கோலப்போட்டியில் கலர்ஃபுல்லாகக் கலக்கினர். நடனம், பாடல், நடிப்பு, மெஹந்தி, செல்ஃபி என்று எல்லா போட்டிகளிலும் தெறிக்கவிட்டனர் கொங்கு லேடீஸ்.

இரண்டாம் நாள் ‘ஜாலி டே’ கொண்டாட்டம் காளப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. சின்னத்திரை ஸ்டார்கள் சுட்டி அரவிந்த் மற்றும் சித்ரா தொகுத்து வழங்க, வடிவேல் பாலாஜி மற்றும் அஸார் இணைந்து கலக்க, விழாவின் உற்சாகம் அன்லிமிடெட் ஆனது.அதைத் தொடர்ந்து, கோல்டு வின்னர் சார்பில் வைட்டமின் குறைபாடு குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பரிமளா விளக்கியதோடு, வாசகிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். கோல்டு வின்னர் மற்றும் அபிராமி அரிசி வகைகள் நிறுவனத்தினரின் விளம்பரங்களிலிருந்து கேட்கப் பட்ட கேள்விகளுக்கு வாசகிகள் அசத்தலாகப் பதிலளித்துப் பரிசுகளை அள்ளிச்சென்றனர்.

கோவை ஜாலி டே.... தில்லு ப்ளஸ் லொள்ளு!
கோவை ஜாலி டே.... தில்லு ப்ளஸ் லொள்ளு!

வடிவேலு பாலாஜி மற்றும் அரவிந்த்துக்கு கவுன்ட்டர் கொடுத்த ஜெயலட்சுமி பாட்டி கல்லூரிப் பெண்களுக்கு இணையாக நடனமாடி அமர்க்களம் செய்தது நிகழ்ச்சியின் ஹைலைட். 67 வயதாகும் ஜெயலட்சுமி அரை நூற்றாண்டு கால விகடன் வாசகி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் அரங்கம் ஆர்ப்பரித்தது.

‘ஜாலி டே’வில் கலந்துகொண்ட வாசகிகளுக்கு கோல்டு வின்னர் மற்றும் அபிராமி அரிசி வகைகள் நிறுவனத்தினரின் பொருள்கள் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்துத் தோழிகளுக்கும் கோல்டு வின்னர் சார்பில் 100 மில்லி ஆயில் பாக்கெட் இலவசமாக வழங்கப்பட்டது.

கோவை ஜாலி டே.... தில்லு ப்ளஸ் லொள்ளு!
கோவை ஜாலி டே.... தில்லு ப்ளஸ் லொள்ளு!

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கல்லூரி மாணவிகள் மற்று அவள் வாசகிகளுக்கு நடத்தப்பட்ட கோலம், ரங்கோலி, மெஹந்தி, பாட்டு மற்றும் SUNFI போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, கோல்டு வின்னர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருள்களை மகிழ்ச்சிப் பெருக்குடன் பெற்றுக்கொண்டனர் வாசகிகள்.

நிகழ்ச்சியின் க்ளை மாக்ஸ் நேரம். அவள் விகடனின் பம்பர் பரிசான ஃப்ரிட்ஜை பெறும் வெற்றியாளர் பெயர் அறிவிக்கப்பட, கரைபுரண்டோடிய களிப்புடன் வந்து பெற்றுக்கொண்டார் தனலட்சுமி.

கோவை ஜாலி டே.... தில்லு ப்ளஸ் லொள்ளு!

நிகழ்ச்சி முடிந்த தருணத்தில், ‘`எப்படி யிருந்தது ஜாலி டே?’’ என நாம் ஃபீட்பேக் கேட்க, “அடுத்த ஜாலி டே எப்போ வரும்?” எனக் கேள்வியாலேயே பதிலைச் சொன்னார்கள் ஸ்வீட் தோழிகள்!