Published:Updated:

பிளாக் பிரின்ட்டிங் - கற்பனை வளமுள்ளவர்களுக்கு உகந்த பிசினஸ்

பிளாக் பிரின்ட்டிங் - கற்பனை வளமுள்ளவர்களுக்கு உகந்த பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
பிளாக் பிரின்ட்டிங் - கற்பனை வளமுள்ளவர்களுக்கு உகந்த பிசினஸ்

வீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள்சாஹா, படங்கள்: தே.அசோக்குமார்

பிளாக் பிரின்ட்டிங் - கற்பனை வளமுள்ளவர்களுக்கு உகந்த பிசினஸ்

வீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள்சாஹா, படங்கள்: தே.அசோக்குமார்

Published:Updated:
பிளாக் பிரின்ட்டிங் - கற்பனை வளமுள்ளவர்களுக்கு உகந்த பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
பிளாக் பிரின்ட்டிங் - கற்பனை வளமுள்ளவர்களுக்கு உகந்த பிசினஸ்

ழகான காட்டனைப் பேரழகாக்குகிறது பிளாக் பிரின்ட்டிங் என்கிற கலை. சில நூறு ரூபாய் மதிப்புள்ள சேலையில், அச்சுகளில் நிறம் சேர்த்துப் பதித்து டிசைன்கள் உருவாக்கும்போது, சில ஆயிரங்களாக மதிப்பு கூடுகிறது. அதுதான் பிளாக் பிரின்ட்டிங் தொழில் நுட்பத்தின் சிறப்பு. திருவள்ளூரில் ‘மைத்ரி’ என்கிற பெயரில் பிளாக் பிரின்ட்டிங் யூனிட் நடத்தும் அருணா விஜயகுமார், பிசினஸ் தெரிந்த, தெரியாத பெண்களுக்கெல்லாம் உதாரண மனுஷி.

பிளாக் பிரின்ட்டிங் - கற்பனை வளமுள்ளவர்களுக்கு உகந்த பிசினஸ்

‘`அதிகம் படிக்கலை. கல்யாணமாகிற வரைக்கும் சென்னை பக்கம் வந்ததில்லை. நாங்க இருக்கவே இடம் பத்தாத நிலையிலேயும், அதிலேயே கொஞ்சம் இடத்தை ஒதுக்கிச் சின்னதா டேபிள் போட்டு, பிளாக் கட்டைகளை வெச்சுக்கிட்டு பிரின்ட்டிங் பண்ணிட்டிருந்தோம். என் கணவர் விஜயகுமாருக்குக்  கூடமாட உதவிகள் செய்வேன். அப்போ அவர் பண்றதைக் கவனிப்பேன். ஒருமுறை  அவர் வெளியில டெலிவரி கொடுக்கப் போயிருந்தபோது, சும்மா இருந்த நேரத்துல நானே என் கற்பனைப்படி சில டிசைன்களைச் செய்து வெச்சிருந்தேன். அதைப் பார்த்துட்டு என் கணவர் பாராட்டினார். அந்த டிசைனைப் பார்த்துட்டு அதே மாதிரி வேணும்னு நிறைய பேர் ஆர்டர் கொடுத்தாங்க. அதுலேருந்து டிசைன் டிபார்ட்மென்ட் என்னுடையதாயிடுச்சு. அப்பல்லாம் எனக்குத் தமிழ் பேசத் தெரியாது. வர்ற கஸ்டமர்ஸ்கிட்ட தெலுங்குலேயே பேசுவேன். அவங்க விருப்பத்தை டிசைன்களா வரைஞ்சு காட்டிப் புரிஞ்சுப்பேன். இன்னிக்கு என்னால சரளமா தமிழ் பேச முடியுது. பத்து பேரை வேலைக்கு வெச்சு தனியா ஒரு யூனிட்டே நடத்தற அளவுக்குத் தன்னம்பிக்கை வந்திருக்கு. ஆர்வம் இருந்தா மொழியை மட்டுமில்லை, எதையும் கத்துக்கலாம்’’ -  அழகான அறிமுகம் சொல்கிற அருணா, அவரைப் போலவே ஆர்வமுள்ளோருக்கு  பிளாக் பிரின்ட்டிங் தொழிலின் நுட்பங்களைக் கற்றுத் தர ஆர்வமாக இருக்கிறார்.

பிளாக் பிரின்ட்டிங் - கற்பனை வளமுள்ளவர்களுக்கு உகந்த பிசினஸ்

``முன்னெல்லாம் காட்டன் சேலைகள்ல மட்டும் பிளாக் பிரின்ட்டிங் பண்ணிட்டிருந்தோம். இப்போ உப்படா சில்க், டஸ்ஸர் சில்க்,  சந்தேரி சில்க், சில்க் காட்டன், ஜூட் சில்க்,  காட்டன், ஷிஃபான், கிரேப், கோட்டானு எல்லா மெட்டீரியல்கள்லயும் பண்ண முடியும். அஞ்சு கலர் காம்பினேஷன் வரைக்கும் பண்றேன். டார்க் கலர், மெட்டாலிக் சில்வர், கோல்டு கலர்களும் கொடுக்கலாம். டிசைன்களிலும் நிறைய மாற்றங்கள் வந்திருக்கு. சாதாரண காட்டன் சேலையை காலேஜுக்கோ, வேலைக்கோ போறவங்க உடுத்திக்கிற மாதிரி சிம்பிள் டிசைன்ஸ் கொடுத்தும் அழகாக்கலாம். பெரிய டிசைன்கள், கோல்டு, சில்வர் காம்பினேஷன் கொடுத்து விசேஷங்களுக்கு உடுத்தற மாதிரி ஆடம்பரமாகவும் மாத்தலாம்...’’ என்கிற அருணா, கற்பனை வளமுள்ள யாரும் துணிந்து இந்தத் தொழிலில் இறங்க நம்பிக்கை தருகிறார்.

இந்தத் தொழிலுக்கு பிளாக்ஸ்தான் முக்கியம்.  இவை 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கிடைக்குமாம்.  இது ஒருமுறை மட்டுமே செய்கிற முதலீடு. ஒருமுறை வாங்கும் பிளாக்ஸை வைத்தே பிசினஸைத் தொடரலாம். பிரின்ட்டிங் செய்ய டேபிள் தேவை. சிறிய அளவில் யூனிட் அமைக்க 25 ஆயிரம் ரூபாய் முதலீடு போதும். இரண்டே மாதங்களில் அந்த முதலீட்டை லாபத்துடன் திரும்ப எடுத்து விட முடியுமாம். சல்வார், டாப்ஸ், பைகள், படுக்கை விரிப்பு, தலையணை உறை என எதிலும் பிளாக் பிரின்ட்டிங் செய்ய முடியும் என்பது சிறப்பு.

‘`200 சதவிகிதம் லாபம் பார்க்கலாம். குறைஞ்சது மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கிறதுக்கு இந்தத் தொழில்ல உத்தரவாதம் உண்டு’’ - உறுதியாகச் சொல்பவரிடம் ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் ஒரே நாளில் பிளாக் பிரின்ட்டிங் கற்றுக்கொள்ளலாம்.